முதலில் ஆபாச படம், இப்போ பண மோசடி வழக்கு... சிக்கி தவிக்கும் ஷில்பா ஷெட்டி, ராஜ் குந்த்ரா
மும்பை : பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ்குந்த்ரா ஆபாச படம் எடுத்த வழக்கில் ஜுலை மாதம் கைது செய்யப்பட்டார். கிட்டதட்ட மூன்று மாத சிறை தண்டனைக்கு பிறகு சமீபத்தில் தான் அவர் ஜாமினில் வெளியே வந்துள்ளார்.
ராஜ்குந்த்ரா மீது பாலிவுட் நடிகைகள் பலரும் அடுக்கடுக்காக குற்றம்சாட்டி வந்தனர். இருந்தும் ஷில்பா ஷெட்டி, கணவர் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து நெ்த பதிலும் அளிக்காமல், உண்மை நிச்சயம் விரைவில் வெளிவரும் என கூறி வந்தார்.

கோயிலில் ஃபோட்டோ
ஜாமினில் வெளி வந்த பிறகு வெளியில் தலை காட்டாமல் இருந்த ராஜ் குந்த்ரா, கடந்த வாரம் முதன் முதலில் இமாச்சல பிரதேசத்தில் உள்ள கோயிலுக்கு சென்றுள்ளனர். அப்போது முதல் முறையாக கோயில் முன் ஃபோட்டோ எடுத்துக் கொண்டனர். இந்த ஃபோட்டோ செம வைரலானது.

மீண்டும் ஆக்டிவான ஷில்பா
ராஜ்குந்த்ரா கைது செய்யப்பட்ட பிறகு ஷில்பா ஷெட்டி சோஷியல் மீடியா உள்ளிட்டவைகள் வராமல் ஒதுங்கி இருந்தார். சிறிது நாட்கள் வீட்டிலேயே முடங்கி இருந்த ஷில்பா ஷெட்டி பிறகு யோகா நிகழ்ச்சிகள் போன்ற பொது நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டார். சோஷியல் மீடியாக்களிலும் தான் விநாயகர் சதுர்த்தி போன்றவை கொண்டாடியது, ஃபோட்டோஷுட் நடத்தியது போன்ற ஃபோட்டோக்களை வெளியிட துவங்கினார்.

சோஷியல் மீடியாவிலிருந்து விலகல்
ஆபாச பட விவகாரத்தில் கைது செய்யப்பட்ட பிறகு , ஜாமினில் வந்த பிறகும் வெளியுலகில் இருந்து விலகி இருந்த ராஜ்குந்த்ரா, சமீபத்தில் ட்விட்டர், ஃபேஸ்புக் கணக்குகளை நீக்கினார். அடுத்தடுத்து பல சட்ட சிக்கல்களில் சிக்கி வரும் இந்த தம்பதி, தற்போது புதிய சட்ட பிரச்சனை ஒன்றில் சிக்கிக் கொண்டிருக்கின்றனர்.

மோசடி வழக்கு
இந்நிலையில் ஷில்பா ஷெட்டி மற்றும் ராஜ் குந்த்ரா மீது ரூ.1.51 கோடி ஏமாற்றியதாக மோசடி புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஷில்பா மற்றும் ராஜ் ஆகியோர் ஆரம்பித்த ஃபிட்னல் தொழிலுக்காக நாடு முழுவதும் பல முதலீட்டாளர்களிடம் பணம் வாங்கிக் கொண்டு ஏமாற்றியதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

மிரட்டிய தம்பதி
ஃபிட்னஸ் தொழில் துவங்குவதற்காக ஷில்பா தம்பதியிடம் அளித்த பணத்தை திருப்பி தராமல் அவர் ஏமாற்றுவதாகவும், பணத்தை திருப்பிக் கேட்ட போது அவர்கள் தன்னை மிரட்டுவதாகவும் ஷில்பா மீதும் அவரது கணவர் மீது புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











