Don't Miss!
- Finance
முதலீட்டாளர்களின் நலனுக்காகவே FPO ரத்து.. அதானி செம ட்விஸ்ட்!
- News
86 நிமிட பட்ஜெட் உரை.. தொடர்ந்து மேஜையை தட்டி வரவேற்ற பிரதமர் மோடி.. எத்தனை முறை தெரியுமா? ஆஹா!
- Technology
புது போன், Smart TV வாங்குற ஐடியா இருக்கா? 2024-க்குள் வாங்கிடுங்க.! நிர்மலா சீதாராமனே சொல்லிட்டாங்க.!
- Lifestyle
உங்களுக்கு புற்றுநோய் வரக்கூடாதா? அப்ப இந்த உணவுகளுக்கு முதலில் 'குட்-பை' சொல்லுங்க...
- Automobiles
க்ரெட்டாவின் பவர்ஃபுல் மோட்டாருடன் விற்பனைக்கு வந்தது 2023 வென்யூ... சும்மா சர்சர்னு போகலாம்!
- Sports
சுயநலமான கேப்டன்சியா??.. ஹர்திக் பாண்ட்யா மீது எழும் பரபரப்பு குற்றச்சாட்டுகள்.. என்ன நடந்தது?
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
அக்ஷய் குமார் படத்தில் இப்படி ஒரு தவறா....சுட்டிக் காட்டிய ஐபிஎஸ் அதிகாரி
மும்பை : டாப் ஹீரோக்கள் ஒன்றாக இணைந்து ஒரே படத்தில் நடிப்பது பாலிவுட்டில் சர்வ சாதாரணம். இது போல் மல்டிஸ்டார் படங்களே பாலிவுட்டில் அதிகம் எடுக்கப்பட்டு வருகின்றன. இவைகள் நல்ல வரவேற்பையும் பெற்று வருகின்றன.
மல்டி ஸ்டார் அல்லாத படங்களிலும் ஏதாவது ஒரு டாப் ஹீரோ கெஸ்ட் ரோல் பண்ணுவது வழக்கம். இது படத்தின் ப்ரோமோஷனுக்கும் உதவுவதாகவும், வெற்றிகளை எளிதில் அள்ளி தருவதாகவும் பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பான் மசாலா விளம்பரம்...சிக்கலில் பாலிவுட் டாப் ஹீரோக்கள்

பிரம்மாண்ட போலீஸ் படம்
அப்படி அக்ஷய் குமார், அஜய் தேவ்கன், ரன்வீர் சிங் இணைந்து பிரம்மாண்ட படம் ஒன்றில் நடித்து வருகிறார்கள். போலீஸ் கதையை மையாக கொண்ட இந்த படத்திற்கு சூர்யவன்சி என பெயரிடப்பட்டுள்ளது. இந்த படம் தொடர்பான ஃபோட்டோ ஒன்றை சோஷியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்திருந்தார் அக்ஷய் குமார்.

அக்ஷய் பகிர்ந்த ஃபோட்டோ
அந்த ஃபோட்டோவில், அக்ஷய் குமார் மற்றும் அஜய் தேவ்கன் நின்று கொண்டு பேசிக் கொண்டிருப்பது போலவும், ரன்வீர் சிங் மேஜையின் மீது அமர்ந்து பேசிக் கொண்டிருப்பதை போலவும் காட்சி அமைந்திருந்தது. இந்த ஃபோட்டோ ரசிகர்களால் லைக் செய்யப்பட்டாலும், போலீஸ் அதிகாரி ஒருவர் இதை பார்த்து விட்டு, அதிலும் மிகப் பெரிய தவறை சுட்டிக் காட்டி உள்ளார்.

தவறை சொன்ன ஐபிஎஸ் அதிகாரி
ஐபிஎஸ் அதிகாரியான ஆர்.கே.விஜ், சீனியர்கள் நின்று கொண்டிருக்கும் போது, ரன்வீர் சிங் அமர்ந்தபடி பேசிக் கொண்டிருக்கிறார். எஸ்பி., நின்று கொண்டிருக்கும் போது இன்ஸ்பெக்டர் உட்கார்ந்து கொண்டு பேசுகிறார். இது போல் நடக்காது என சுட்டிக்காட்டி உள்ளார். ஐபிஎஸ் அதிகாரி இந்த ஃபோட்டோவை பார்த்து விட்டு, கருத்து பகிர்ந்ததை கண்ட அக்ஷய் குமாரும் உடனடியாக பதிலளித்தார்.

விளக்கம் தந்த அக்ஷய் குமார்
அவர் தனது பதிலில், சார், இது Behind the scenes ஃபோட்டோ. நடிகர்களாக கேமிரா ஆன் ஆனதும், Protocol ம் திரும்பி விடும். திரைக்கு பின்னால் எடுக்கப்பட்ட ஃபோட்டோ என்பதால் இப்படி உள்ளது. நண்பர்களாக பேசிக் கொண்டிருந்த போது எடுக்கப்பட்ட ஃபோட்டோ இது. நமது போலீஸ் துறை மீது எங்களுக்கு எப்போதும் மரியாதை உண்டு. இந்த படத்தை பார்க்கும் போது உங்களுக்கு நிச்சயம் பிடிக்கும் என நம்புகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.