ஹை புரஃபைலா இருந்தா இப்படிதான் விலை கொடுக்கணும்.. ஆர்யன் கான் கைது.. கொந்தளிக்கும் பிரபலம்!
மும்பை: போதை பொருள் பயன்படுத்திய வழக்கில் ஷாருக்கான் மகன் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் சினிமாத்துறையில் உயர் மட்டத்தில் இருந்தால் இப்படிதான் விலை கொடுக்க வேண்டும் என பிரபல பாடலாசிரியர் கொந்தளித்துள்ளார்.
பாலிவுட் நடிகரான ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் சொகுசு கப்பலில் நடந்த போதை பார்ட்டியில் பங்கேற்றதாகவும் போதை பொருளை பயன்படுத்தியதாகவும் கைது செய்யப்பட்டார்.
சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆர்யன் கானுக்கு தொடர்ந்து ஜாமீன் மறுக்கப்பட்டு வருகிறது.

இனிப்பு செய்யக் கூடாது
இதனால் ஷாருக்கானும் அவரது மனைவி கவுரி கானும் பெரும் மன உளைச்சலில் உள்ளனர். தனது மகன் சிறையில் இருந்து வீடு திரும்பும் வரை வீட்டில் எந்த இனிப்பு வகைகளும் செய்யக் கூடாது என ஷாருக்கானின் மனைவி கவுரி கான் வீட்டில் உள்ள வேலைக்காரர்களுக்கு உத்தரவு போட்டிருப்பதாக அண்மையில் தகவல் வெளியானது.

படப்பிடிப்பு ரத்து
மேலும் தனது பாலிவுட் தோழிகளையும் தன்னை சந்திக்க வீட்டிற்கு வரவேண்டாம் என கூறி உள்ளார் கவுரி கான். இதேபோல் ஷாருக்கானும் தனது படப்பிடிப்புகள் அனைத்தையும் ரத்து செய்துள்ளார். பாலிவுட் பிரபலங்கள் பலரும் ஆர்யன் கான் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

பாடலாசிரியர் ஜாவேத் அக்தர்
இந்நிலையில் பாலிவுட்டின் பிரபல பாடலாசிரியரான ஜாவேத் அக்தர், ஆர்யன் கான் கைது குறித்து கருத்து தெரிவித்துள்ளார். பாலிவுட்டில் நடக்கும் ரெய்டுகள் குறித்த கேள்விக்கு பதில் அளித்த ஜாவேத் அக்தர், பாலிவுட் சினிமாவில் உயர் மட்டத்தில் இருப்பவர்கள் கொடுக்கும் விலைதான் அது என தெரிவித்துள்ளார்.

பெரிய ஆளாக இல்லாவிட்டால்
மேலும் நீங்கள் உயர்ந்த நிலையில் இருக்கும்போது, மக்கள் உங்களை கீழே இழுத்து, உங்கள் மீது சேற்றை எறிந்து வேடிக்கை பார்க்கிறார்கள். நீங்கள் பெரிய ஆள் இல்லை என்றால், உங்கள் மீது யாரும் கற்களை வீச மாட்டார்கள் என்றும் கூறியுள்ளார்.

சூப்பர் ஸ்டார் மகன் கைது
மேலும் ஒன் பில்லியன் டாலர் மதிப்புள்ள கோகைன் போதை பொருள் கைப்பற்றப்பட்டது குறித்து பெரிதாக செய்தி வரவில்லை. ஆனால் சூப்பர் ஸ்டார் மகன் போதை பார்ட்டியில் பங்கேற்றது தேசிய அளவில் பெரிய செய்தி ஆகிவிட்டது என ஆர்யன் கான் கைதுக்கும் மறைமுகமாக அவர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

பெயில் மனு - மீண்டும் விசாரணை
தொடர்ந்து ஷாருக்கானும் அவரது மகன் ஆர்யன் கானும் டார்கெட் செய்யப்படுகிறார்களா என்ற கேள்விக்கு பதில் அளிக்க ஜாவேத் அக்தர் மறுத்துவிட்டார். இதனிடையே ஆர்யன் கானின் பெயில் மனு இன்று மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











