டேட்டிங் போதும்...திருமணம் எதற்கு...பரபரப்பை கிளப்பும் ஹிருத்திக் ரோஷன் விவகாரம்

மும்பை : பாலிவுட் நடிகர் ஹிரித்திக் ரோஷன், தனது மனைவி சுசானே கானை விவாகரத்து செய்த பின்னர், நடிகை சபா ஆசாத் உடன் ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாக செய்திகள் வலம் வருகின்றன. இந்த ஜோடி கடந்த சில மாதங்களாக ஒன்றாக வெளியில் சென்று வரும் போட்டோக்கள் இணையத்தில் வெளியாகி வருகின்றன.

கரண் ஜோஹரின் 50-வது பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஒன்றாக கலந்துக் கொண்டதன் மூலம் அவர்கள் கிட்டத்தட்ட தங்கள் உறவை அதிகாரப் பூர்வமாக்கியுள்ளனர்.இவர்கள் ஜோடியாக வந்த போட்டோக்கள் செம வைரலாகின.

Hrithik Roshan and Saba Azad in no rush to get married: Report

சமீபத்தில், ஹிரித்திக் மற்றும் சபா விரைவில் திருமணம் செய்துக் கொண்டு தங்கள் உறவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின. இருப்பினும், அவர்கள் திருமணம் செய்துக் கொள்ள அவசரப்படவில்லை எனத் தெரிகிறது.

ஹிரித்திக் ரோஷனும், சபா ஆசாத்தும் மகிழ்ச்சியான உறவில் உள்ளனர். அவர்கள் ஒன்றாக அதிக நேரம் செலவிடுவதுடன் விடுமுறைக்காக வெளிநாடுகளுக்கும் சென்று வருகிறார்கள். சுசானேவுடன் மிகவும் அன்பாகவும் நல்ல ரிலேஷன்ஷிப்பிலும் இருக்கிறார்.

மேலும் ஹிரித்திக்கின் குழந்தைகளுடனும் நெருக்கம் காட்டி வருகிறார். இருப்பினும், சபாவும், ஹ்ரித்திக்கும் திருமணம் செய்து கொள்ளும் அவசரத்தில் இல்லை. அவர்கள் ஒவ்வொரு நாளும் தங்கள் ரிலேஷன்ஷிப்பை ரசித்து அனுபவிக்கிறார்கள். திருமணம் செய்து கொள்ள வேண்டுமா எனவும் யோசித்து வருவதாக ஆங்கில மீடியாக்கள் பலவும் செய்து வெளியிட்டு வருகின்றன.

Hrithik Roshan and Saba Azad in no rush to get married: Report

இதற்கிடையில், ஹிருத்திக் ரோஷன் மற்றும் சபா ஆசாத் சமீபத்தில் லண்டனுக்கு சென்று தங்கள் விடுமுறையைக் கழித்தனர். அங்குள்ள ஜாஸ் கிளப்பில் அவர்கள் எடுத்துக் கொண்ட போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருந்தார் சபா. தவிர ஹிரித்திக் ரோஷனின் முன்னாள் மனைவி சுசானே கான், அர்ஸ்லான் கோனியுடன் ரிலேஷன்ஷிப்பில் இருக்கிறார் என்றும் தகவல் பரவி வருகிறது.

இதனால் பாலிவுட்டில் ஹிருத்திக் ரோஷன் குடும்ப விவகாரம், அவரது இரண்டாவது திருமணம் பற்றிய தகவல்கள் தான் ஹாட் டாப்பிக்காக இருந்து வருகின்றன. இது போல் பாலிவுட் நட்சத்திரங்கள் பலரும் விவாகரத்து பெற்று பிரிவதும், டேட்டிங், இரண்டாவது திருமணம் செய்வது ஆகியவை அதிகரித்து வருவது ரசிகர்களை வருத்தமடைய வைத்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X