தீபிகா படுகோன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாரா...யாரு கிளப்பி விட்ட வதந்தி இது?

மும்பை : பாலிவுட் டாப் நடிகை தீபிகா படுகோனுக்கு படப்பிடிப்பில் திடீரென இதயதுடிப்பு அதிகரித்ததால், அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை அளிக்கப்பட்ட பிறகு அவர் நலமாக இருப்பதாக தகவல் பரவியது.

இதனால் பாலிவுட் மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்திய சினிமாவே பதறிப் போனது. அச்சச்சோ...தீபிகாவிற்கு என்ன ஆயிற்று. அவரது உடலுக்கு என்ன பிரச்சனை என ரசிகர்கள், மீடியாக்கள் என அனைவரும் பதறிப் போய் விசாரிக்க துவங்கி விட்டனர்.

 ஐதராபாத்தில் ஷுட்டிங்

ஐதராபாத்தில் ஷுட்டிங்

தீபிகா படுகோன் தற்போது நாக அஸ்வின் இயக்கும் படம் ஒன்றில் பிரபாசிற்கு ஜோடியாக நடித்து வருகிறார். தான் நடிக்கும் ஒவ்வொரு படமுமே பெஸ்டாக வர வேண்டும் என்பதற்காக கடின உழைப்பை தரக் கூடிய நடிகை. ஐதராபாத்தில் ஷுட்டிங்கில் நடித்துக் கொண்டிருந்த போது தான் தீபிகாவிற்கு இதயத்துடிப்பு அதிகரித்ததாக சொல்லப்பட்டது.

நான் நல்லா இருக்கேன்

நான் நல்லா இருக்கேன்

தான் நன்றாக இருப்பதாகவும், தனது உடல்நிலையில் எந்த பிரச்சனையும் இல்லை என தீபிகாவே தெளிவாக தெரிவித்துள்ளார். சொல்லப் போனால் தற்போது சுறுசுறுப்பாக படத்தின் ஷுட்டிங்கில் நடித்து வருகிறாராம். தன்னை பற்றி வெளியான தகவல்கள் வெறும் வதந்தி என அவரே சொல்லி உள்ளார்.

எப்படி கிளப்பி விட்டிருக்காங்க பாருங்க

எப்படி கிளப்பி விட்டிருக்காங்க பாருங்க

இது பற்றி தீபிகாவிடம் கேட்ட போது, நான் இது வரை பிரபாஸ் உடன் நடித்தது இல்லை. அதே போல் நாக் அஸ்வினுடனும் பணியாற்றியது கிடையாது. இந்த படத்தை இந்தியில் மட்டுமின்றி மற்ற மொழிகளிலும் நடித்து வருகிறேன். இது போன்ற பல விஷயங்களால் பதற்றமாக இருந்தேன். அதோடு இது VFX படம் என்பதால் பதற்றம் அதிகமாக இருந்தது. இதை தான் எனக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக வதந்தி கிளப்பி விட்டுள்ளனர் என்றார்.

நான்காவது முறையாக ஷாருக்கிற்கு ஜோடி

நான்காவது முறையாக ஷாருக்கிற்கு ஜோடி

இந்த படம் மட்டுமல்ல பதான் படத்தை தொடர்ந்து மற்றொரு படத்திலும் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிக்க தீபிகாவிடம் பேசப்பட்டு வருகிறதாம். ஓம் சாந்தி ஓம், சென்னை எக்ஸ்பிரஸ், ஹேப்பி நியூ இயர் படங்களைத் தொடர்ந்து தற்போது பதான் படத்தில் நான்காவது முறையாக ஷாருக்கானுடன் இணைந்து நடித்து வருகிறார்.

இத்தனை படங்களில் நடிக்கிறாரா

இத்தனை படங்களில் நடிக்கிறாரா

இந்திய படங்கள் மட்டுமின்றி இந்திய தழுவலான அமெரிக்கா காமெடி படமான The Intern படத்திலும் தீபிகா நடித்து வருகிறார். இதில் அமிதாப் பச்சனும் முக்கிய ரோலில் நடித்து வருகிறார். அதே சமயம் ஹிருத்திக் ரோஷனுடன் இணைந்து Fighter படத்திலும் நடித்து வருகிறார் தீபிகா.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X