ஷாருக்கான் – அட்லீ இணைவது தமிழ் படமா?...அடுத்தடுத்து இணையும் கோலிவுட் பிரபலங்கள்

மும்பை : முதல் படமான ராஜா ராணியிலேயே கமர்ஷியல் ஹிட் கொடுத்தவர் டைரக்டர் அட்லீ. தொடர்ந்து விஜய்யை வைத்து இயக்கிய தெறி, மெர்சல், பிகில் ஆகிய படங்களும் வரிசையாக ஹிட் படங்களாக அமைந்தன.

பழைய படங்களின் கதைகளை உல்டா செய்து அட்லீ படம் எடுக்கிறார் என்ற விமர்சனம் ஒரு பக்கம் இருந்தாலும், அதைத் தாண்டி மக்களின் மனங்களை கவர்ந்து, ஹிட் பட டைரக்டராக இருந்து வருகிறார் அட்லீ. இதனால் அட்லீ அடுத்ததாக யாரை இயக்க போகிறார், படத்தின் கதை என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ஷாருக்கை இயக்கும் அட்லீ

ஷாருக்கை இயக்கும் அட்லீ

ஆனால் அட்லீ, பாலிவுட் பக்கம் சென்று, பாலிவுட் பாஷா, பாலிவுட் கிங் என ரசிகர்களால் கொண்டாடப்படும் ஷாருக்கானை வைத்து படம் எடுக்க போவதாக அறிவித்தார். இதற்காக ஷாருக்கானிடம் கதையும் சொல்லி ஓகே செய்து விட்டார்.

புனேயில் ஜவான் ஷுட்டிங்

புனேயில் ஜவான் ஷுட்டிங்

இந்த படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க உள்ளார். ராணுவத்தை பின்புலமாகக் கொண்ட கதையென்பதால் இந்த படத்தில் ஜவான் என பெயரிடப்பட்டுள்ளதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து படத்தின் ஷுட்டிங் நேற்று புனேயில் துவங்கியது.

பாலிவுட்டில் நயனின் என்ட்ரி

பாலிவுட்டில் நயனின் என்ட்ரி

முதல் கட்ட படப்பிடிப்பில் கலந்து கொள்ள கோலிவுட்டின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவும் புனேவுக்கு பறந்துள்ளார். இந்த படத்தின் மூலம் பாலிவுட்டிலும் நயன்தாரா தடம் பதித்துள்ளார். இந்த படத்தின் ஷாருக்கான் இரட்டை வேடத்தில் நடிக்கிறார்.

இவரும் இருக்காரா

இவரும் இருக்காரா

லேட்டஸ்ட் தகவலாக இந்த படத்தில் மற்றொரு தமிழ் ஹீரோயினான பிரியா மணியும் இணைந்துள்ளாராம். அவரும் புனேயில் நடக்கும் ஷுட்டிங்கில் கலந்து கொண்டுள்ளார். ஏற்கனவே ஷாருக்கான் நடித்த சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் பிரியா மணி ஒரு பாடலுக்கு அவருடன் குத்தாட்டம் போட்டு அசத்தி உள்ளார்.

8 ஆண்டுகளுக்கு பின் ஷாருக் படத்தில்

8 ஆண்டுகளுக்கு பின் ஷாருக் படத்தில்

தி ஃபேமிலி மேன் வெப் சீரிசில் நடித்த பிறகு பிரியாமணியின் நடிப்பு பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. கிட்டதட்ட 8 ஆண்டுகளுக்கு பிறகு ஷாருக்கான் படத்தில் மீண்டும் இணைந்துள்ளார் பிரியாமணி. இந்த படத்தை தயாரிப்பதும் ஷாருக்கான் என்பதால், பிரியாமணிக்கு ஓகே சொல்லி விட்டாராம்.

அட...இவர் தான் இசையா

அட...இவர் தான் இசையா

பிரியாமணியை தொடர்ந்து மற்றொரு கோலிவுட் பிரபலமான அனிருத்தும் இந்த படத்தில் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்திற்கு அனிருத் தான் இசையமைக்க போவதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்படவில்லை.

ஷாருக் நடிக்கும் தமிழ் படமா

ஷாருக் நடிக்கும் தமிழ் படமா

ஜவான் படத்தின் டைரக்டர், ஹீரோயின், மற்றொரு நடிகை, இசையமைப்பாளர் என அனைவரும் தமிழ் திரையுலகை சேர்ந்தவர்கள் என்பதால் அட்லீ இயக்குவது இந்தி படமா அல்லது ஷாருக்கானை வைத்து தமிழ் படத்தை இயக்குகிறாரா என்ற சந்தேகம் அனைவரின் மனதிலும் எழுந்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X