இப்போ இது தேவையா...அட்லீ – ஷாருக் பட ஷுட்டிங்கால் கடுப்பாகும் ரசிகர்கள்
மும்பை : கோலிவுட்டில் வரிசையாக வெற்றி படங்களை இயக்கிய அட்லீ, பாலிவுட்டில் அடியெடுத்து வைத்துள்ளார். அங்கு ஷாருக்கானை வைத்து பிரம்மாண்ட படம் ஒன்றை இயக்கி வருகிறார். இந்த படத்தை ஷாருக்கான் தான் தயாரிக்கிறார்.
இந்த படத்தில் லீட் ரோலில் கோலிவுட்டின் லேடி சூப்பர் நயன்தாரா நடிக்கிறார். ஷாருக்கான் இரட்டை வேடத்தில் நடிக்கும் இந்த படத்தில் மற்றொரு ஹீரோயினாக பிரியா மணி நடிக்கிறார். அதே சமயம் சான்யா மல்கோத்ரா, சுனில் க்ரோவர் ஆகியோர் இந்த படத்தில் முக்கிய ரோல்களில் நடிக்கிறார்கள். இவர்களுடன் யோகிபாபுவும் நடிக்கிறார். இந்த படத்தின் பாடல்களுக்கு ஏ.ஆர்.ரஹ்மானும், பேக்கிரவுண்ட் மியூசிக்கை அனிருத்தும் அமைப்பதாக கூறினார்கள்.

புனேயில் ஆக்ஷன் காட்சி
புனேவில் உள்ள முக்கிய மெட்ரோ ரயில் நிலையத்தில் இந்த படத்தின் ஷுட்டிங் துவங்கப்பட்டது. ஆரம்பமே சேசிங் சீன் தான். ரயிலை கடத்துபவர்களிடம் ஷாருக்கான் மக்களை காப்பாற்றும் பிரம்மாண்ட ஆக்ஷன் சீன் எடுக்கப்பட்டதாக கூறப்பட்டது. இங்கு ஷுட்டிங் நடத்தப்பட்ட போது எடுக்கப்பட்ட ஃபோட்டோக்கள் இணையத்தில் கசிந்து, வைரலானது. இதைத் தொடர்ந்து முக்கிய சீன்கள் ஃபிலிம் ஸ்டூடியோவில் எடுக்கப்பட்டது.

மருத்துவமனையில் ஷுட்டிங்
இந்நிலையில் அடுத்தகட்டமாக தெற்கு மும்பையில் 10 நாட்கள் ஷுட்டிங் நடத்தப்பட உள்ளதாம். அதுவும் மும்பையில் உள்ள மருத்துவமனை ஒன்றில் தான் இந்த ஷுட்டிங் நடத்தப்பட உள்ளதாம். அதோடு முதல்கட்ட ஷுட்டிங் முடிவடைவதாக படக்குழு தெரிவித்துள்ளது. இதனால் அடுத்த 10 நாட்கள் நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் என அனைவரும் தெற்கு மும்பையில் தான் இருக்க போகிறார்களாம்.

இப்போ இது தேவையா
கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க துவங்கும் இந்த சமயத்தில் ஷுட்டிங் எடுக்க அனுமதி கொடுத்ததே பெரிய விஷயம். இது போன்ற சூழலில் மருத்துவமனையில் ஷுட்டிங் நடத்துவது ரொம்ப அவசியமா என ரசிகர்கள் பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர். இது படக்குழுவினருக்கும், மருத்துவமனையில் உள்ளவர்களுக்கும் பாதுகாப்பானது இல்லையே, இதற்கு எப்படி அனுமதி கொடுத்தார்கள் என பலவகையில் பலரும் கேள்விகளால் துளைத்து வருகின்றனர்.

ஸ்பெயின் பறக்கும் ஷாருக்
அட்லீ இயக்கும் படத்தின் முதல் கட்ட ஷுட்டிங்கை முடித்த பிறகு, அடுத்தபடியாக சித்தார்த் ஆனந்த் இயக்கும் பதான் படத்தின் ஷுட்டிங்கிற்காக மூன்று வாரங்கள் ஸ்பெயின் செல்ல போகிறாராம் ஷாருக்கான். அவருடன் தீபிகா படுகோன், ஜான் ஆப்ரஹாம் உள்ளிட்டோரும் ஸ்பெயின் செல்ல உள்ளனர்.

கிரவுண்ட் ஒர்க்கில் அட்லீ
அதே சமயம், இந்த மூன்று வார இடைவெளியை தனது அடுத்த கட்ட ஷுட்டிங்கிற்காக கிரவுண்ட் ஒர்க் செய்ய அட்லீ பயன்படுத்திக் கொள்ள போகிறாராம். அட்லீ அடுத்து இயக்க போகும் பாலிவுட் படத்திலும் தந்தை - மகன் ரோலில் ஷாருக்கான் தான் நடிக்க போவதாக கூறப்படுகிறது.

விரைவில் டைட்டில் அறிவிப்பு
அட்லீ - ஷாருக்கான் தற்போது இணைந்துள்ள படத்திற்கு ஜவான் என பெயரிடப்பட்டுள்ளதாக முதலில் கூறப்பட்டது. பிறகு லயன் என பெயரிடப்பட்டுள்ளதாக கூறப்பட்டது. ஆனால் இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் வெளியிடப்படவில்லை. விரைவில் படத்தின் டைட்டில் உடனான ஃபஸ்ட்லுக் வெளியிடப்பட உள்ளதாக கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











