அந்த ஹாலிவுட் நடிகர் மேல எனக்கு செம க்ரஷ்.. ஜொள்ளு விட்டுருக்கேன்.. பிரபல நடிகை ஓபன் டாக்!
மும்பை: பிரபல பாலிவுட் நடிகையான மலைக்கா அரோரா பிரபல நடிகர் மீது தனக்கு இருந்த க்ரஷ் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.
பிரபல பாலிவுட் நடிகையான மலைக்கா அரோரா நடிகர் சல்மான் கானின் சகோதரரும் நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என பல முகங்களை கொண்டவருமான அர்பாஸ் கானை காதலித்தார்.
பல ஆண்டு காதலுக்கு பிறகு 1998-ம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு அர்ஹான் கான் என்ற 17 வயது மகன் உள்ளார்.

கணவருடன் விவாகரத்து - புதிய காதல்
இந்நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2017ஆம் ஆண்டு மலைக்கா அரோராவும் அர்பாஸ் கானும் சட்டப்படி விவாகரத்து செய்து கொண்டனர். அதன்பிறகு மகன் அர்ஹான் கானுடன் வசித்து வருகிறார். அப்போது தான் பிரபல பாலிவுட் தயாரிப்பாளரான போனி கபூரின் மகன் அர்ஜூன் கபூருடன் மலைக்கா அரோராவுக்கு காதல் மலர்ந்தது.

ஒன்றாக டின்னர் டேட்டிங்
இருவரும் பல ஆண்டுகளாக காதல் உறவில் இருந்து வருகின்றனர். இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ள போகிறார்கள் என்ற தகவல் மட்டும் தகவலாகவே நீண்ட ஆண்டுகளாக உள்ளது. அண்மையில் இருவரும் ஒன்றாக டின்னர் டேட் சென்றனர்.

13 வயது சிறிய காதலர்
இருவரும் ஒருவர் கையை ஒருவர் பிடித்தபடி அந்த போட்டோக்கள் இணையத்தில் வைரலானது. இந்நிலையில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்து மலைக்கா அரோரா தன்னுடைய க்ரஷ் குறித்தும் தனது காதலரான 13 வயது சிறியவரான அர்ஜூன் கபூர் குறித்தும் மனம் திறந்து பேசியுள்ளார்.

நடிகர் மீது க்ரஷ்
அதாவது, அர்ஜூன் கபூர் தன்னை புரிந்து கொண்டவரும் தனக்கு எரிச்சலூட்டுபவருமாய் இருப்பதாக கூறியுள்ளார். மேலும் தனக்கு ஒரு நடிகர் மீது க்ரஷ் இருந்ததாகவும் கூறியுள்ளார் மலைக்கா அரோரா, அது வேறு யாருமல்ல ஹாலிவுட் படமான 'பாண்ட்' பட நடிகர் டேனியல் கிரேக். தங்களுக்குள் நல்ல பாண்ட் இருப்பதாகவும் கூறியுள்ளார் மலைக்கா.

நடிகை பெல்லா ஹடிட்
மேலும் பெண் க்ரஷ், நடிகை பெல்லா ஹடிட் தான் என்றும் நடிகை மலைக்கா அரோரா தெரிவித்துள்ளார். நீண்ட காலமாக தங்கள் உறவை இரகசியமாக வைத்திருந்த அர்ஜுன் கபூரும் மலைக்காவும் இறுதியாக 2019 இல் தங்கள் காதல் விவகாரத்தை வெளிப்படையாக ஒப்புக்கொண்டனர்.

மீடியா கவுரவம் கொடுத்ததால்
அதுகுறித்து பேசுகையில், மீடியா தங்களுக்கு கவுரவம் கொடுத்ததால் அர்ஜுன் கபூர் இந்த விஷயத்தை வெளிப்படுத்தியதாக கூறியுள்ளார். மேலும் அவரைப் பொறுத்தவரை, ஊடகங்கள் அதைப் பற்றி மிகவும் மரியாதையாகவும் நேர்மையாகவும் கண்ணியமாகவும் இருந்ததாக கூறியுள்ளார்.

உறவை பகிரங்கப்படுத்த ஒரு காரணம்
இதுவே தங்களின் உறவை பகிரங்கப்படுத்த ஒரு காரணம் என்றும் மலைக்கா அரோரா கூறியுள்ளார். அர்ஜுன் கபூரும் மலைக்கா அரோராவும் தொடர்ந்து காதல் உறவில் உள்ளனர். இருவரும் டேட்டிங் செல்லும் போட்டோக்கள் அடிக்கடி வெளியாகி இணையத்தை திணறடித்து வருகிறது.

பூத் போலீஸ் - கலவையான விமர்சனம்
அர்ஜூன் கபூர் கடைசியாக பூத் போலீஸ் என்ற படத்தில் நடித்தார. அந்த படத்தில் சைய்ஃப் அலிகான், ஜாக்குலின் ஃபெர்னான்டஸ், மற்றும் எம்மி கவுதம் ஆகியோர் லீடிங் ரோலில் நடித்தனர். இந்தப் படம் ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆனது. இந்தப் படம் கலவயான விமர்சனங்களை பெற்றது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











