ஷாருக்கானை புறக்கணியுங்கள்...கொந்தளிக்கும் நெட்டிசன்கள்...என்ன காரணம்?
மும்பை : இன்று காலை முதலே ட்விட்டரில் ஷாருக்கானுக்கு எதிரான முழக்கங்கள் அதிகரித்துள்ளன. திடீரென Boycott Shahrukh khan என்ற ஹாஷ்டாக் ட்விட்டரில் டிரெண்டிங் ஆக்கப்பட்டது.
ஷாருக்கான் நடிப்பில், ரிலீசுக்கு தயாராகி வரும் பதான் படத்திற்கு எதிராக தான் இந்த முழக்கம். அரசியல் கட்சியை சேர்ந்த சிலர் தான் முதலில் இந்த முழக்கத்தை ட்விட்டரில் துவக்கினர். ஷாருக்கான், இந்து மத உணர்வுகளை தொடர்ந்து காயப்படுத்தி வருவதாக குற்றம்சாட்டினர். பலர் ஷாருக்கான் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயல்பட்டு வருவதாகவும் கூறினர்.

உடனடியாக ஷாருக்கான் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களை பாராட்டி பேசிய வீடியோக்கள், அந்த சம்பவம் தொடர்பான செய்திகள், ஃபோட்டோக்கள் ஆகியவற்றை ட்விட்டரில் பதிவிட்டனர். பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் தான் உலகத்திலேயே சிறந்த விளையாட்டு வீரர்கள் என்றும், பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் தான் சாம்பியன்கள் எனவும் ஷாருக்கான் பேசியது வைரலாகின. இதை அடிப்படையாக வைத்து பல தகவல்கள் பகிரப்பட்டு வருகின்றன.
அதோடு பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரரும், தற்போதைய பாகிஸ்தான் பிரதமருமான இம்ரான் கான் உடன் ஷாருக்கான் எடுத்துக் கொண்ட பழைய ஃபோட்டோக்களையும் பலர் பகிர்ந்ததால், அவைகள் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன. பாகிஸ்தான் வீரர்களுடன் ஷாருக்கான் எடுத்துக் கொண்ட ஃபோட்டோக்களும் வைரலாக்கப்பட்டு வருகின்றன.
அதே சமயம் ஷாருக்கானின் தீவிர ரசிகர்கள், ஷாருக்கானை புறக்கணிப்போம் என்ற ஹாஷ்டாக்கிற்கு போட்டியாக WeLoveShahRukhKhan, SRK PRIDE OF INDIA போன்ற ஹாஷ்டாக்குகளை உருவாக்கி டிரெண்டிங் ஆக்கி வருகின்றனர். அதோடு ஷாருக்கானின் நல்ல விஷயங்கள், சமூக சேவைகள் ஆகியவற்றையும் அவர்கள் பதிவிட்டு வருகின்றனர்.

ஷாருக்கான், இந்து அரசர் அசோகரை மோசமானவராக காட்டி நடித்துள்ளார். அஜய் தேவ்கனும், அக்ஷய் குமாரும் தன்ஹஜி, ப்ருத்விராஜ் சவ்கான் ஆகியோரின் வாழ்க்கை படங்களில் நடித்து வரும் போது, ஷாருக்கான் மட்டும் பதானை பற்றிய படத்தில் நடித்து வருகிறார். ஸ்பை ஆக்ஷன் படமான இந்த படத்திற்கு ஏன் இந்து பெயரை வைக்கவில்லை. இந்தியாவில் பதானை எதற்காக போற்ற வேண்டும் என பலர் கேள்வி எழுப்பி உள்ளனர்.
ஆக்ஷன் த்ரில்லர் படமான பதான் படத்தில் ஷாருக்கான், தீபிகா படுகோன், ஜான் ஆப்ரஹாம், டிம்பிள் கபாடியா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். கிட்டதட்ட 250 கோடி பட்ஜெட்டில் இந்த படம் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த படத்தில் சல்மான் கான் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். ஒய்ஆர்எஃப் தயாரித்துள்ள இந்த படத்தை சித்தார்த் ஆனந்த் இயக்கி உள்ளார்.


Click it and Unblock the Notifications











