twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இந்திய சினிமாவை இப்படிப் பதம் பார்த்த கொரோனா வைரஸ்.. லாக்டவுனால் இவ்வளவு கோடி நஷ்டமாகுமாமே?

    By
    |

    மும்பை: கொரோனா வைரஸ் பாலிவுட் பிசினஸை மொத்தமாக நசுக்கிவிட்டதாகக் கூறப்படுகிறது.

    Recommended Video

    லாக்டவுன் பற்றி அன்றே சொன்ன எம்.ஜி.ஆர்

    கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது. இதுவரை 38 லட்சத்துக்கும் அதிகமானோர் உலக அளவில் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    2 லட்சத்து 65 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். இந்தியாவிலும் இந்த வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    டீப் ஓபன்.. ஷார்ட் டாப்ஸ்.. மொத்தமாக காட்டி ஹாயாக போஸ் கொடுத்த யாஷிகா.. கிறங்கும் நெட்டிசன்ஸ்!டீப் ஓபன்.. ஷார்ட் டாப்ஸ்.. மொத்தமாக காட்டி ஹாயாக போஸ் கொடுத்த யாஷிகா.. கிறங்கும் நெட்டிசன்ஸ்!

    சினிமா படப்பிடிப்புகள்

    சினிமா படப்பிடிப்புகள்

    அதைத் தடுக்கும் நடவடிக்கைகளில் மத்திய மற்றும் மாநில அரசுகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. கொரோனா லாக்டவுன் காரணமாக சினிமா படப்பிடிப்புகள் ரத்து செய்யப் பட்டுள்ளன. இந்த வைரஸ், உலகின் மிகச் சிறந்த திரைப்படத்துறையான பாலிவுட்டை நசுங்கி விட்டது என்கிறார்கள் சினிமா வர்த்தக ஆய்வாளர்கள்.

    சூர்யவன்ஷி

    சூர்யவன்ஷி

    இந்த வருடத்தில் அதிக எதிர்பார்ப்புக்குள்ளான பாலிவுட் படங்களாக, அக்‌ஷய்குமாரின் பிரமாண்ட ஆக்‌ஷன் படமான சூர்யவன்ஷி, 1983 ஆம் அண்டு இந்திய கிரிக்கெட் அணி, உலகக் கோப்பை கிரிக்கெட்டை வென்றதை மையமாக வைத்து உருவாகியுள்ள '83' ஆகிய திரைப்படங்கள் இருந்தன. இந்த கொரோனா லாக்டவுன் இல்லை என்றால் இந்தப் படங்கள் இப்போது ரிலீஸ் ஆகி இருக்கும்.

    லாபகரமாக இருக்காது

    லாபகரமாக இருக்காது

    ஆனால், கொரோனாவால் மிகப்பெரிய இழப்பை இந்தப் படங்கள் சந்தித்துள்ளதாகச் சொல்கிறார்கள் பாலிவுட்டில். கொரோனா லாக்டவுன் முடிந்தாலும் தியேட்டருக்கு மக்கள் உடனடியாக வருவார்களா என்பது சந்தேகமே. சமூக இடைவெளியைப் பின்பற்றி, 50 சதவிகிதம் பேருடன் தியேட்டர்கள் திறக்கப்பட்டாலும் அது, படத்தின் பட்ஜெட்டுக்கு லாபகரமாக இருக்காது என்கிறார் பாலிவுட் சினிமா வர்த்தக ஆய்வாளர் கோமல் நேத்தா.

    ஒவர்சீஸ் மார்கெட்

    ஒவர்சீஸ் மார்கெட்

    இந்த வைரஸால், படப்பிடிப்புகள் ரத்து, ரிலீஸ் தள்ளி வைப்பு, தியேட்டர்கள் மூடல், ஆகியவற்றின் காரணமாக, 330 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான நஷ்டத்தை ( சுமார் 2 ஆயிரம் கோடி) இந்திய திரைப்படத்துறை சந்திக்கும் என்கிறார், அவர். இந்தியாவை பொறுத்தவரை உலகெங்கும் தியேட்டர்கள் திறக்கப்பட வேண்டும். அப்போது இந்திய திரைப்படங்கள் போட்ட பணத்தை எடுக்க முடியும். ஏனென்றால் ஒவர்சீஸ் மார்கெட் பெரிய வசூலைக் கொடுக்க கூடியது' என்கிறார் அவர்.

    English summary
    The pandemic has likely cost India's film industry more than $330 million in lost box office revenue
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X