குடிக்க தண்ணீர் கூட தரல.. கங்கன ரனாவத்துக்கு நடந்த சோகம்... ஆவேசப்பதிவு!

மும்பை : பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத், ஐரோப்பாவிற்கு பயணம் மேற்கொண்ட போது ஏற்பட்ட சோகமான அனுபவங்களை நினைவு கூர்ந்துள்ளார்.

எப்போது பார்த்தாலும் ஏதாவது ஒரு வில்லங்கமான அல்லது சர்ச்சையான கருத்துக்களை பதிவு செய்து நெட்டிசன்களிடம் வாங்கி கட்டி கொள்வதை வழக்கமாக வைத்திருப்பவர் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்.

கங்கனா ரனாவத் நடித்துள்ள புதிய படமான தகாட் நாளை திரையரங்கில் வெளியாக உள்ளது. ரஸ்னீஷ் காய் இயக்கத்தில் உருவாகி உள்ள இப்படத்தில் அர்ஜுன் ராம்பால், திவ்யா தத்தா ஆகியோரும் நடித்துள்ளனர்.

பாலிவுட் நடிகை

பாலிவுட் நடிகை

இந்திய திரை நட்சத்திரங்களில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை கங்கனா ரனாவத். இவர் பெரும்பாலும் இந்தி மொழி படங்களில் நடிப்பது வழக்கம். தமிழிலும் தாம் தூம், தலைவி போன்ற படங்களில் நடித்துள்ளார். சமயங்களில் இவரது கருத்துக்கள் பெரும் சர்ச்சையை கிளப்பி விடும்.

மோசமான பிரச்சனை

மோசமான பிரச்சனை

சமீபத்தில் பேட்டி அளித்துள்ள கங்கனா, ஐரோப்பாவிற்கு பயணம் மேற்கொண்ட போது தான் சந்தித்த மோசமான பிரச்சனை குறித்து பேசினார். அதில், ஐரோப்பாவிற்கு தனியாக பயணம் மேற்கொண்டேன். சினிமாவிற்கு வந்த பிறகு இப்படி தனியாக பயணம் செய்வது எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்றாக மாறிவிட்டதால் அவ்வப்போது தனியாக பயணம் செய்வேன்.

பணத்தை பறிகொடுத்தேன்

பணத்தை பறிகொடுத்தேன்

அப்போது, ஐரோப்பா, ரயில் நிலையத்தில் என் மீது ஒரு இளைஞர் மோதினார். அவர் என்னிடம் இருந்த பணம், உள்ளூர் பணம், அடையாள அட்டைகள், டிக்கெட் ஆகியவற்றை திருடிவிட்டார். நான் ரயிலில் ஏறியதும், எனது பை திருடுபோனதை கண்டு அதிர்ச்சி அடைந்தேன். என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து நின்றேன். இதையடுத்து, மேலாளரிடம் சென்று நடந்ததை கூறினேன்.

குடிக்க தண்ணீர் கூட தரவில்லை

குடிக்க தண்ணீர் கூட தரவில்லை

ஆனால், அந்த மேலாளர் என்னை ஒரு குற்றவாளி போல பார்த்தார். அங்கு இருந்தவர்கள் என்னை சோதனையும் செய்தனர். அந்த அலுவலகத்தில் ஒரு நாள் முழுக்க நான் அமர்ந்து இருந்தேன் ஆனால், குடிக்க தண்ணீர் கூட தரவில்லை. நான் தண்ணீர் தாகத்தால் துவண்டு போனேன். அப்போது தான் நம் நாட்டை நினைத்து மகிழ்ந்தேன். இங்கே ஒரு சமோசா விற்பவர் கூட உங்களுக்கு தண்ணீர் கொடுப்பார். இது தான் இந்தியா என்று பெருமையாக பேசினார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X