இவர் ஷாருக்கானுக்கு வில்லனா... வேற லெவலில் அசத்தும் அட்லீ
மும்பை : கோலிவுட் பிளாக்பஸ்டர் டைரக்டர் அட்லீ, பாலிவுட் பாஷாவான ஷாருக்கானை வைத்து இயக்கும் படம் குறித்து அடுத்தடுத்து மாஸான அப்டேட்கள் வெளியிடப்பட்டு வருகிறது. இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு பல மடங்கு அதிகரித்துள்ளது.
தினம் ஒரு அப்டேட் என்ற நிலைமை மாறி, இந்த படத்திற்கு மட்டும் தினமும் பல அப்டேட்களை வெளியிட்டு ஆச்சரியப்பட வைத்து வருகின்றனர். இவருமா, இவருமா என விடாமல் ரசிகர்களை கேட்க வைத்து வருகிறார்கள்.

மீண்டும் ஷாருக்குடன் யோகிபாபு
ஷாருக்கான் - அட்லீ இணைந்துள்ள படத்தில் ஹீரோயின்களாக நயன்தாராவும், பிரியாமணியும் நடிப்பதாக ஏற்கனவே கூறினார். அதைத் தொடர்ந்து இந்த படத்தில் யோகிபாபும் முக்கிய ரோலில் நடிக்கிறார் என நேற்று கூறினார்.

இரண்டு இசையமைப்பாளர்கள்
இந்த படத்தின் பாடல்களுக்கு ஏ.ஆர்.ரஹ்மானும், பேக்கிரவுண்ட் மியூசிக்கை அனிருத்தும் அமைக்கிறார்கள். இரண்டு டாப் இசையமைப்பாளர்கள் இந்த படத்தில் பணியாற்ற போகிறார்கள் என மாஸ் அப்டேட் கொடுத்தனர்.

இரண்டு ஹீரோயின்கள்
ஜவான் என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் ஷாருக்கான் இரட்டை வேடத்தில் நடிக்கிறார். அதில் ஒருவருக்கு நயன்தாராவும், மற்றொரு கேரக்டருக்க பிரியாமணியும் ஜோடியாக நடிக்கிறார்களாம். இது ராணுவத்தை மையமாகக் கொண்ட ஸ்பை ஆக்ஷன் படமாக எடுக்கப்படுகிறது.

இவர் தான் வில்லனா
இரண்டு நாட்களுக்கு முன் ஜவான் படத்தின் ஷுட்டிங் புனேயில் துவங்கியது. இதில் ஷாருக்கான், நயன்தாரா, பிரியாமணி உள்ளிட்டோர் நடித்து வருகிறார்கள். இவர்களுடன் இந்த படத்தில் வில்லன் ரோலில் ராணா டகுபதி நடிப்பதாக கூறப்படுகிறது. இவரும் ஷுட்டிங்கில் கலந்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.

ஆரம்பமே ஆக்ஷன்
தற்போதைய தகவலின்படி, முதல்கட்டமாக ரயில் கடத்தல் சீனை படமாக்கி வருகிறார்களாம். இந்த கடினமான ஆக்ஷன் காட்சிகள் புனேயில் உள்ள முக்கியமான மெட்ரோ ரயில் நிலையம் ஒன்றில் எடுக்கப்படுகிறதாம். இங்கு 10 நாட்கள் ஷுட்டிங் முடிக்கப்பட்ட பிறகு, படக்குழு மும்பை செல்ல உள்ளது.

தமிழிலும் ரிலீசாகிறது
பான் இந்தியன் படமாக தயாராகி வரும் ஜவான் படம் இந்தி மற்றும் தமிழில் ஒரே சமயத்தில் எடுக்கப்படுகிறதாம். பிறகு மற்ற மொழிகளிலும் இப்படம் டப் செய்து வெளியிடப்பட உள்ளதாம். அதனால் தான் கோலிவுட், பாலிவுட், டோலிவுட்டை சேர்ந்த பிரபலங்களை இந்த படத்தில் நடிக்க வைத்து வருகிறார்களாம்.

முதல் ஹீரோ இவர் தான்
புனே மெட்ரோ ரயில் நிலையத்தில் ஷுட்டிங் நடத்தும் முதல் ஹீரோ ஷாருக்கான் தானாம். இதுவரை இந்த ரயில் நிலையம் பொது மக்கள் பயன்பாட்டிற்காக மட்டும் தான் அனுமதிக்கப்பட்டு வந்ததாம்.

செட்டே கிடையாது
அக்டோபர் மத்தியில் துவங்கி இந்த படத்தின் ஷுட்டிங் இடை விடாது முழுவீச்சில் ஐதராபாத்தில் உள்ள ராமோஜி ஃபிலிம் சிட்டியில் நடத்தப்பட உள்ளதாம். புனேயில் 10 நாட்கள் நடத்தப்படும் ஷுட்டிங் மழுவதும் உண்மையான சூழலில் படமாக்கப்படுகிறதாம். இதற்காக தனிப்பட்ட எந்த செட்டும் அமைக்கப்படவில்லையாம்.


Click it and Unblock the Notifications











