என்னது...ஷாருக்கான் தனது வீட்டை இத்தனை கோடி கொடுத்தா வாங்கினார் ?

மும்பை : மகன் ஆர்யான் கான் போதைப் பொருள் வழக்கில் இருந்து ஜாமினில் வெளிய வந்ததால் தனது வழக்கமான வேலைகளுக்கு திரும்பி வருகிறார் ஷாருக்கான். பாலிவுட்டின் கிங் என புகழப்படும் ஷாருக்கான் நேற்று தனது பிறந்தநாளை கொண்டாடினார்.

வீட்டிலேயே எளிமையான முறையில் பிறந்தநாள் கொண்டாட்டம் நடைபெற்றதாக கூறப்படுகிறது. அடுத்ததாக மகன் ஆர்யான் கானின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடவும், அதற்கு பிறகு பாதியில் நிற்கும் படங்களின் வேலைகளை மீண்டும் துவக்கவும் ஷாருக்கான் திட்டமிட்டுள்ளார்.

ராஜா போன்ற வாழ்க்கை

ராஜா போன்ற வாழ்க்கை

தனது நடிப்பு திறமையால் மட்டுமல்ல நிஜத்திலும் ஒரு ராஜாவை போல தான் ஷாருக்கான் வாழ்ந்து வருகிறார். அவரது சொத்துக்கள், படங்கள், பயன்படுத்தும் பொருட்கள் என அனைத்திலும் பிரம்மாண்டம் இருக்கும். சினிமாக்களில் காட்டப்படுவதை விட வசதியான வாழ்க்கையையே ஷாருக்கான் வாழ்ந்து வருகிறார்.

அரண்மனை போன்ற வீடு

அரண்மனை போன்ற வீடு

ஷாருக்கானின் வீடு மும்பையின் பந்த்ரா பகுதியில் அமைந்துள்ளது. இந்த வீட்டிற்கு மன்னத் என பெயரிட்டுள்ளார் ஷாருக்கான். இந்த வீட்டை கிட்டதட்ட அரண்மனை என்றே சொல்லலாம். அந்த அளவிற்கு இந்த வீடு பிரம்மாண்டமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. யாரும் கற்பனையில் கூட நினைத்து பார்க்க முடியாத பல விஷயங்கள் இந்த வீட்டில் உள்ளதாம்.

ஷாருக்கின் கனவு வீடு

ஷாருக்கின் கனவு வீடு

ஆனால் இந்த வீட்டிற்கு பின்னால் ஒரு பெரிய வரலாறே உள்ளதாம். தனது கனவு இல்லமாக ஷாருக்கான் நினைக்கும் இந்த வீட்டை 2001 ம் ஆண்டு Bai Khorshed Bhanu Sanjana Trust இடம் இருந்து தான் ஷாருக்கான் வாங்கி உள்ளார். 1997 ம் ஆண்டே மன்னத் என்ற பெயரில் தனது கனவு வீட்டை அமைக்க ஷாருக்கான் முடிவு செய்து விட்டாராம்.

நேரில் சென்று பேசிய ஷாருக்

நேரில் சென்று பேசிய ஷாருக்

அப்போது இந்த வீடு Villa Vienna என்ற பெயரில் இருந்துள்ளது. நரிமன் டப்ஸ்மாஷ் என்பவரிடம் தான் இருந்துள்ளது. அந்த சமயத்தில் ஷாருக்கான் Yess Boss படத்தில் நடித்துக் கொண்டிருந்தார். பீச்சிற்கு மிக அருகில் இருக்கும் இந்த வீட்டை பார்த்ததும் ஷாருக்கானுக்கு மிகவும் பிடித்து விட்டதாம். பல முறை முயற்சித்தும் இந்த வீட்டை ஷாருக்கானால் வாங்க முடியவில்லையாம்.

இவ்வளவு குறைந்த விலைக்கா

இவ்வளவு குறைந்த விலைக்கா

பிறகு 2001 ல் தானே நேரில் சென்று வீட்டின் உரிமையாளரை சந்தித்து பேசி, சம்மதிக்க வைத்தாராம். கடைசியில் ஒரு வழியாக அந்த சமயத்தில் ரூ.13.32 கோடிக்கு இந்த வீட்டை வாங்கி உள்ளார் ஷாருக்கான். 2005 ல் தான் ஷாருக்கானும் கவுரி கானும் இந்த வீட்டிற்கு மன்னத் என பெயரிட்டுள்ளனர். அதற்கு பிறகு இந்த வீடு ஷாருக்கானின் மிகப் பெரிய அடையாளமாகவே மாறி விட்டது.

இவ்வளவு இருக்கா

இவ்வளவு இருக்கா

மன்னத், ஆறு மாடிகளை கொண்ட பங்களா. இதில் ஏராளமான பெட்ரூம்கள், லிவ்விங் ஏரியாக்கள் உள்ளன. இந்த பங்களாவிற்குள் ஜிம், லைப்ரேரி, பிரத்யேக ஆடிட்டோரியம் என அனைத்து வசதிகளும் உள்ளன. அரண்மனை போன்ற இந்த வீட்டின் தற்போதைய மதிப்பு சுமார் ரூ.200 கோடி இருக்கும் என கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X