செம மாஸ் அப்டேட் ...ஷாருக்கான் – அட்லீ பட டைட்டில் இது தானா
மும்பை : தமிழ் சினிமாவில் கமர்ஷியல் வெற்றி படங்களை இயக்குவதில் பிரபலமான டைரக்டர்கள் ஒருவர் அட்லீ. முதல் படமான ராஜா ராணி படத்திலேயே பிளாக்பஸ்டர் வெற்றியை கொடுத்தவர் அட்லீ.
பிறகு விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் என வரிசையாக 3 மாஸ் வெற்றி படங்களை கொடுத்தார். இந்த படங்கள் அனைத்துமே பாக்ஸ் ஆபீசில் பிரம்மாண்ட வெற்றியை பெற்றன. இதனால் விஜய் - அட்லீ காம்போ கோலிவுட்டில் மிகவும் பிரபலம்.

ஷாருக்கான் தயாரிப்பு
விஜய்யை தொடர்ந்து பாலிவுட் கிங் ஷாருக்கானை இயக்க போகிறார் அட்லீ. இந்த படத்தில் நடிப்பதுடன் தனது சொந்த தயாரிப்பு பேனரான ரெட் சில்லிஸ் என்டர்டைன்மென்ட் பெயரிலேயே இந்த படத்தை தயாரிக்கவும் போகிறார்.

ஜோடியாக நயன்தாரா
இந்த படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக கோலிவுட் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்கிறார். அட்லீயின் முதல் படமான ராஜா ராணி, பிகில் போன்ற படங்களில் நயன்தாரா ஏற்கனவே நடித்துள்ளார். தற்போது ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிப்பதன் மூலம் பாலிவுட்டிலும் தடம் பதிக்க போகிறார் நயன்தாரா.

பதானுக்கு பிறகு ஷுட்டிங்
சானியா மல்கோத்ராவும் இந்த படத்தில் முக்கிய ரோலில் நடிக்க போகிறார். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். தற்போது பதான் படத்தில் நடித்து வரும் ஷாருக்கான், இதை முடித்து விட்டு அட்லீ இயக்கும் படத்தில் நடிக்க போகிறாராம்.

இது தான் டைட்டிலா
இதில் லேட்டஸ்ட் தகவலாக, ஷாருக்கான் - அட்லீ இணையும் படத்திற்கு ஜவான் என பெயரிட்டுள்ளார்களாம். ஷாருக்கான் இரட்டை வேடத்தில் நடிக்கும் இந்த படம் ராணுவத்தை பின்புலமாகக் கொண்டு எடுக்கப்படுகிறதாம். அதனால் தான் இந்த பெயரை தேர்வு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

உளவுத்துறை அதிகாரி
இந்த படத்தில் ஷாருக்கானின் ஒரு கேரக்டர் உளவுத்துறை அதிகாரி ரோலில் நடிப்பதாக அமைக்கப்பட்டுள்ளது. ஷாருக்கான் இரட்டை ரோலில் நடிப்பதால் படத்தின் கதையும் இரண்டு நாயகிகளைக் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

டீசரோடு வரும் அப்டேட்
முதல் 10 நாட்கள் படப்பிடிப்பை செப்டம்பர் மாதத்தில் புனேயில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து பெரும்பாலான முக்கிய காட்சிகளை படமாக்க படக்குழு வெளிநாடு செல்ல உள்ளதாம். விரைவில் படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு டீசருடன் வெளியிடப்பட உள்ளதாம்.


Click it and Unblock the Notifications











