அட்ரா சக்க...அடுத்த அப்டேட்டா..ஷாருக்கான் – அட்லீ படத்தில் இத்தனை கோலிவுட் பிரபலங்களா
மும்பை : டைரக்டர் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் படம் பற்றிய அடுத்தடுத்த அப்டேட்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. ஒரே நாளில் பல அப்டேட்கள் வெளியாவதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்து வருகிறது.
அட்லீயே எழுதி, இயக்கும் இந்த படத்தில் ஹீரோயினாக நயன்தாரா நடிக்கிறார். ஷாருக்கான் நடிப்பதுடன் தயாரிப்பு வேலைகளையும் செய்கிறார். ராணுவ பின்பலம் கொண்ட கதை என்பதால் இந்த படத்திற்கு ஜவான் என பெயரிட்டுள்ளனர்.
இந்த படத்தின் ஷுட்டிங் புனேயில் நேற்று துவங்கி நடைபெற்று வருகிறது. இதற்காக நயன்தாராவும் புனே சென்றுள்ளார். இந்த படத்தில் நயன்தாராவுடன் இணைந்து மற்றொரு பிரபல தமிழ் ஹீரோயினான பிரியா மணியும் முக்கிய கேரக்டரில் நடிப்பதாக கூறப்பட்டது. பிரியாமணி ஏற்கனவே ஷாருக்கான் நடத்த சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் ஒரு பாடலுக்கு ஆடி உள்ளார்.

2 இசையமைப்பாளர்கள்
அத்துமட்டுமல்ல இந்த படத்திற்கு இரண்டு டாப் இசை அமைப்பாளர்கள் இசை அமைக்கிறார்கள் என்ற செம அப்டேட்டும் வெளியிடப்பட்டது. முதலில் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் தான் இசை அமைக்க போவதாக சொன்னார்கள். ஆனால் இவர் பாடல்களுக்கு மட்டும் தான் இசையமைக்க போகிறாராம். பேக்கிரவுண்ட் இசையை அனிருத் அமைக்க போகிறாராம்.

பிரியாமணியும் ஹீரோயினா
ஷாருக்கான் இரட்டை வேடத்தில் நடிக்கும் இந்த படத்தில் ஒரு கேரக்டருக்க நயன்தாராவும், மற்றொரு கேரக்டருக்கு பிரியாமணியும் ஜோடியாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. 8 ஆண்டுகளுக்கு பிறகு ஷாருக்கான் படத்தில் பிரியாமணி இணைந்துள்ளார்.

இவரும் இருக்காரா
மற்றொரு லேட்டஸ்ட் அப்டேட் என்னவென்றால், கோலிவுட்டின் டாப் காமெடியன் யோகிபாபுவும் ஜவான் படத்தில் நடிக்கிறாராம். ஷாருக்கான் படத்தில் யோகிபாபு நடிப்பது இது முதல் முறையல்ல. சென்னை எக்ஸ்பிரஸ் படத்திலும் யோகிபாபு சிறிய ரோலில் நடித்துள்ளார். ஆனால் இந்த முறை மிக முக்கியமான ரோலில் நடிக்க போகிறாராம். அட்லீ இயக்கிய பிகில் படத்தில் விஜய்யுடன் இணைந்து நடித்த யோகிபாபு, தற்போது ஷாருக்கானுடனும் இணைந்து நடிக்க உள்ளார்.

கோலிவுட் தான் மொத்தமும்
ஜவான் படத்தில் பாலிவுட் நட்சத்திரங்களான சானியா மல்கோத்ரா, சன்னி குரோவர் உள்ளிட்டோரும் முக்கிய ரோல்களில் நடிக்கிறார்களாம். ஆனால் பெரும்பாலான நடிகர்கள் மட்டுமல்ல தொழில்நுட்ப கலைஞர்களும் தென்னிந்திய சினிமாவை சேர்ந்தவர்கள் தானாம்.

செம படம்
ஜவான் படத்தின் ஒளிப்பதிவாளராக ஜி.கே.விஷ்ணுவையும், ப்ரொடக்ஷன் டிசைனராக முத்துராஜையும் முடிவு செய்துள்ளனராம். இவர்கள் அட்லீ இயக்கிய மெர்சல், பிகில் படங்களில் ஏற்கனவே பணியாற்றியவர்கள் தான். கோலிவுட், பாலிவுட்டை சேர்ந்த கலைஞர்கள் இணையும் சிறப்பான படமாக ஜவான் இருக்கும் என சொல்லப்படுகிறது.

ஆரம்பமே ஆக்ஷன் தான்
புனேயில் துவங்கி உள்ள படத்தின் முதல் கட்ட ஷுட்டிங்கில் நயன்தாராவும், பிரியாமணியும் கலந்து கொண்டுள்ளனர். முக்கிய மெட்ரோ ஸ்டேஷன்கள் ஒன்றில் படத்தின் சண்டைக்காட்சிகள் எடுக்கப்பட உள்ளதாம். அதைத் தொடர்ந்து மும்பையில் ஷுட்டிங் நடத்தப்பட உள்ளதாம்.


Click it and Unblock the Notifications











