மணியார்டரில் வந்த ரூ.4500...சிறையில் அப்படி என்ன செய்கிறார் ஆர்யான் கான்
மும்பை : ஷாருக்கானின் மகன் ஆர்யான் கான் போதைப் பொருள் பயன்படுத்திய வழக்கில் அக்டோபர் 3 ம் தேதி தேசிய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டு மும்பை அர்துர் ரோடு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு ஜாமின் வழங்க தொடர்ந்து தேசிய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
Recommended Video
அதே சமயம் ஷாருக்கான் தரப்பும் பல வழிகளில் ஆர்யானை வெளியில் கொண்டு வர முயற்சி செய்து வருகிறார்கள். போதைப் பொருள் விவகாரம் தொடர்பாக பாலிவுட் நடிகை அனன்யா பாண்டே, ஷாருக்கானின் வீடுகளில் கூட சமீபத்தில் சோதனை நடத்தப்பட்டது.

தூங்காத ஆர்யான் கான்
ஏறக்குறைய ஒரு மாதமாக சிறையில் இருந்து வரும் ஆர்யான் கான் மிக மோசமான நாட்களை கடத்தி வருகிறாராம். சிறையில் தூக்கமின்றி, இரவு நேரங்களில் நடந்து கொண்டே இருக்கிறாராம். ஆர்யானுக்கு வேண்டிய உணவுப் பொருட்களை சிறை கேன்டீனில் இருந்து வாங்கிக் கொள்ள அவருக்கு ரூ.4500 மணியார்டர் அனுப்பப்பட்டுள்ளது.

சிறை உணவை சாப்பிடுவதில்லை
லேட்டஸ்ட் தகவலின்படி, சிறையில் கொடுக்கும் உணவுப் பொருட்கள், தண்ணீர் எதையும் ஆர்யான் தொட்டுக் கூட பார்ப்பதில்லையாம். அவரிடம் இருக்கும் பணத்தை வைத்து பிஸ்கட்கள் மற்றும் மினரல் வாட்டர் மட்டுமே வாங்கிக்கொள்கிறாராம். இது மட்டுமல்ல, சிறையில் பொழுதை கழிக்க இரண்டு புத்தகங்களை வாங்கி வைத்துள்ளாராம். சிறை விதிகளின்படி ரூ.4500 என்பது அதிகபட்ச பணமாம்.

வீட்டு சாப்பாடு தர சொன்ன ஷாருக்
தொடர்ந்து ஜாமின் மறுக்கப்பட்டு வருவதால் அக்டோபர் 21 ம் தேதி ஷாருக்கான், நேரடியாக சிறைக்கு சென்று ஆர்யான் கானை சந்தித்தார். அப்போது சிறையில் இருப்பதும், இங்கு தரும் உணவை சாப்பிடுவதும் மிகவும் கஷ்டமாக இருப்பதாக ஆர்யான், ஷாருக்கானிடம் கூறினாராம். இதைக் கேட்டு அங்கிருந்த சிறை அதிகாரிகளிடம், முடியுமானால் தன் மகனுக்கு வீட்டு உணவை தாருங்கள் என சொல்லி விட்டு சென்றாராம்.

கோர்ட்டில் கேட்க முடிவு
ஆனால் அதற்காக கோர்ட்டில் சிறப்பு அனுமதி வாங்க வேண்டும் என சிறை அதிகாரிகள் சொல்லி விட்டனராம். இந்நிலையில் கீழ் கோர்ட்டில் ஜாமின் மறுக்கப்படுவதால், ஆர்யான் ஜாமின் தொடர்பாக மும்பை ஐகோர்ட்டில் முறையிட்டுள்ளனர். ஆர்யானுக்கு ஆதரவாக முன்னாள் அட்டர்னி ஜெனரல் முகுல் ரோஹத்கி ஆஜராகி உள்ளார். ஒருவேளை மீண்டும் ஜாமின் மறுக்கப்பட்டால், அவருக்கு வீட்டு உணவு வழங்க அனுமதி கேட்ட உள்ளனராம்.

ஜாமின் வழங்க எதிர்ப்பு
ஆனால் சர்வதேச போதைப் பொருள் கடத்தல் கும்பலுடன் ஆர்யான் கானுக்கு தொடர்பு இருப்பதாக கூறி தேசிய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் ஜாமின் கொடுக்க எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











