கையில் பெரிய கட்டுடன்… படப்பிடிப்பை தொடரும் அபிஷேக்பச்சன் !
சென்னை : அபிஷேக் பச்சனுக்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டதை அடுத்து, மும்பையில் உள்ள லீலாவதி மருத்துவமனையில் சிக்சை பெற்று வந்தார்.
தற்போது, அபிஷேக் கையில் பெரிய கட்டுடன் ஒத்த செருப்பு சைஸ் 7 இந்தி ரீ மேக் படப்பிடிப்பில் தொடங்க சென்னை வந்துள்ளார்.
இந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

அமிதாப் பச்சன்
மூத்த நடிகரான அமிதாப் பச்சன் மற்றும் ஜெயா பச்சனின் மகன் அபிஷேக் பச்சன். இவர் 2000ம் ஆண்டு Refugee என்ற திரைப்படத்தின் மூலம் இந்தி திரைத்துறையில் தனது தடத்தை பதித்தார். இந்த திரைப்படம் இவருக்கு ஒரு நல்லத் தொடக்கத்தை கொடுத்தது. இதையடுதது ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தை பெற்றார்.

படப்பிடிப்பில் விபத்து
இந்நிலையில், ஒத்த செருப்பு இந்தியில் ரீமேக்காகி வருகிறது. இதில், பார்த்திபன் நடித்த கதாபாத்திரத்தில், நடிகர் அபிஷேக் பச்சன் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த வாரம் அபிஷேக் பச்சனுக்கு திடீரென கையில் சிறு காயம் ஏற்பட்டது. சிறு காயம் என நினைக்கப்பட்ட நிலையில் கையில் வீக்கம் ஏற்பட்டது. இதையடுத்து, மருத்துவமனைக்கு சென்ற போது தான் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது தெரியவந்தது.

அமிதாப்பச்சன் சந்தித்தார்
எலும்பு முறிவிக்கு சிறிய அறுவை சிகிச்சை செய்ய வேண்டி இருந்ததால் மும்பை சென்ற அபிஷேக் பச்சன், அங்குள்ள லீலாவதி மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அபிஷேக்கை, அவரது தந்தை அமிதாப் பச்சன் மற்றும் ஸ்வேதா பச்சன் நந்தா ஆகியோர் முக கவசம் அணிந்து வந்து நலம் விசாரித்தனர்.

ஐஸ்வர்யா ராய் சந்தித்தார்.
அபிஷேக் பச்சனின் மனைவி ஐஸ்வர்யா ராய் பச்சன், இயக்குனர் மணிரத்னம் இயக்கி வரும் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பிற்காக மத்திய பிரதேசம் சென்றிருந்தார். படப்பிடிப்பை முடித்து மும்பை திரும்பிய ஐஸ்வர்யா, மகளுடன் மருத்துவமனைக்கு சென்று தன்னுடைய கணவரை சந்தித்துள்ளார்.

கையில் கட்டுடன் அபிஷேக் பச்சன்
இந்நிலையில், அபிஷேக் பச்சன் கையில் பெரிய கட்டுடன் அடுத்த படத்திற்கான வேலையை மீண்டும் தொடங்குவதற்காக சென்னை திரும்பி உள்ளார். மேலும், அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தி, கையில் கட்டுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். மேலும், கடந்த புதன்கிழமை சென்னையில் நடந்த புதிய படத்தின் படப்பிடிப்பி போது விபத்தில் சிக்கினேன். எனது வலது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அதை சரிசெய்ய அறுவை சிகிச்சை தேவைபட்டதால், மும்பைக்கு சென்று அறுவை சிகிச்சை செய்தேன். தற்போது, படப்பிடிப்புக்காக சென்னை திரும்பு உள்ளேன் கூறியுள்ளார். மேலும், என் தந்தை வலி இல்லாமல் எதையும் அடையமுடியாது என்று கூறினார் என்று அந்த பதிவில் அபிஷேக் பச்சன் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

பாப் பிஸ்வாஸ் படத்தில்
அபிஷேக் பச்சன் தற்போது பாப் பிஸ்வாஸ் என்ற படத்தில் நடித்து வருகிறார். 2012ம் ஆண்டு வித்யாபாலன் நடிப்பில் வெளியான கஹானி திரைப்படத்தில் நடித்த சித்ராங்தா சிங் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில நடிக்கிறார். மேலும் அபிஷேக் பச்சன் தாஸ்வி என்ற படத்தில் படிக்காத அரசியல்வாதியாக நடிக்கிறார். இந்த படத்தில் பச்சனுடன் யாமி கௌதம் மற்றும் நிம்ரத் கவுர் ஆகியோரும் நடிக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











