பாகுபலி நடிகை மீது 200 கோடி ரூபாய் மோசடி புகார்… 7 மணி நேரம் விசாரணை… கலக்கத்தில் பாலிவுட்

டெல்லி: சுகேஷ் சந்திரசேகர் என்பவர் தொழிலதிபரை மிரட்டி 200 கோடி மோசடி செய்த வழக்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வழக்கில் பாலிவுட் நடிகை நோரா ஃபதேஹிக்கும் தொடர்பு இருப்பதாகக் கூறி டெல்லி போலீஸார் அவரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

பாகுபலி படத்தில் இடம்பெற்ற 'மனோகரி' என்ற பாடல் மூலம் பிரபலமானவர் பாலிவுட் நடிகை நோரா ஃபதேஹி.

அதிரவைத்த 200 கோடி மோசடி

அதிரவைத்த 200 கோடி மோசடி

பெங்களூருவைச் சேர்ந்த சுகேஷ் சந்திரசேகர் என்பவர், தொழிலதிபரை மிரட்டி 200 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. நாடு முழுவதும் புயலைக் கிளப்பிய இந்த விவகாரத்தில் சுகேஷ் சந்திரசேகர் கைது செய்யப்பட்டார். மேலும், சுகேஷ் சந்திரசேகர், அவரது மனைவி உள்ளிட்டோர் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவந்தது. இந்த வழக்கில் அமலாக்கத்துறை தாக்கல் செய்த துணை குற்றப்பத்திரிகையில் பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் பெயரையும் சேர்த்திருந்தது.

விலை உயர்ந்த பரிசுப் பொருட்கள்

விலை உயர்ந்த பரிசுப் பொருட்கள்

200 கோடி ரூபாய் மோசடி வழக்கில் நடிகை ஜாக்குலின் பெயரும் அடிபட்டது, இந்தி திரையுலகையே அதிரவைத்தது. இந்நிலையில், தொழிலதிபரிடம் இருந்து மோசடி செய்த பணத்தில், பாலிவுட் நடிகை ஜாக்குலினுக்கு விலை உயர்ந்த பரிசுப் பொருட்களை வாங்கி கொடுத்துள்ளதாக அமலாக்கத்துறையின் குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டிருந்தது. இதனால், 200 கோடி ரூபாய் மோசடி வழக்கு இன்னும் சூடு பிடித்தது.

நோரா ஃபதேஹிக்கும் தொடர்பு?

நோரா ஃபதேஹிக்கும் தொடர்பு?

இந்நிலையில், தற்போது பாலிவுட் நடிகை நோரா ஃபதேஹிக்கும் இந்த மோசடி வழக்கில் தொடர்புவுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து அவரிடம் டெல்லி பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர். வெள்ளிக்கிழமை அன்று தொடர்ச்சியாக 7 மணி நேரம் விசாரணை நடைபெற்ற நிலையில், 2-வது நாளாக மீண்டும் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதில், நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸுக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை என நோரா ஃபதேஹி தெரிவித்துள்ளார்.

சுகேஷ் சந்திரசேகரை தெரியாது

சுகேஷ் சந்திரசேகரை தெரியாது

நோரா ஃபதேஹிக்கும் பரிசுப் பொருட்கள் கொடுக்கப்பட்டுள்ளதாக டெல்லி பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால், இந்த வழக்கில் சுகேஷ் சந்திரசேகரின் பின்னணி எனக்குத் தெரியாது என நோரா ஃபதேஹி கூறியுள்ளார். மேலும், அவரது மனைவி தான் பல நிகழ்ச்சிகளில் என்னுடன் வந்து பேசியதாகவும் நோரா ஃபதேஹி தெரிவித்துள்ளார். பல மணி நேரமாக நடைபெற்ற விசாரணையில் அவரிடம் 50க்கும் அதிகமான கேள்விகள் கேட்கப்பட்டதாகத் தெரிகிறது. 200 கோடி ரூபாய் மோசடி வழக்கில் அடுத்தடுத்து பாலிவுட் நடிகைகள் சிக்கிவருவது, இந்தித் திரையுலகில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. நோரா ஃபதேஹி 'பாகுபலி' படத்தில் இடம்பெற்ற 'மனோகரி' பாடல் மூலம் பிரபலமானவர் என்பவர் குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X