கணவர் அடித்து காயம் ஆகிடுச்சுன்னு சொன்னாங்க.. நல்லா தானே இருக்காரு பூனம் பாண்டே.. அப்போ அது?

மும்பை: கவர்ச்சி நடிகை பூனம் பாண்டேவை அவரது கணவர் சாம் பாம்பே அடித்து காயப்படுத்தியதில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என சமீபத்தில் பரபரப்பு செய்திகள் வெளியாகின.

கணவர் சாம் பாம்பே மீது பூனம் பாண்டே கொடுத்த புகாரின் பேரில் அவர் கைது செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டது.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகை பூனம் பாண்டேவின் நிலை எப்படி இருக்கு பாருங்க என ஒரு புகைப்படமும் படு வேகமாக வைரலானது.

கணவர் அடித்து விட்டார்

கணவர் அடித்து விட்டார்

கவர்ச்சி நடிகை பூனம் பாண்டேவின் கணவர் சாம் பாம்பே அவரை அடித்து விட்டார் என்றும் கண், தலை மற்றும் முகத்தில் எல்லாம் பூனம் பாண்டேவுக்கு காயம் ஏற்பட்டுள்ளதாகவும் தீவிர சிகிச்சை பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் சமீபத்தில் பரபரப்பு செய்திகள் கிளம்பின.

கணவர் கைது

கணவர் கைது

பூனம் பாண்டே கணவர் தாக்கியதாக போலீசில் புகார் அளித்த நிலையில், அவரது கணவர் சாம் பாம்பே கைது செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டது. ஆனால், இந்த விவகாரம் தொடர்பாக நடிகை பூனம் பாண்டே மற்றும் கணவர் சாம் பாம்பே சமூக வலைதளங்களில் கூட எந்தவொரு கருத்தையும் விளக்கத்தையும் தரவில்லை.

காயங்களுடன் மருத்துவமனையில்

காயங்களுடன் மருத்துவமனையில்

பூனம் பாண்டேவின் கண்கள் வீங்கியதாகவும், முகம் மற்றும் தலையில் பலத்த அடி விழுந்து அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என ஒரு போட்டோ சமூக வலைதளத்தில் தீயாய் பரவி பூனம் பாண்டேவின் ரசிகர்களை ஷாக் ஆக்கியது. ஆனால், அந்த புகைப்படத்தில் இருப்பது அவரே கிடையாது என்கிற உண்மை தற்போது வெளியாகி உள்ளது.

பூனம் பாண்டேவே இல்லை

பூனம் பாண்டேவே இல்லை

ஆனால், வைரலாக ஷேர் செய்யப்பட்ட அந்த புகைப்படத்தில் இருப்பது பூனம் பாண்டேவே இல்லை என்றும் 2018ல் அப்லோடு செய்யப்பட்ட வீடியோ ஒன்றில் இருந்த அர்ஷா பாண்டேவின் புகைப்படத்தை தான் சில யூடியூபர்கள் போட்டு வைரலாக்கி உள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.

அடிபட்ட அறிகுறியே தெரியல

அடிபட்ட அறிகுறியே தெரியல

இந்நிலையில், அந்த விவகாரம் தொடர்பாக எந்தவொரு கருத்தையும் தெரிவிக்காமல் புதிய கவர்ச்சிகரமான போட்டோக்களை ஷேர் செய்து வருகிறார் பூனம் பாண்டே. அந்த புகைப்படங்களை எப்படி ஜூம் செய்து பார்த்தாலும் எந்த ஒரு காயமும் அவர் உடலில் எந்த இடத்திலும் ஏற்பட்டதற்கான அறிகுறியே இல்லையே என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

கணவர் பெயர் நீக்கம்

கணவர் பெயர் நீக்கம்

சமூக வலைதளங்களில் பூனம் பாண்டே பாம்பே என குறிப்பிட்டு வந்த பூனம் பாண்டே தனது பெயருக்கு பின்னால் இருந்த பாம்பேவை நீக்கி விட்டு பூனம் பாண்டே என்று மட்டும் மீண்டும் மாற்றி உள்ளார். கணவர் பெயரை நீக்கி உள்ள நிலையில், விரைவில் விவாகரத்து அறிவிப்பை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X