திருமணத்திற்கு முன்பே வழக்கில் சிக்கிய கத்ரினா கைஃப்...அப்படி என்ன பிரச்சனை ?

மும்பை : பாலிவுட் பிரபலங்கள் கத்ரினா கைஃப், விக்கி கெளசலின் திருமணம் தான் கடந்த சில நாட்களாகவே பாலிவுட்டின் ஹாட் டாப்பிக்காக இருந்து வருகிறது. இவர்களின் திருமணத்தை பிரம்மாண்டமாக நடத்த ஏற்பாடுகள் நடந்து வருகிறதாம்.

திருமண ஏற்பாடுகள் பற்றிய தகவல்கள், திருமண விருந்தில் இடம்பெற போகும் மெனு என அடுத்தடுத்து பல தகவல்கள் வெளி வந்து கொண்டிருக்கிறது. சோஷியல் மீடியாவில் ரசிகர்கள் உள்ளிட்டோர் வாழ்த்துக்கள் கூறி வருகிறார்கள்.

மூன்று நாள் திருமணம்

மூன்று நாள் திருமணம்

கத்ரினா கைஃப் - விக்கி கெளசலின் திருமணம் மூன்று நாட்கள் நடத்தப்பட உள்ளது. டிசம்பர் 7 ம் தேதி சங்கீத்துடன் துவங்கிய திருமண விழாவில் மெகந்தி, திருமணம் உள்ளிட்டவைகள் நடத்தப்பட உள்ளது. டிசம்பர் 7 ம் தேதி துவங்கி டிசம்பர் 9 ம் தேதி வரை இந்த திருமண நிகழ்வுகள் நடத்தப்பட உள்ளது.

கோயில் பாதை மூடல்

கோயில் பாதை மூடல்

பிரம்மாண்ட திருமண நிகழ்விற்காக இந்த ஜோடி மும்பையில் இருந்து ராஜஸ்தான் புறப்பட்டு சென்றுள்ளது. ராஜஸ்தானில் உள்ள நூற்றாண்டு பழமையான சவாய் மதோபுர் செளத் மாதா கோயி அருகில் உள்ள Six Senses ஓட்டலில் தான் இந்த நட்சத்திர தம்பதியின் திருமணம் நடைபெற உள்ளது. இதற்காக ஓட்டல் மேனேஜர் சொன்னதால் கோயிலுக்கு செல்லும் பாதை மூடப்பட்டுள்ளதாம்.

புகார் அளித்த வழக்கறிஞர்

புகார் அளித்த வழக்கறிஞர்

இவர்களின் திருமண நிகழ்வை முன்னிட்டு இந்த கோயிலுக்கு செல்லும் பாதை மூடப்பட்டுள்ளதால் ராஜஸ்தானை சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் வழக்குப்பதிவு செய்துள்ளார். திருமணம் ஏற்பாடுகளை செய்து வருபவர்கள், கத்ரினா கைஃப், விக்கி கெளசல், மாவட்ட கலெக்டர் உள்ளிட்டோர் வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

பாதையை திறக்கனும்

பாதையை திறக்கனும்

தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் வந்து செல்லும் இந்த பழம்பெரும் கோயிலின் பாதை சினிமா பிரபலத்தின் திருமணத்திற்காக அடைக்கப்பட்டுள்ளதால், பக்தர்கள் கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். பக்தர்களின் கோரிக்கையை ஏற்று கோயில் பாதையை திறக்க அனுமதிக்க வேண்டும் எனவும் அவர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

திருமணத்தில் மாற்றம்

திருமணத்தில் மாற்றம்

மாவட்ட கலெக்டரின் கண்காணிப்பில் இருக்கும் இந்த கோயிலின் பாதை டிசம்பர் 6 ம் தேதி முதல் 12 ம் தேதி வரை மூடப்படுவதாக கூறப்பட்டுள்ளதாம். வழக்கறிஞரின் புகாரின் பேரில் இந்த திருமண விழாவில் குடும்பத்தினர்கள், நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்து கொள்வார்கள் என கூறப்பட்டுள்ளது. திரையுலகை சேர்ந்த பிரபலங்களுக்காக மும்பையில் மற்றொரு நாள் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளதாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X