உறுதியான அட்லீ – ஷாருக்கான் படம்...டீசர் இந்த முக்கிய நாளிலா
மும்பை : தமிழ் சினிமாவின் ஹிட் பட டைரக்டர்களில் ஒருவர் என பெயர் வாங்கியவர் டைரக்டர் அட்லீ. ஆர்யா, நயன்தாரா நடித்த ராஜா ராணி படத்தை இயக்கி டைரக்டராக அறிமுகமான அட்லீ, பிறகு விஜய்யை வைத்து தெறி, பிகில், மெர்சல் என வரிசையாக ஹிட் படங்களை கொடுத்தார்.
தமிழில் வெற்றிக்கொடி நாட்டிய அட்லீ, தற்போது பாலிவுட் பக்கம் சென்றுள்ளார். இவர் ஷாருக்கானை வைத்து படம் இயக்க போவதாக கடந்த ஓராண்டிற்கும் மேலாக பேசப்பட்டு வருகிறது. ஆனால் நீண்ட காலம் ஆகியும் படம் பற்றிய எந்த அறிவிப்பும் வராததால், இந்த படம் கைவிடப்பட்டதாக தகவல் பரவியது.

ஓராண்டாக ப்ரீ ப்ரொடக்ஷன்
இந்நிலையில் இந்த படம் உறுதியாகி விட்டதாக சமீபத்தில் அட்லீ அறிவித்தார். ஓராண்டிற்கும் மேலாக ப்ரீ ப்ரொடக்ஷன் வேலைகள் நடந்து வந்ததாக கூறினார். முன்னதாக 2 ஆண்டுகள் அட்லீயும், ஷாருக்கானும் இந்த படம் பற்றிய கதையை தீவிரமாக ஆலோசித்து வந்தனராம். தற்போது ஷாருக்கான் நடிக்கும் பதான் படத்தின் வேலைகள் முடிந்ததும், அட்லீ உடனான படத்தில் ஷாருக்கான் நடிப்பார் என கூறப்பட்டது.

ஷாருக்கானுக்கு ஜோடி நயன்தாரா
அதைத் தொடர்ந்து இந்த படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக கோலிவுட்டின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பதாக கூறப்பட்டு, பிறகு அதுவும் உறுதி செய்யப்பட்டது. நயன்தாரா ஏற்கனவே அட்லீ இயக்கிய ராஜா ராணி, பிகில் படங்களில் நடித்துள்ளார். இதனால் அட்லீ கேட்டதும் ஷாருக்கிற்கு ஜோடியாக நடிக்க ஓகே சொல்லி விட்டாராம். இந்த படத்தின் மூலம் நயன்தாரா பாலிவுட்டில் அடியெடுத்து வைக்க உள்ளார்.

இந்த நாளில் டீசர் ரிலீசா
இந்நிலையில் லேட்டஸ்ட் தகவலாக இந்த படத்தின் டீசர் ஆகஸ்ட் 15 அன்று வெளியிடப்பட உள்ளதாம். சமீபத்தில் தான் ஷாருக்கான் மற்றும் நயன்தாராவை வைத்து ஆரம்பகட்ட ஃபோட்டோஷுட்டை நடத்தி முடித்துள்ளார் அட்லீ. இப்போது ஆகஸ்ட் 15 ல் டீசரை வெளியிட்டு, அன்றே படத்தின் ஷுட்டிங்கை துவக்கி விடவும் உள்ளனர்.

மிரட்டலாக வர போகும் டீசர்
மாஸாக, மிரட்டலாக இந்த படத்தின் டீசர் உருவாக்கப்பட்டுள்ளதாம். பான் இந்தியன் படமாக உருவாக்கப்பட உள்ள இந்த படத்தில் ஷாருக்கான் இரட்டை வேடங்களில் நடிப்பதால் கூடுதல் ஆக்ஷன் காட்சிகள் இடம்பெற உள்ளதால் அவற்றை காட்டும் படியாக டீசர் உருவாக்கப்பட்டு, தயாராக உள்ளதாக கூறப்படுகிறது.

ஷாருக்கிற்கு இசையமைக்கும் இசைப்புயல்
இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க உள்ளார். செப்டம்பர் மாதம் துபாயில், இந்த படத்திற்கான இசையமைப்பு பணிகளை ரஹ்மான் துவங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது பொன்னியின் செல்வன் படத்திற்கு இசையமைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருவதால் இதை முடித்த பிறகு ஷாருக்கான் படத்திற்கு இசையமைக்க போகிறாராம்.

உளவுத்துறை அதிகாரியாக ஷாருக்
ஷாருக்கான் தற்போது, டைரக்டர் சித்தார்த் ஆனந்த் இயக்கும் பதான் படத்தில் நடித்து வருகிறார். விரைவில் இந்த படத்தின் ஷுட்டிங் நிறைவடைய உள்ளதாம். பதான் படமும் ஆக்ஷன் படம் தான். ஷாருக்கான் அடுத்து நடிக்க உள்ள ஷாருக்கான் படமும் ஆக்ஷன், த்ரில்லர் கதை தானாம். இரட்டை வேடங்களில் ஒரு கேரக்டர், உளவுத்துறை அதிகாரியாம்.

சல்மான் படத்தில் ஷாருக்
பதான் படத்துடன், சல்மான் கான் நடிக்கும் தி டைகர் படத்திலும் ஒரு காட்சியில் அவருடன் இணைந்து நடிக்க உள்ளாராம் ஷாருக்கான். அதே போல் ஷாருக்கான் நடிக்கும் பதான் படத்தில் ஒரு காட்சியில் சல்மான் கான் நடிக்க போகிறாராம்.


Click it and Unblock the Notifications











