Don't Miss!
- Lifestyle
இந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் தமனி சுவர்களில் அதிகளவு கொழுப்பு படிந்துள்ளதாம்... இது உயிருக்கே ஆபத்தாம்!
- Sports
இவரை நியாபகம் இருக்கா? தோனியின் மானத்தை காப்பாற்றிய ஜோகிந்தர் சர்மா.. ஓய்வு முடிவை அறிவித்தார்
- News
அடுத்த மூவ் என்ன? ஈரோட்டில் கட்சி நிர்வாகிகளுடன் எடப்பாடி பரபர ஆலோசனை
- Automobiles
திடீரென உயர்த்தப்பட்ட பெட்ரோல்/டீசல் விலை! பட்ஜெட்டில் வெளியான பகீர் ஆய்வு!
- Technology
ஒப்போ ரெனோ8 டி 5ஜி ஃபர்ஸ்ட் லுக்: பவர்-பேக்டு அம்சங்களுடன் இன்னொரு பவர்ஃபுல் ஸ்மார்ட்போன்!
- Finance
இண்டிகோ: லாபம் 1000% வளர்ச்சி..! அடேங்கப்பா, என்ன காரணம் தெரியுமா..?
- Travel
இந்தியாவிலேயே அதிக விருந்தோம்பல் செய்து அவார்ட் வாங்கிய இடம் புதுச்சேரி தானாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
அட்லீ – ஷாருக்கான் படத்தின் கதை இது தானா?...குழப்பத்தில் ரசிகர்கள்
மும்பை : தமிழில் விஜய்யை வைத்து தெறி, பிகில், மெர்சல் என அடுத்தடுத்து பிளாக்பஸ்டர் படங்களை கொடுத்த டைரக்டர் அட்லீ, தற்போது பாலிவுட்டிற்கு சென்றுள்ளார். ஷாருக்கானை வைத்து த்ரில்லர் படம் ஒன்றை இயக்கி வருகிறார்.
Recommended Video
ஷாருக்கான் இரட்டை வேடத்தில் நடிக்கும் இந்த படத்தில் லீட் ரோலில் நடிக்க நயன்தாராவும், பிரியா மணியும் ஒப்பந்தமாகி உள்ளனர். இரண்டு ஆண்டுகளாக ப்ரீ ப்ரொடக்ஷன் வேலைகள் நடைபெற்று, கடந்த சில நாட்களுக்கு முன் புனேயில் ஷுட்டிங் துவங்கப்பட்டது.

பேங்க் கொள்ளை கதையா
முதலில் இந்த படம் ராணுவத்தை பின்புலமாக கொண்டு எடுக்கப்படும் படம் எனவும், இதில் உளவுத்துறை அதிகாரி, கிரிமினல் என இரட்டை வேடத்தில் ஷாருக்கான் நடிக்கிறார். இந்த படத்திற்கு ஜவான் என பெயரிடப்பட்டுள்ளதாக கூறப்பட்டது. ஆனால் தற்போது பேங்க் கொள்ளையை மையமாகக் கொண்டது தான் இந்த படத்தின் கதை என கூறப்படுகிறது.

வெப் சீரிஸ் கதையா
பிரபலமான வெப் சீரிசான Money Heist ன் இந்திய உரிமத்தை ஷாருக்கான் வாங்கி விட்டதாக ஏற்கனவே கூறப்பட்டது. இந்த வெப் சீரிசின் கதையை தான் தற்போது சினிமாவாக எடுக்க போகிறார்களாம். இந்த படத்திற்கு Lion என பெயரிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த தகவல் உண்மை தானா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

சிறப்பு தோற்றத்தில் விஜய்
இந்த படத்தில் தென்னிந்திய பிரபலங்களான நயன்தாரா, பிரியாமணி, யோகிபாபு உள்ளிட்ட பலர் நடிப்பதால் இதனை பான் இந்தியன் படமாக எடுக்க படக்குழு திட்டமிட்டு வருகிறதாம். இந்த படத்தில் விஜய்யும் சிறப்பு தோற்றத்தில் நடிக்க உள்ளதாக மற்றொரு தகவலும் கூறப்படுகிறது.

பாலிவுட்டில் சாதாரணம்
இது போல் ஒரு மெகா ஸ்டாரின் படத்தில் மற்றொரு டாப் ஹீரோ சிறப்பு தோற்றத்தில் நடிப்பது பாலிவுட்டில் தற்போது சகஜமாகி வருகிறது. ஷாருக்கான் கடைசியாக நடித்துள்ள பதான் படத்தில் கூட சல்மான் கான் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். அதே போல் சல்மான் கான் நடிக்கும் டைகர் 3 படத்தில் ஷாருக்கானும் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.

விஜய் நடிப்பாரா
ஆனால் தமிழில் டாப் ஹீரோவான விஜய், மற்றொரு டாப் ஹீரோ படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிப்பது இதுவே முதல் முறையாகும். இந்த படத்தில் நடிக்க விஜய் ஒப்புக் கொள்வாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.