வலிமை தயாரிப்பாளரின் அடுத்த பட சூட்டிங்கும் ஓவராம்.. சந்தோஷத்தில் மகள் போட்ட சூப்பர் போஸ்ட்!

மும்பை: வலிமை படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் தயாரிப்பில் அவரது மகள் ஜான்வி கபூர் நடித்துள்ள Mili படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.

தயாரிப்பாளர் போனி கபூர் மற்றும் மறைந்த பிரபல நடிகை ஸ்ரீதேவியின் மகளான ஜான்வி கபூர் பாலிவுட்டில் ஹீரோயினாக அறிமுகமாகி பல படங்களில் சிறப்பான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

மலையாளம் மற்றும் தமிழ் மொழியில் வெளியாகி வெற்றியடைந்த படத்தின் ரீமேக்கில் தற்போது ஜான்வி கபூர் நடித்துள்ளார்.

ஹெலென் ரீமேக்

ஹெலென் ரீமேக்

இயக்குநர் மதுக்குட்டி சேவியர் இயக்கத்தில் அன்னா பென் நடிப்பில் கடந்த 2019ம் ஆண்டு வெளியான திரைப்படம் ஹெலென். மலையாள ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று இந்த திரைப்படத்தின் ரீமேக் உரிமையை பெற கடும் போட்டி நிலவியது. தமிழில் இந்த படம் அன்பிற்கினியாள் என வெளியானது.

அருண் பாண்டியனின் மகள்

அருண் பாண்டியனின் மகள்

இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, காஷ்மோரா, ஜுங்கா உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் கோகுல் இயக்கத்தில் தமிழில் அருண் பாண்டியன் மற்றும் அவரது மகள் கீர்த்தி பாண்டியன் நடிப்பில் வெளியான அன்பிற்கினியாள் திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

ஜான்வி கபூர் நடிப்பில்

ஜான்வி கபூர் நடிப்பில்

இந்நிலையில், பாலிவுட்டிலும் இந்த படம் ரீமேக் ஆகி உள்ளது. தயாரிப்பாளர் போனி கபூர் மற்றும் அவரது மகள் ஜான்வி கபூர் நடிப்பில் Mili எனும் தலைப்பில் உருவாகி உள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளதாக நடிகை ஜான்வி கபூர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை ஷேர் செய்து அறிவித்துள்ளார்.

அப்பாவுடன் இணைந்து

அப்பாவுடன் இணைந்து

நல்ல தயாரிப்பாளர் என்று தான் அப்பாவை எனக்குத் தெரியும். ஆனால், அவரோடு இந்த படத்தில் முதல் முறையாக இணைந்து பணியாற்றிய போது தான் அவரை பற்றி முழுமையாக நான் அறிந்து கொண்டேன். இந்த படத்திற்காக நீங்க போட்ட மெனக்கெடலுக்கு நன்றி என அப்பாவையும் மற்ற படக்குழுவினரையும் பாராட்டி உள்ளார் ஜான்வி கபூர்.

படக்குழுவினருடன்

படக்குழுவினருடன்

படத்தின் முதல் நாள் கிளாப் போர்ட் காட்சியில் ஆரம்பித்து, அப்பாவுடன் இருக்கும் புகைப்படம், படக்குழுவினருடன் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படம் உள்ளிட்ட அனைத்தையும் நடிகை ஜான்வி கபூர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.

வலிமை டீசர் எப்போ

வலிமை டீசர் எப்போ

வலிமை பட தயாரிப்பாளரான போனி கபூரின் மகள் படத்தின் சூட்டிங் அதற்குள் முடிந்து விரைவில் திரைப்படம் ரிலீசாக உள்ள நிலையில், பொங்கலுக்கு வெளியாக உள்ள வலிமை படம் குறித்த அடுத்த அப்டேட் எப்போ வரும் என ஏகப்பட்ட ரசிகர்கள் தயாரிப்பாளர் போனி கபூர் மற்றும் அவரது மகளை கேட்டு வருகின்றனர். பொங்கலை முன்னிட்டு வெளியாகும் ஆர்.ஆர்.ஆர் படத்தின் புரமோஷன் சூடு பிடித்துள்ள நிலையில் வலிமை புரமோஷனை எப்போ ஆரம்பிப்பீங்க என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X