For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  என் நெஞ்சே வெடிக்குது.. எல்லாத்துக்கும் ஒரு எல்லை உண்டு.. மீடியாவை எச்சரித்த பிரபாஸ் பட நடிகை!

  |

  மும்பை: பிரபல பாலிவுட் ஹீரோயின் க்ரித்தி சனோன் மீடியாவை எச்சரித்து போட்ட போஸ்ட்டுக்கு ஆதரவும் எதிர்ப்பும் குவிந்து வருகிறது.

  பிக் பாஸ் டைட்டில் வின்னரும் பிரபல இந்தி டிவி நடிகருமான சித்தார்த் சுக்லாவின் இறுதி ஊர்வலத்தில் சில வட இந்திய மீடியாக்கள் செய்த அட்டகாசங்களின் வெளிப்பாடு தான் பிரபாஸ் பட நடிகை இந்த அளவுக்கு கோபப் பட காரணம்.

  பாரதி கண்ணம்மா வெண்பாவுக்கு வளைகாப்பு...பாரதியுடன் சென்று வாழ்த்திய கண்ணம்மாபாரதி கண்ணம்மா வெண்பாவுக்கு வளைகாப்பு...பாரதியுடன் சென்று வாழ்த்திய கண்ணம்மா

  இறுதிச்சடங்கையாவது நிம்மதியா நடத்த விடுங்க இதெல்லாம் செய்தியோ, பொழுதுபோக்கோ கிடையாது என நடிகை க்ரித்தி சனோன் நீண்ட அறிக்கை வெளியிட்டுள்ளார்.

  திடீர் மரணம்

  திடீர் மரணம்

  சல்மான் கான் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 13ல் போட்டியாளராக கலந்து கொண்ட பிரபல இந்தி டிவி நடிகர் சித்தார்த் சுக்லா அதன் டைட்டிலையும் வென்று மிகப்பெரிய ரசிகர் வட்டத்தை பெற்றார். பாலிவுட்டில் பெரிய பட வாய்ப்புகள் குவிய காத்திருந்த நிலையில், திடீரென நடிகர் சித்தார்த் சுக்லா மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். அவருக்கு வயது வெறும் 40 மட்டும் தான்.

  இறுதி சடங்கு

  இறுதி சடங்கு

  சித்தார்த் சுக்லாவின் உடல் கூப்பர் மருத்துவமனையில் இருந்து அவரது வீட்டுக்கு கொண்டு வரப்பட்டு இறுதி சடங்குகள் நடைபெற்ற நிலையில், ஏகப்பட்ட பாலிவுட் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் இறுதி சடங்கில் கலந்து கொண்டனர். அதிக அளவில் மீடியாக்களும் வழக்கம் போல பிரபலங்களின் இறப்பு நிகழ்ச்சியை கவர் செய்வது போல கவர் செய்து வந்தன.

  மீடியாவுக்கு எச்சரிக்கை

  மீடியாவுக்கு எச்சரிக்கை

  சமீபத்தில் வெளியான மிமி படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய நடிகை க்ரித்தி சனோன் அடுத்ததாக நடிகர் பிரபாஸின் ஆதிபுருஷ் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இந்நிலையில், தனது ட்விட்டர் பக்கத்தில் மீடியாவுக்கு எச்சரிக்கை கொடுக்கும் விதமாக அவர் பதிவிட்ட ட்வீட்டுக்கு பல பாலிவுட் பிரபலங்களும் ஆதரவு அளித்து வருகின்றனர்.

  செய்தியோ பொழுதுபோக்கோ அல்ல

  செய்தியோ பொழுதுபோக்கோ அல்ல

  நிம்மதியாக இறுதிச்சடங்கை கூட செய்ய விடாமல் நம்முடைய மீடியா நண்பர்கள் வளைத்து வளைத்து போட்டோக்களை எடுப்பதும் பேட்டி கேட்பதும் என் நெஞ்சையே வெடிக்க வைக்கிறது. இது செய்தியோ அல்லது பொழுதுபோக்கோ அல்ல என ஆவேசமாக கூறியுள்ளார்.

  இறுதிச்சடங்கை கவர் பண்ணாதீங்க

  இறுதிச்சடங்கை கவர் பண்ணாதீங்க

  எல்லாத்துக்கும் ஒரு எல்லை உண்டு. ஏதாவது ஒரு வரைமுறையை வகுத்து கொள்ளுங்கள் இனிமேலாவது இறுதிச்சடங்கை கவர் செய்வதை மீடியாக்கள் நிறுத்த வேண்டும். ஒருவர் இழந்த துயரத்தில் குடும்பத்தினர் வாடிக் கொண்டிருக்கும் போது இப்படி அத்துமீறக் கூடாது என கடுமையாகவே எச்சரித்துள்ளார் நடிகை க்ரித்தி சனோன்.

  அனைவருக்கும் சொந்தம்

  அனைவருக்கும் சொந்தம்

  நடிகை க்ரித்தி சனோனின் இந்த கருத்துக்கு எதிர்ப்பும் ஆதரவும் குவிந்து வருகிறது. பிரபலங்கள் பொது சொத்து என்றும் ஏதோ ஒரு மூலையில் இருக்கும் ரசிகரும் சித்தார்த் சுக்லாவின் இறுதிச்சடங்கை காண ஆசைப்படுவார். மீடியா அவர்கள் வேலையைத்தான் செய்கிறார்கள். எந்தவொரு விஷயம் நடந்தாலும் நடிகர்கள் நடிகைகள் கருத்து சொல்ல ட்வீட் போடுவது மட்டும் என்ன நியாயம், நீங்க மட்டும் பப்ளிசிட்டி தேடலாமா என்றும் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

  மீடியா வேலை

  மீடியா வேலை

  அது மீடியா வேலை அவர்கள் வேலையை அவர்கள் செய்கிறார்கள். நீங்கள் உங்கள் படங்களில் சினிமாவை சினிமாவாக மட்டும் காட்டாமல் காசு சம்பாதிக்க தேவையில்லாத பல கருத்துக்களையும் கவர்ச்சிகளையும் ஏன் திணிக்கிறீர்கள் என்றும் நெட்டிசன்கள் வெளுத்து வாங்கி வருகின்றனர்.

  பிரைவசி கொடுக்கணும்

  பிரைவசி கொடுக்கணும்

  துயரமான நேரங்களில் மீடியாக்கள் இப்படி பிரபலங்களை தொல்லை செய்யக் கூடாது. அவர்களுக்கு உரிய பிரைவசியை நிச்சயம் கொடுக்க வேண்டும் க்ரித்தி சனோனின் கருத்து சரியானது தான் என எதிர்ப்புகளும் ஆதரவுகளும் குவிந்து வருகின்றன.

  English summary
  Actress Kriti Sanon warns Media in her long Twitter post after Siddharth Shukla's funeral was covered by Media.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X