அட இதுல கூடவா...பாலிவுட் பிரபலங்கள் அதிகம் பார்ட்டிகளுக்கு செல்ல இது தான் காரணமா?
மும்பை : திரையுலகை சேர்ந்த பலரும் நகை கடை திறப்பு விழா உள்ளிட்ட விழாக்களில் கலந்து கொள்ள கணிசமான தொகையை சம்பளமாக வாங்குவது அனைவருக்கும் தெரிந்தது தான். நடிகைகள் பலர் தங்களின் சோஷியல் மீடியாக்களில் போஸ்ட் போடவும் குறிப்பிட்ட தொகையை வாங்கி வருகின்றனர்.

இந்நிலையில் திரையுலகில் கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் பிரபலங்கள் திருமணம் மற்றும் பார்ட்டிக்கு சென்று நடனமாடுவதற்கும் கோடிக்கணக்கில் சம்பளம் வாங்குவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறிப்பாக பாலிவுட் நடிகர், நடிகைகள் திருமணம், பிறந்த நாள் பார்ட்டி ஆகியவற்றில் அதிகம் கலந்து கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். கலந்து கொண்டு நடனமாடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்கள். இதற்கு காரணம் நட்பு மட்டுமல்ல அல்ல, இதற்காக அவர்கள் கோடிக்கணக்கில் சம்பளம் வாங்குவதும் காரணம்.
பாலிவுட் சூப்பர் ஸ்டார் என்று போற்றப்படும் ஷாருக்கான் திருமணம் மற்றும் பிறந்த நாள் பார்ட்டியில் நடனமாட 3 கோடி ரூபாய் வரை சம்பளமாக வாங்குவதாக சொல்லப்படுகிறது. அதேபோல் பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவரான கத்ரீனா கைஃப், திருமணம் பிறந்த நாள் பார்ட்டிக்கு ஷாருக்கானை விட அதிகமாக, அதாவது மூன்றரை கோடி ரூபாய் வசூல் செய்தாக தெரிகிறது.
நடிகர் ஹிருத்திக் ரோஷன் திருமணம் மற்றும் பிறந்த நாள் பார்ட்டியில் கலந்து கொள்ள இரண்டரை கோடி ரூபாயும், பாலிவுட்டின் நம்பர் 1 நடிகர் என்று போற்றப்படும் சல்மான்கான் இரண்டு கோடி ரூபாயும் பெற்று வருவதாக சொல்லப்படுகிறது.
முன்னணி நடிகைகளில் ஒருவரான தீபிகா படுகோன் திருமணம் மற்றும் பிறந்தநாள் பார்ட்டிகளில் நடனமாட ஒரு கோடி ரூபாய் வசூல் செய்கிறார்.தீபிகாவின் கணவரும் பிரபல பாலிவுட் நடிகருமான ரன்வீர் சிங் தனது மனைவிக்கு சமமாக ஒரு கோடி ரூபாய் வாங்குகிறாராம்.இந்திய திரையுலகில் மட்டுமின்றி ஹாலிவுட்டிலும் நடித்து வரும் நடிகை ப்ரியங்கா சோப்ரா இரண்டரை கோடி ரூபாய் சம்பளமாக வாங்கி வருகிறாராம்.
அதேபோல் அக்ஷய்குமார், ரன்பீர் கபூர் உள்ளிட்ட பிரபலங்களும் கோடிக்கணக்கில் பார்ட்டிகளில் நடனமாட சம்பளம் பெற்று வருவதாக சொல்லப்படுகிறது. கோடிக்கணக்கில் சம்பளம் பெற்று சினிமாவில் நடிப்பது மட்டுமின்றி இதுபோன்ற பிறந்த நாள் நிகழ்ச்சிகளில் ஒரு சில மணி நேரங்கள் மட்டும் நடனமாட கோடிக்கணக்கில் நடிகர், நடிகைகள் வசூல் செய்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











