சான்ஸ்ன்னா இப்படி கிடைக்கனும்...டாப் நடிகைகளுக்கு ஹீரோவாக பாலிவுட்டில் என்ட்ரி கொடுக்கும் மகத்

சென்னை : சிம்பு நடித்த வல்லவன் படத்தில் சிறிய ரோலில் நடித்து, நடிகரானவர் மகத் ராகவேந்திரா. அடுத்து காளை, மங்காத்தா, பிரியாணி, ஜில்லா, வடசேரி, சென்னை 28- 2 உள்ளிட்ட பல படங்களில் சிறிய ரோல்களில் நடித்தார்.

2018 ல் விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 2 போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமானார். இந்த நிகழ்ச்சிக்கு பிறகு தனது நீண்ட நாள் காதலியை திருமணம் செய்து கொண்ட மகத்திற்கு சமீபத்தில் மகன் பிறந்துள்ளான்.

தமிழிலும் பிஸி

தமிழிலும் பிஸி

தற்போது தமிழில் கெட்டவன்னு பேரெடுத்த நல்லவன்டா, இவன் தான் உத்தமன், காதல் கண்டிஷன்ஸ் அப்ளை, 2030 ஆகிய படங்களில் நடித்து வருகிறார். சில தெலுங்கு படங்களிலும் நடித்துள்ள மகத், பாலிவுட் படங்களில் நடிக்க சான்ஸ் தேடி வந்தார்.

திடீரென கிடைத்த சான்ஸ்

திடீரென கிடைத்த சான்ஸ்

இரண்டு படங்களின் ஆடிஷன்களில் கூட மகத் கலந்து கொண்டார். ஆனால் அந்த படக்குழுவிடம் இருந்து எந்த பதிலும் வராததால் திரும்பி வந்து, சென்னையில் ஷுட்டிங்கில் கலந்து கொண்டுள்ளார். அப்போது மகத்தின் நண்பர் சதீஷ் போன் செய்து, முடாஸ்கர் கதை எழுதியுள்ள படத்திற்காக நடத்தப்பட்ட ஃபோட்டோஷுட்டில் மகத் பாஸ் செய்து விட்டதாக கூறி உள்ளார்.

 பாலிவுட் என்ட்ரி

பாலிவுட் என்ட்ரி

பிறகு ஜும் கால் மூலம் மகத்தை தொடர்பு கொண்ட முடாஸ்கர், படத்தின் முழு கதையையும் சொல்லி உள்ளார். பிறகு மெயிலிலும் கதையை அனுப்பி, இந்த படத்தில் நடிக்க மகத்தை புக் செய்துள்ளார்களாம். சத்ராம் ரமணி இயக்கும் இந்த படத்தின் மூலம் பாலிவுட்டில் என்ட்ரி கொடுக்க போகிறார் மகத்.

இவர் தான் ஹீரோயினா

இவர் தான் ஹீரோயினா

இதில் ஹாட் நியூஸ் என்னவென்றால், படத்தில் என்ன ரோல் என்றே தெரியாமல் தான் 40 நாட்கள் லண்டன் ஷுட்டிங்கிலும், பிறகு டெல்லி ஷுட்டிங்கிலும் மகத் கலந்து கொண்டுள்ளார். இந்த படத்தில் ஹீரோக்களில் ஒருவராக தான் மகத் நடிக்கிறாராம். மற்றொரு ஹீரோவாக ஜாஹிர் இக்பால் நடிக்கிறாராம். ஹீரோயின்களாக சோனாக்ஷி சின்ஹாவும், ஹுமா குரேஷியும் நடிக்கிறார்களாம்.

ஆடிப்போன மகத்

ஆடிப்போன மகத்

இந்த தகவலை கேட்டு ஷாக் ஆகி விட்டாராம் மகத். சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்திற்கு ஜோடியாக நடித்த அவர்களை தியேட்டரில் தான் பார்த்து, ஆஹா என பாராட்டி உள்ளேன். ஆனால் இன்று அவர்களுடன் நடிக்க போகிறேன் என்பது சொல்ல முடியாத உணர்வுகளையும், பெரிய சந்தோஷத்தையும் தருகிறது என தெரிவித்துள்ளார் மகத்.

அனுபவத்தை பகிர்ந்த மகத்

அனுபவத்தை பகிர்ந்த மகத்

மேலும் இந்த படத்தில் நடித்த அனுபவம் பற்றி மகத் கூறுகையில், சோனாக்ஷி- ஹுமா ஆகியோர் ஒரே டேக்கில் நடிக்க கூடியவர்கள். முதலில் அவர்களுடன் நடிப்பதற்கு பயமாக இருந்தது. பிறகு சத்ராம் ரமணி, முடாஸ்கர் ஆகியோர் தான் எனக்கு நம்பிக்கை கொடுத்து நடிக்க வைத்தனர். ஜாஹிருடன் நடிப்பது ஜாலியாக உள்ளது. ஒரு சகோதரரை போல் பழகுகிறார் என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X