twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பத்மஸ்ரீ விருது வென்ற பாலிவுட் பிரபலங்கள்.. கங்கனா, கரண் ஜோஹர், ஏக்தா கபூருக்கு குவிகிறது வாழ்த்து!

    |

    மும்பை: குடியரசு தினத்தை முன்னிட்டு பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய இந்திய பிரபலங்களை கெளரவிக்கும் விதமாக பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

    பாலிவுட் திரை பிரபலங்களான கங்கனா ரனாவத், கரண் ஜோஹர், ஏக்தா கபூர் மற்றும் பாடகர் அத்னன் சமிக்கு பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

    திரை பிரபலங்கள் மட்டுமின்றி, விளையாட்டு, சமூக சேவை, கலை, இலக்கியம் என பல துறைகளில் பிரபலமானவர்களுக்கும் பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

    கங்கனா ரனாவத்

    கங்கனா ரனாவத்

    ஜெயம் ரவியின் தாம் தூம் படத்தில் நாயகியாக நடித்து தமிழில் அறிமுகமான கங்கனா ரனாவத், பாலிவுட்டில் முன்னணி நாயகியாக வலம் வருகிறார். குயின், மணிகர்ணிகா என பல ஹிட் படங்களில் நடித்துள்ள கங்கனா, தற்போது ஏ.எல். விஜய் இயக்கத்தில் உருவாகி வரும் தலைவி படத்தில் ஜெயலலிதாவாக நடித்து வருகிறார்.

    தாய் நாட்டிற்கு நன்றி

    தாய் நாட்டிற்கு நன்றி

    பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மீடியாவுக்கு பேட்டியளித்துள்ள நடிகை கங்கனா ரனாவத், தான் கெளரவிக்கப்பட்டுள்ளதாகவும், தன்னை அங்கீகரித்த தாய் நாட்டிற்கு நன்றி என்றும் தெரிவித்துள்ளார். மேலும், இந்த பத்ம விருதை தாய் நாட்டை நல்ல முறையில் வடிவமைக்கும் ஒவ்வொரு பெண்களுக்கும் சமர்பிக்கிறேன் எனக் கூறியுள்ளார்.

    கரண் ஜோஹர்

    கரண் ஜோஹர்

    பாலிவுட்டின் பிரபல தயாரிப்பாளரும் இயக்குநருமான கரண் ஜோஹருக்கு பத்ம ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 47வயதாகும் கரண் ஜோஹர் தர்மா புரொடக்‌ஷன் தயாரிப்பு நிறுவனத்தை வெற்றிகரமாக நடத்தி வருகிறார். கபி குஷி கபி கம் (2001), மை நேம் இஸ் கான்(2010), ஸ்டூடன்ட் ஆஃப் தி இயர் (2012) மற்றும் ஏய் தில் ஹை முஷ்கில் உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார்.

    மகிழ்ச்சி

    இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் சந்தோஷமான பதிவு ஒன்றை கரண் ஜோஹர் வெளியிட்டுள்ளார். இந்தியாவின் மிக உயரிய விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ விருது கிடைத்திருப்பது மகிழ்ச்சி. இந்த தருணத்தை உருவாக்கிக் கொடுத்த அனைவருக்கும் நன்றி, உங்களை மகிழ்விக்கும் பணியில் தொடர்ந்து செயல்படுவேன் என பதிவிட்டுள்ளார்.

    ஏக்தா கபூர்

    ஏக்தா கபூர்

    1994ம் ஆண்டு பாலாஜி டெலி ஃபிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கும் போது ஏக்தா கபூருக்கு வெறும் 17 வயது தான். பல போராட்டங்களுக்கு பிறகு டிவி தொடர்கள் தயாரிப்பு நிறுவனமான பாலாஜி டெலி ஃபிலிம்ஸை வெற்றிகரமாக ஒன்றாக செயல்படுத்தி சிறந்த பெண் தயாரிப்பாளருக்கான பல விருதுகளை குவித்துள்ளார் ஏக்தா கபூர்.

    டர்ட்டி பிக்சர்

    டிவி தொடர்களை தயாரித்து வெற்றி பெற்ற ஏக்தா கபூர், சினிமா படங்களை தயாரிப்பதிலும் பல சாதனைகளை புரிந்துள்ளார். ஏக்தா கபூர் தயாரிப்பில் வெளியான பல படங்கள் பாலிவுட்டில் சர்ச்சையை கிளப்பி வசூலை குவித்தன. லவ் செக்ஸ் அவுர் தோக்கா, ஒன்ஸ் அப்பான் எ டைம் இன் மும்பை, தி டர்ட்டி பிக்சர், உத்தா பஞ்சாப் மற்றும் வீரே தி வெட்டிங் உள்ளிட்ட பல படங்கள் இவர் தயாரிப்பில் வெளியாகியுள்ளன. அதிலும் சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாறு படமான டர்ட்டி பிக்சர் தேசிய விருதை தட்டிச் சென்றது.

    English summary
    Filmmakers Karan Johar, Ekta Kapoor and actor Kangana Ranaut are among the six film personalities to be awarded the Padma Shri, officials said on Saturday.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X