Don't Miss!
- Sports
அடுத்த விக்கெட்டும் காலி.. ஆஸி,டெஸ்ட் தொடரில் இந்தியாவுக்கு பெரும் அடி.. என்ன செய்யப்போகிறார் ரோகித்
- Lifestyle
உங்களுக்கு இந்த கலர்ல சிறுநீர் வருதா? அது புற்றுநோயோட அறிகுறியா கூட இருக்கலாமாம்...ஜாக்கிரதை!
- News
செயற்கை வைரங்களை உருவாக்க புதிய திட்டம்.. சுங்க வரியும் குறைக்கப்படும்.. நிர்மலா சீதாராமன் அறிவிப்பு
- Finance
இயற்கை விவசாயத்தினை மேம்படுத்த பல திட்டங்கள்.. விவசாய ஸ்டார்ட்அப்-களுக்கு சலுகை அளிக்க திட்டம்!
- Technology
மலிவு விலையில் 28 நாட்கள் வேலிடிட்டி உடன் புதிய திட்டத்தை அறிமுகம் செய்து அதிரடி காட்டிய Vodafone Idea!
- Automobiles
இந்த மாதிரி டபுள்-டக்கர் பேருந்து எல்லாம் வந்தா நம்ம சென்னை வேற லெவல் ஆயிடும்!! அதுவும் எலக்ட்ரிக் தரத்தில்...
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
‘ஐ மிஸ் யூ‘… அபிஷேக் பச்சன் போனை திருடி… பிரியங்கா சோப்ரா செய்த காரியம்!
மும்பை : அபிஷேக் பச்சனை பழிவாங்க அவரது போனை திருடியதாக பிரியங்கா சோப்ரா அளித்துள்ள பேட்டி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Recommended Video
பிரியங்கா சோப்ரா கடந்த 2000ம் ஆண்டு உலக அழகி பட்டம் வென்று அனைவரின் கவனத்தையும் பெற்றார்.
தமிழில் நடிகர் விஜய் உடன் தமிழன் என்ற திரைப்படத்தில் நடித்த பிரியங்கா பின்னர் பாலிவுட் படங்களில் நடித்து புகழ்பெற்றார்.
மிரட்டலான
போலீஸ்...
சிறப்பான
குடும்பத்தலைவன்...
6
வருடங்களை
கடந்த
சேதுபதி
டைம் ஊடகத்தின் உலகின் சக்தி வாய்ந்த 100 நபர்கள் மற்றும் போர்ப்ஸ் பத்திரிக்கையின் உலகின் சக்திவாய்ந்த 100 பெண்கள் பட்டியலிலும் பிரியங்கா சோப்ரா இடம் பிடித்து உள்ளார்.

பிரியங்கா சோப்ரா
தமிழில் பட வாய்ப்பு குறைந்ததை அடுத்து பாலிவுட்டிற்கு சென்ற பிரியங்கா பாலிவுட்டில் பல திரைப்படங்களில் நடித்தார், அனைத்துப்படங்களும் வெற்றி பெற்றதை அடுத்து பாலிவுட்டிலேயே செட்டிலாகி விட்டார். மேலும் இவர் நடித்த அனைத்து படங்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன. தற்போது பிரியங்கா சோப்ரா ஹாலிவுட், பாலிவுட், வெப் சீரிஸ் என பிஸியாக நடித்து உலகின் பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டு இருக்கிறார்.

காதல் திருமணம்
பிரியங்கா சோப்ரா பாப் பாடகர் நிக் ஜோனசை 2018ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவில் குடியேறிவிட்டார். நடிகை பிரியங்கா சோப்ரா நிக் ஜோன்ஸ் தம்பதியினர் வாடகைத் தாய் மூலம் ஒரு பெண் குழந்தையை பெற்றடுத்து உள்ளனர். இதற்கு பல திரைப்பிரபலங்களும் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

போஃனை திருடினார்
இந்நிலையில், பிரியங்கா சோப்ரா சில வருடங்களுக்கு முன், அளித்த பேட்டி ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அந்த போட்டியில், அபிஷேக் பச்சன் சுவாரசியமான பல தகவல்களை கூறியுள்ளார். அபிஷேக் சரியான பைத்தியம், ஒரு முறை அவர் என்னுடைய போனை திருடிவைத்துக்கொண்டு விளையாட்டு காட்டினார். நான் போஃன் திருடு போய்விட்டது என்று பதறிபோனேன், பின்பு தான் அபிஷேக் எடுத்துவைத்துக்கொண்டு விளையாடியது தெரியவந்தது.

ஐ மிஸ் யூ
இதையடுத்து, அபிஷேக்கை பழிவாங்க சரியான நேரத்தை எதிர்பார்த்துக்கொண்டு இருந்தேன், அவருடைய போனை திருடி, ஐ மிஸ் யூ, எங்கே இருக்கிறாய் என்ற மெசேஜை ஒரு நடிகைக்கு அனுப்பிவிட்டு போனை எடுத்த இடத்திலேயே வைத்துவிட்டு சென்றுவிட்டேன். அந்த நடிகை வேறு யாரும் இல்லை ப்ரீத்தி ஜிந்தா தான். அந்த மெசேஜை பார்த்து அதிர்ச்சியடைந்த ப்ரீத்தி ஜிந்தா, உங்களுக்கு என்ன ஆச்சு என்று பதில் அனுப்பியதாக பிரியங்கா சோப்ரா கூறியுள்ளார். அவர் அளித்த அந்த பேட்டி தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.