ஜாக்குலின் ஃபெர்னான்டசிற்கு அமலாக்கத்துறை மீண்டும் சம்மன்
மும்பை : பாலிவுட்டின் புகழ்பெற்ற நடிகையாக இருப்பவர் ஜாக்குலின் ஃபெர்னான்டஸ் மீது சுகேஷ் சந்திரசேகர் என்பவர் மோசடி புகார் அளித்திருந்தார். தன்னை மிரட்டி கோடிக்கணக்கில் பணம் பறித்ததாக ஜாக்குலின் மீது புகார் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து இலங்கை புறப்பட்டு செல்ல இருந்த ஜாக்குலின் விமான நிலையத்திலேயே தடுத்து நிறுத்தப்பட்டார். இந்தியாவை விட்டு அவர் வெளியேறக் கூடாது என உத்தரவிடப்பட்டது.
இந்நிலையில் விசாரணைக்கு ஆஜராகும் படி ஜாக்குலினுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது. டிசம்பர் 8 ம் தேதிக்கு முன் விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி சம்மனில் குறிப்பிடப்பட்டது. 36 வயதாகும் ஜாக்குலினிடம் வாக்குமூலம் பெற்றப்பட்டு, பதிவு செய்யப்பட உள்ளதாம்.

இதே வழக்கில் ஜாக்குலினுக்கு சம்மன் அனுப்பப்பட்டு, விசாரணை நடத்தப்படுவது இது மூன்றாவது முறையாகும். ஆனால் இந்த வழக்கில் ஜாக்குலின் குற்றம்சாட்டப்படவில்லை. சாட்சியமாகவே விசாரிக்க சம்மன் அனுப்பபப்பட்டுள்ளதாக அவரின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். இதுவரை நடத்தப்பட்ட விசாரணைகளில் ஆஜராகி அவர் தனது வாக்குமூலத்தை அளித்ததை போல், இனி வரும் காலங்களிலும் விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிப்பார் என்றும் கூறப்படுகிறது.
மஸ்கட் மற்றும் ஓமன் செல்ல இருந்த போது தான் ஜாக்குலினை அமலாக்கத்துறை தடுத்து நிறுத்தி உள்ளனர். ரூ.200 கோடி மோசடி செய்ததாக ஜாக்குலின் உள்ளிட்டோர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந்த வழக்கில் கடந்த வாரம் அமலாக்கத்துறை, கோர்ட்டில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது.
இந்த குற்றப்பத்திரிக்கையில் சந்திரசேகர், ஜாக்குலினுக்கு விலை உயர்ந்த பூனைகள், குதிரைகள் உள்ளிட்ட ஏராளமான காஸ்ட்லி பரிசுகளை வழங்கி உள்ளார். இவர்கள் முன்னணி பிரபலங்கள் பலரையும் ஏமாற்றி பணம் பறித்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வழக்கில் மற்றொரு பாலிவுட் நடிகரும், டான்சருமான நோரா ஃபேட்ஹியையம் அமலாக்கத்துறை சேர்த்துள்ளது.


Click it and Unblock the Notifications











