என்னோட பிரச்சனையை அம்மா கண்டுபிடிக்கலைன்னா என்ன ஆயிருக்கும்.. திருவள்ளூரில் தீபிகா படுகோன் உருக்கம்!

சென்னை: பாலிவுட்டில் முன்னணி நடிகையான தீபிகா படுகோன் தற்போது ஷாருக்கானுடன் பதான் படத்தில் நடித்து வருகிறார்.

தீபிகா படுகோன் சில ஆண்டுகளுக்கு முன்னர், மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்ததாக கூறியுள்ளார்.

அதிலிருந்து அவரை மீட்டது அவரது அம்மா தான் எனவும், அதிலிருந்து மீண்டு வந்தது குறித்தும் மனம் திறந்து பேசியுள்ளார்.

அதிகரிக்கும் தற்கொலைகள்

அதிகரிக்கும் தற்கொலைகள்

மன அழுத்தம் இன்றைய சூழலில் மிகப்பெரிய பிரச்சனையாக மாறி உள்ளது. சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை செய்து கொண்டதே மன அழுத்தம் தான் காரணம் என்கின்றனர். இந்நிலையில், தீபிகா படுகோன் சில ஆண்டுகளுக்கு முன்னர் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்துகொள்ள முடிவு எடுத்ததாகவும், அதிலிருந்து மீட்டது அவரது அம்மா தான் எனவும் பேசியுள்ளார். பெங்களூருவில் லிவ் லவ் லாஃப் எனும் அமைப்பை தொடங்கிய தீபிகா படுகோன், தமிழ்நாட்டில் திருவள்ளூவர் மாவடத்திலும் அந்த அமைப்பை விரிவுப்படுத்த முடிவு செய்துள்ளார்.

தீராத மன அழுத்தம்

தீராத மன அழுத்தம்

அக்டோபர் 10ம் தேதி உலக மனநல தினத்தை முன்னிட்டு, லைவ் லவ் லாஃப் கிராமப்புற சமூக மனநலத் திட்டத்தை தீபிகா படுகோன் விரிவுப்படுத்தினார். அப்போது அவர் மன அழுத்தத்தில் இருந்து விடுபடுவது குறித்தும், அந்நேரம் நம்மை அக்கறையுடன் பார்த்துக் கொள்பவர்கள் பற்றியும் மனம் திறந்தார். என்னுடன் அம்மா எனது அறிகுறிகளை அடையாளம் காணவில்லை என்றால், நான் இன்று இந்த நிலையில் இருந்திருப்பேனா எனத் தெரியவில்லை எனக் கூறியுள்ளார். அந்தளவுக்கு தான் தீராத மன அழுத்தத்தில் இருந்ததாகவும் அவர் வெளிப்படையாக பேசியுள்ளார்.

சுற்றியிருப்பவர்கள் தான் ஆதரவு

சுற்றியிருப்பவர்கள் தான் ஆதரவு

மேலும், நான் மன அழுத்தத்தில் இருந்து மீண்டு வர என் அம்மாவும் குடும்பமும் முக்கியமான காரணம். அதனால்தான் என் அம்மா இங்கே இருக்கிறார், என் சகோதரி மிகவும் ஆர்வமாக இருக்கிறார். பல ஆண்டுகளாக அவர்கள் தான் என்னை பாதுகாத்து வருகின்றனர். ​​ மேலும் நம்மை பார்த்துக்கொள்பவர்களின் வாழ்க்கையும் ரொம்பவே முக்கியமானது. நம் மன அழுத்தம் அவர்களையும் பாதித்துவிடக் கூடாது என உருக்கமாக பேசினார்.

மருத்துவர்களுடன் ஆலோசனை

மருத்துவர்களுடன் ஆலோசனை

தொடர்ந்து பேசியுள்ள தீபிகா படுகோன், "அம்மா எனது அறிகுறிகளை கண்டுபிடிக்கவில்லை என்றால், நான் இன்று எந்த நிலையில் இருந்திருப்பேன் எனத் தெரியவில்லை. மருத்துவர்களையும் அடிக்கடி சந்தித்து ஆலோசனைகள் கேட்டு சிகிச்சை எடுத்துக் கொண்டேன் எனக் கூறியுள்ளார். 2015ம் ஆண்டில் மன அழுத்தத்துடன் போராடி அதிலிருந்து மீண்டவர் தீபிகா படுகோன். அதனால் லைவ் லவ் லாஃப் என்ற அறக்கட்டளையை திறந்து மன அழுத்தத்தில் இருப்பவர்களை மீட்கும் முயற்சியில் இறங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X