பிக்பாஸ் வீட்டில் லிப்லாக் முத்தம், செம ரொமான்ஸ்...அதிர்ந்து போன ரசிகர்கள்

மும்பை : அக்டோபர் 3 ம் தேதி துவங்கிய பிக்பாஸ் 5 தமிழ் நிகழ்ச்சியை கமல் தொகுத்து வழங்கி வருகிறார். முதல் வாரம் ஜாலியாக சென்ற நிலையில், இரண்டாவது வாரத்தின் துவக்கத்திலேயே குரூப்பிசம், சர்ச்சைகள் என மெல்ல மெல்ல துவங்கி உள்ளது.

பரபரப்பை மேலும் பற்ற வைக்க எலிமினேஷன் ப்ராசஸ் வேறு துவங்கி உள்ளது. மொத்தமுள்ள 17 போட்டியாளர்களில் 15 பேர் முதல் வாரத்திலேயே நாமினேட் செய்யப்பட்டுள்ளனர். இதனால் முதல் ஆளாக வீட்டில் இருந்து வெளியேற போவது யார் என்பதை பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

அதிர வைத்த போட்டியாளர்கள்

அதிர வைத்த போட்டியாளர்கள்

மற்றொரு புறம் இந்தி பிக்பாஸ் சீசன் 15 நிகழ்ச்சி, அக்டோபர் 2 ம் தேதி துவங்கி நடந்து வருகிறது. இதனை சல்மான் கான் தொகுத்து வழங்குகிறார். இதற்காக சல்மான் கானுக்கு மிகப் பெரிய தொகை சம்பளமாக கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சி துவங்கிய 11 நாட்களிலேயே ரசிகர்களை அதிரவைக்கும் பல சமபவங்கள் அரங்கேறி வருகிறது.

லிப்லாக் முத்தம், ரொமான்ஸ்

லிப்லாக் முத்தம், ரொமான்ஸ்

போட்டியாளர்களான மிஷா அய்யர் மற்றும் லேஷ்மான் சேகல் பிக்பாஸ் வீட்டையே ஹாட்டாக்கி வைத்துள்ளனர். கிடைக்கும் சிங்கிள் கேப்பில் கூட விடாமல் லிப்லாக் முத்தம், ரொமான்ஸ் காட்சிகளை அரங்கேற்றி வருகிறார்கள். இது மற்ற போட்டியாளர்களையும், பார்வையாளர்களையும் அதிரவைத்து வருகிறது.

வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

இதுவரை நடந்த பிக்பாஸ் சீசன்களில் சண்டைகள், மோசமான வார்த்தைகளால் திட்டிக் கொள்வது, சிலருக்கு இடையே காதல் தீ பற்றிக் கொள்வது இதை தான் பார்வையாளர்கள் பார்த்துள்ளனர். ஆனால் இப்படி ஒரு காட்சி முதல் முறையாக பிக்பாஸ் வீட்டிற்குள் நடப்பதால், நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகிறார்கள். தேசிய தொலைக்காட்சி ஒன்றில் இது போன்ற காட்சிகளை ஒளிபரப்புவதற்கு சோஷியல் மீடியாவில் ஏராளமானோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

ஹனிமூன் கொண்டாடுகிறார்களா

ஹனிமூன் கொண்டாடுகிறார்களா

சோஷியல் மீடியாவில் ஒருவர், இவர்கள் இருவரும் பிக்பாஸ் வீட்டில் தங்கள் ஹனிமூனை கொண்டாடி வருகிறார்களா என கேட்டுள்ளார். சக போட்டியாளரான ஜாய் பன்ஷாலி கிண்டலாக, நல்லவேளையாக இந்த நிகழ்ச்சி 9 மாதங்கள் நடத்தப்பட போவதில்லை. இல்லாவிட்டால் கண்டிப்பாக குழந்தை பிறந்து விடும் என கூறி உள்ளார். இதை குறிப்பிட்டும் நெட்டிசன்கள் பலர் கடுமையாக இந்த நிகழ்ச்சியை விமர்சித்து வருகிறார்கள்.

 உண்மையான சல்மான் வாக்கு

உண்மையான சல்மான் வாக்கு

மிஷா மற்றும் லேஷ்மானை அறிமுகம் செய்து வைக்கும் போது சல்மான் கான் கிண்டலாக, இவர்கள் இருவரும் ஏற்கனவே காதலர்கள். அதனால் இவர்களை சக போட்டியாளர்கள் கிண்டல் செய்யும் காட்சிகள் இருக்கும். எப்படி இருந்தாலும் நிச்சயம் பிக்பாஸ் 15 ல் ரசிகர்கள் பல ரொமான்ஸ் காட்சிகளை பார்க்க வாய்ப்புள்ளது என்றார். அது இப்போது உண்மையாகவே நடந்து வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X