இரண்டாவது ஹாலிவுட் படத்திற்கு தயாராகும் தீபிகா... என்ன ரோல் தெரியுமா
மும்பை : பல ஆண்டுகளாக தொடர்ந்து பாலிவுட்டில் பிஸியாக இருக்கும் நடிகை என்றால் அது தீபிகா படுகோன் தான். தற்போது பாலிவுட்டை தாண்டி ஹாலிவுட்டிலும் கலக்க தயாராகி விட்டார்.

2017 ம் ஆண்டே XXX : Return of Xander Cage படத்தின் மூலம் ஹாலிவுட்டிற்குள் அடியெடுத்து வைத்து விட்டார் தீபிகா. தற்போது இரண்டாவதாக மற்றொரு ஹாலிவுட் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார் தீபிகா.
ரொமன்டிக் காமெடி படமாக உருவாக உள்ள இந்த படத்தில் நடிப்பதுடன் தயாரிக்கவும் செய்ய உள்ளாராம் தீபிகா. இந்த படத்தை STX films நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. நடிப்பதுடன் பட தயாரிப்பையும் மேற்கொண்டு வருகிறார். இதற்கு முன் சப்பக் என்ற படத்தை தானே தயாரித்து நடித்துள்ளார் தீபிகா.
இது பற்றி தீபிகா கூறுகையில், STX films தயாரிப்பில் இணைவதில் மகிழ்ச்சி. டெம்பிள் ஹில் ப்ரொடக்ஷன்ஸ் இணைந்து இந்த படத்தை தயாரிக்கின்றன. இவர்கள் ஏற்கனவே ஏற்கனவே கலாச்சார கலப்பிலான பல கதைகளை உலகிற்கு தந்து, மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளனர் என தெரிவித்தார்.
பிரியங்கா சோப்ராவை தொடர்ந்து இரண்டாவது பாலிவுட் நடிகையாக தீபிகாவும் ஹாலிவுட்டில் தடம் பதித்து வருகிறார். தீபிகா தற்போது பாலிவுட்டிலும் பல படங்களில் கமிட்டாகி பிஸியாக நடித்து வருகிறார்.
83, Fighter,ஷாருக்கானுடன் பதான் உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார். இதில் பதான் படத்திற்காக பிரம்மாண்ட பாடல் காட்சி ஒன்று படமாக்கப்பட உள்ளது. இதில் நடிப்பதற்காக ஷாருக்கானும், தீபிகாவும் விரைவில் ஸ்பெயின் செல்ல உள்ளனர். ஷாருக்கானுடன் மூன்றாவது முறையாக இணைந்து தீபிகா நடிக்கும் படம் இதுவாகும்.
பதான் படத்தின் வேலைகளை முடித்த பிறகு தான் ஷாருக்கான், டைரக்டர் அட்லி இயக்கும் படத்திலும், தீபிகா ஹாலிவுட் படத்திலும் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. பதான் படத்தின் படப்பிடிப்புக்கள் இறுதிக் கட்டத்தை எட்டி உள்ளதாக கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











