கஞ்சா அரேன்ஞ் பண்ண முடியுமா? அம்பலமான அனன்யா பாண்டே - ஆர்யன் கான் வாட்ஸ்அப் சாட்.. பரபரப்பு!
மும்பை: போதை பொருள் வழக்கில் கைதாகியுள்ள ஆர்யன் கானும் நடிகை அனன்யா பாண்டேவும் கஞ்சா குறித்து வாட்ஸ் அப்பில் சாட் செய்தது தெரியவந்துள்ளது.
பாலிவுட் சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகர் ஆர்யன் கான். கடந்த 2ஆம் தேதி மும்பையில் இருந்து கோவா புறப்பட்ட எம்ப்ரஸ் சொகுசு கப்பலில் போதை பார்ட்டி நடப்பதாக போதை பொருள் தடுப்பு பிரிவினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து கப்பலில் பயணிகளை போல சென்ற போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் போதை பார்ட்டியில் பங்கேற்றவர்களை கையும் களவுமாக பிடித்தனர். இதில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கானும் அடங்குவார்.

ஜாமீன் மறுப்பு - தொடரும் சிறை
இதனை தொடர்ந்து ஆர்யன் கானிடம் 20 மணிநேரம் விசாரணை நடத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் அவர் போதை பொருள் பயன்படுத்தியதாக கூறி கைது செய்தனர். ஆர்யன் கான் மும்பை ஆர்த்தர் சாலை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவருக்கு இதுவரை இரண்டு முறை பெயில் மறுக்கப்பட்டுவிட்டது. மும்பை சிறப்பு கோர்ட் இவருக்கு பெயில் மறுத்துள்ள நிலையில், மும்பை உயர் நீதிமன்றத்தில் இவரின் பெயில் மனு வரும் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வருகிறது.

அனன்யா பாண்டே வீட்டில் ரெய்டு
இந்நிலையில் பாலிவுட்டின் இளம் நடிகையான அனன்யா பாண்டே மற்றும் ஆர்யன் கான் வாட்ஸ் அப்பில் கஞ்சா போதை பொருள் குறித்து சாட் செய்தது தெரியவந்துள்ளது. ஆர்யன் கானின் போனில் இருந்து கைப்பற்ற வாட்ஸ் அப் உரையாடல்களின் அடிப்படையில் நடிகை அனன்யா பாண்டேவின் பாந்த்ரா வீட்டில் போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

வாட்ஸ் அப்பில் பேசியது என்ன?
இதனை தொடர்ந்து நடிகை அனன்யா பாண்டேவை விசாரணைக்கு அழைத்த போதை பொருள் தடுப்பு போலீசார் அவரிடம் 2 மணி நேரம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். விசாரணை முடிந்த நிலையில் வாட்ஸ் அப்பில் அவர்கள் இருவரும் பேசிக் கொண்டது என்ன என்பது குறித்து போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் வெளியிட்டுள்ளனர்.

கஞ்சா ஏற்பாடு செய்ய முடியுமா?
அதன்படி ஆர்யன் கான், அனன்யா பாண்டேவிடம் கஞ்சா ஏற்பாடு செய்ய முடியுமா? என கேட்கிறார். அதற்கு அனன்யா பாண்டே தான் ஏற்பாடு செய்வதாக பதில் அளித்துள்ளார். ஆனால் விசாரணையில் அது ஒரு ஜோக், வேறு எதுவும் இல்லை என்று கூறியுள்ளார் அனன்யா பாண்டே. அனன்யா பாண்டே வீட்டில் சோதனை நடத்திய அதிகாரிகள் போன்கள், லேப்டாப் உள்ளிட்ட சில எலக்ட்ரானிக் பொருட்களை கைப்பற்றினர்.
Recommended Video

விஜய் தேவரகொண்டாவுடன்
நடிகை அனன்யா பாண்டே 2019 இல் வெளியான ஸ்டூடண்ட் ஆஃப் தி இயர் 2 படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானார். இவரது தந்தை சங்கி பாண்டே இந்தியின் பிரபல நடிகர். தற்போது லிகர் படத்தில் விஜய் தேவகொண்டாவுடன் அனன்யா பாண்டே நடித்து வருகிறார். இந்தப் படத்தை பிரபல இயக்குநர் பூரி ஜெகன்நாத் தெலுங்கு, மற்றும் இந்தியில் இந்தப் படத்தை எடுத்து வருகிறார்.


Click it and Unblock the Notifications











