For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  கண்ணாடி முன் நின்று ஒரு கிளிக்... ரசிகர்களை கட்டிப் போட்ட வித்யாபாலன் !

  |

  மும்பை : பாலிவுட் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை வித்யா பாலனின் ஸ்டைலிஷ் லுக் போட்டோஷூட் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

  மேலும், மாடல் அழகி ஈஷா அகர்வால் வித்யா பாலனை வர்ணித்து கவிதைபாடி உள்ளார்.

  இன்ஸ்டாவில் ஆக்டிவாக இருக்கும் சிம்பு… 10 மாதத்திலேயே 3 மில்லியன் ஃபாலோயர்ஸ்!இன்ஸ்டாவில் ஆக்டிவாக இருக்கும் சிம்பு… 10 மாதத்திலேயே 3 மில்லியன் ஃபாலோயர்ஸ்!

  இந்த புகைப்படத்திற்கு வித்யாபாலன் தீவிர ரசிகர்கள் லைக்குகளை மலைபோல் குவித்து வருகின்றனர்.

  வித்யா பாலன் அறிமுகம்

  வித்யா பாலன் அறிமுகம்

  பாலிவுட் நடிகை வித்யா பாலன் பாலோ தேகோ என்ற வங்காள மொழி படத்தில் வாயிலான தனது திரைப்பயனத்தை தொடங்கினார். இந்த திரைப்படத்தை அடுத்து, பரிநீத்தா என்ற இந்தி திரைப்படத்தில் நடித்தார். இந்த திரைப்படத்தில் நடித்து அறிமுக நடிகைக்கான விருது மற்றும் சிறந்த நடிகைக்கான விருது என இரண்டு விருதுகளை வென்றார்.

  தேசிய விருது

  தேசிய விருது

  தென்னிந்தியாவின் கவர்ச்சி நாயகியான சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாற்று திரைப்படமான தி டர்ட்டி பிக்சர் என்ற படத்தில் மிகவும் அழகாக நடித்திருந்தார். இப்படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதை பெற்றார் வித்யாபாலன்.

  வித்யா பாலன் யு டிவி நிறுவன தலைவரும், திரைப்பட தயாரிப்பாளருமான சித்தார்த் ராயை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு கடந்த 2012ம் ஆண்டு டிசம்பர் மாதம் மும்பை, பாந்த்ரா பகுதியில் உள்ள ஒரு பங்களாவில் திருமணம் நடந்தது. வித்யா பாலன், பாலக்காட்டு தமிழ் குடும்பத்தை சேர்ந்தவர். சித்தார்த், பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர். இதனால், இவர்களது திருமணம், தென் மற்றும் வட மாநில கலாச்சார முறைப்படி நடந்தது.

  சகுந்தலா தேவி

  சகுந்தலா தேவி

  19-ம் நூற்றாண்டில் மனித கணினி என்றழைக்கப்பட்டவர் கணித மேதை சகுந்தலா தேவி. பள்ளிக்குக்கூடம் செல்லாத இவர் தன் அசாத்திய கணிதத் திறமையால் கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றார். சகுந்தலா தேவியின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு இயக்குநர் அனு மேனன் இயக்கத்தில் நடிகை வித்யா பாலன் நடித்த திரைப்படம் சகுந்தலா தேவி இத்திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகி பலரின் பாராட்டை பெற்றது.

  ஷெர்னி பாராட்டு

  ஷெர்னி பாராட்டு

  அமித் மசுர்கார் இயக்கத்தில் ஷரத் சக்சேனா, முகுல் சக்தா மற்றும் விஜய் ராஸ் ஆகியோரின் நடிப்பில் உருவான ஷெர்னி படத்தில் நேர்மையான வனத்துறை அதிகாரியாக வித்யாபாலன் நடித்திருந்தார். அமேசான் பிரைமில் வெளியான இத்திரைப்படம் விமர்சன ரீதியாக பலரின் பாராட்டுக்களை பெற்று வருகிறது. மேலும், ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் இந்தியத் திரைப்பட விழாவில், ஷெர்னி திரைப்படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதற்காக நடிகை வித்யா பாலன் சிறந்த நடிகைக்கான விருது வென்றிருக்கிறார்.

  இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் வித்யா பாலன், தனது இன்ஸ்டாகிராம் பதிவில் அலமாரி கண்ணாடி முன் மஞ்சள் நிறை சட்டை பேண்ட்டில் போஸ் கொடுத்துள்ளார். மேலும் இந்த படத்திற்கு தலைப்பாக Favourite weekend hangout: My closet என்று பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த மாடல் அழகி ஈஷா அகர்வால் அழகானவள் என்று வர்ணித்து மஞ்சள் நிற இதயத்தையும், சூரியாகாந்தி ஈமோஜியையும் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படத்திற்கு லைக்குகள் குவிந்து வருகின்றன.

  நேர்கொண்ட பார்வை

  நேர்கொண்ட பார்வை

  இயக்குனர் ஹச்வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து, போனி கபூர் தயாரித்த படம் நேர்கொண்ட பார்வை திரைப்படத்தில் அஜித்தின் மனைவியாக நடித்திருந்தார் வித்யாபாலன். ஒரு சில காட்சிகளில் மட்டுமே நடித்திருந்தாலும் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.

  English summary
  Vidya Balan poses in a yellow shirt pant set in front of her closet mirror in the latest Instagram post.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X