Just In
- 17 min ago
என் வீட்டு கப்போர்டில் எலும்புக்கூடுகள் இல்லை.. நான் ஏன் பயப்பட வேண்டும்.. டாப்ஸி அதிரடி!
- 39 min ago
தங்கச் சிலையே தோற்றுப் போகும் அழகு…முன்னணி நடிகையை வர்ணிக்கும் ரசிகர்கள்!
- 51 min ago
தோட்டாக்களை தெறிக்க விட்டு தல அஜித்… துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்று சாதனை !
- 1 hr ago
பெண்களுக்கு சம உரிமை வழங்க வேண்டும்…. அருண்பாண்டியன் சிறப்பு பேட்டி
Don't Miss!
- News
வேடசந்தூர் யாருக்கு? மல்லுக்கட்டும் காங்.- உதயசூரியன் சின்னம் வரைந்து பிரசாரத்தில் குதித்த திமுக
- Education
UPSC 2021: ரூ.1.80 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை! யுபிஎஸ்சி அறிவிப்பு!!
- Finance
ஆன்லைனில் எப்படி ஆதார் முகவரி மாற்றம் செய்வது..!
- Sports
பெண்களுக்கு உயிரை சுமக்கும் வாய்ப்பை கடவுள் கொடுக்க காரணம்... விராட் கோலி சிலிர்ப்பு
- Lifestyle
யாரெல்லாம் பேரீச்சை பழம் சாப்பிடக்கூடாது தெரியுமா? இந்த நேரத்தில் பேரீச்சை சாப்பிடுவது நல்லதல்ல...!
- Automobiles
சிஎன்ஜி வெர்சனில் தயாராகும் ஸ்கோடா ரேபிட் செடான் கார்!! சோதனையில் இருப்பதாக தகவல்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
சென்னையில இருந்து இதையெல்லாம் வாங்காம வந்திடாதீங்க... ரன்வீர் சிங்குக்கு உத்தரவு போட்ட தீபிகா
சென்னை: சென்னையில் இருந்து இதையெல்லாம் வாங்காமல் வரவேண்டாம் என்று தனது கணவரும் நடிகருமான ரன்வீர் சிங்குக்கு நடிகை தீபிகா படுகோன் உத்தரவு போட்டது பரபரப்பாகி இருக்கிறது
கபில்தேவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, 1983 ஆம் ஆண்டு, முதல் முறையாக உலக கோப்பையை வென்று சாதனை படைத்தது. இதை மையமாக வைத்து '83' என்ற பெயரில் திரைப்படம் உருவாகிறது.
கபீர் கான் இயக்கும் இந்தப் படத்தில் ரன்வீர் சிங், கபில்தேவ் கேரக்டரில் நடிக்கிறார். மதன்லாலாக ஹர்டி சாந்து, கபில்தேவின் மனைவியாக தீபிகா படுகோன் நடிக்கின்றனர்.

ஶ்ரீகாந்தாக ஜீவா
சுனில் கவாஸ்கராக தஹிர் ராஜ் பாசின், சையது கிர்மானியாக சஹில் கட்டார் ஆகியோர் நடிக்கின்றனர். தமிழக வீரர் கிருஷ்ணமாச்சாரி ஶ்ரீகாந்தாக, ஜீவா நடிக்கிறார். இந்த படம் இந்தி, தெலுங்கு, தமிழ் என மூன்று மொழிகளில் உருவாகிறது. இந்தப் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடந்தது.

பர்ஸ்ட் லுக் போஸ்டர்
இதில் கபில்தேவ், ரன்வீர் சிங், இயக்குனர் கபீர்கான், கமல்ஹாசன் உட்பட பலர் கலந்துகொண்டனர். இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் கமல்ஹாசன் வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக வருவதற்கு முன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிரிக்கெட் டீம் புகைப்படத்தை பதிவிட்டிருந்தார் ரன்வீர் சிங் .

மைசூர் பாகு, சிப்ஸ்
இந்தப் போட்டோவுக்கு கீழே, அவர் மனைவியும் நடிகையுமான தீபிகா படுகோன் கமென்ட் போட்டிருந்தார். இந்த கமென்ட், ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.
தீபிகாவின் அந்த கமென்டில், 'சென்னையில் ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸில் இருந்து 1 கிலோ மைசூர் பாகு மற்றும் ஹாட் சிப்ஸ்ஸில் இருந்து உருளைக்கிழங்கு சிப்ஸ் இரண்டரை கிலோ. இது இல்லாமல் திரும்ப வேண்டாம் என்று குறிப்பிட்டிருந்தார்.

கபீர்கான் மனைவி
கணவருக்கு தீபிகா போட்ட இந்த உத்தரவு சமூக வலைதளங்களில் வைரலானது. தீபிகா தென்னிந்திய பொண்ணுங்கறதை நிரூபிச்சுட்டாங்கப்பா என்று ரசிகர் ஒருவர் கமென்ட் அடித்துள்ளார். தீபிகாவின் கமென்டை அடுத்து இயக்குனர் கபீர்கானின் மனைவி மினி மாத்தூரும், நீங்களும் இதை வாங்கிட்டு வர மறந்துடாதீங்க என்று குறிப்பிட்டிருந்தார். இதுவும் வைரலானது.