இப்போதெல்லாம் நிர்வாணக் காட்சி எடுப்பது சர்வ சாதாரணமாகி விட்டது.. மல்லிகா ஷெராவத் ஓப்பன் டாக்!
மும்பை: முன்பெல்லாம் முத்தக் காட்சியை எடுப்பதே படங்களில் பெரும் சிரமமாக இருந்தது. ஆனால், இப்போதெல்லாம் பெண்களின் முழு நிர்வாணக் காட்சிக்கும் அனுமதியும் அங்கீகாரமும் கிடைக்கின்றன என பிரபல பாலிவுட் கவர்ச்சி நடிகை மல்லிகா ஷெராவத் கூறியுள்ளார்.
நகாப் எனும் இந்தி வெப் சீரிஸில் இஷா குப்தாவுடன் இணைந்து நடித்துள்ளார் மல்லிகா ஷெராவத்.
மர்டர் படத்தில் நிர்வாணக் காட்சியில் நடித்த போது மல்லிகா ஷெராவத்துக்கு ஏகப்பட்ட எதிர்ப்புகள் வந்ததாக செம ஓப்பனாக பேசியுள்ளார்.

கலாசலாவை மறக்க முடியுமா
சிம்புவின் ஒஸ்தி படத்தில் இடம்பெற்ற கலாசலா பாட்டுக்கு கவர்ச்சி குத்தாட்டம் போட்ட மல்லிகா ஷெராவத்தை அவ்வளவு எளிதாக ரசிகர்கள் மறந்திருக்க மாட்டார்கள். கமல்ஹாசனின் தசாவதாரம் படத்தில் வில்லன் கமல் ஃபெட்சருடன் இணைந்து நெகட்டிவ் ரோலிலும் இவர் நடித்திருப்பார். இந்நிலையில், மல்லிகா ஷெராவத் மீடியா ஒன்றுக்கு அளித்த பேட்டி வைரலாகி வருகிறது.

முத்தக் காட்சியே சிக்கல்
முன்பெல்லாம் ஹீரோவும் ஹீரோயினும் கிஸ் அடிக்கும் சீனை எடுப்பதே பெரிய சிக்கலாக இருக்கும். ஏகப்பட்ட எதிர்ப்புகள் வந்து குவியும். ஆனால், ரசிகர்களின் புரிதல் தற்போது நல்ல வளர்ச்சியை அடைந்திருக்கும் நிலையில், பல போல்டான காட்சிகள் இந்திய சினிமாக்களிலும் இடம்பெற்று வருகின்றன.

மர்டரில் நிர்வாணமாக
2004ம் ஆண்டு மல்லிகா ஷெராவத் நடிப்பில் வெளியான மர்டர் திரைப்படத்தில் நிர்வாணமாக அவர் நடித்த காட்சிகள் இடம்பெற்று மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. அந்த காட்சியில் நடித்ததற்காக பாலிவுட்டில் தன்னை பலரும் இழிவாக பேசினார்கள். ஆனால், இப்போது நிலைமையே வேறு என செம கூலாக பேசியுள்ளார்.

நிர்வாணத்துக்கு அங்கீகாரம்
ஹாலிவுட்டில் பல படங்களில் நடிகர்கள் மற்றும் நடிகைகள் முழு நிர்வாணமாக நடித்துள்ளனர். டைட்டானிக், கேம் ஆஃப் த்ரோன்ஸ் போன்ற உலக புகழ்பெற்ற படங்கள் மற்றும் வெப் தொடர்களிலும் நிர்வாணக் காட்சிகள் இன்றியமையாததாக அமைந்திருக்கும். சமீப காலமாக இந்திய ரசிகர்களும் பெண்களின் முழு நிர்வாண காட்சிகளுக்கும் அங்கீகாரம் கொடுத்துள்ளனர் என அந்த பேட்டியில் கவர்ச்சி நடிகை மல்லிகா ஷெராவத் வெளிப்படையாக கூறியுள்ளார்.

ஈஷா குப்தாவும்
சமீபத்தில் டாப் லெஸ் போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் ஷேர் செய்து ரசிகர்களை திணறடித்த பாலிவுட் நடிகை ஈஷா குப்தாவும் மல்லிகா ஷெராவத்தும் அந்த பேட்டியில் கலந்து கொண்டு பேசியிருந்தனர். இருவரும் இணைந்து நடித்த படு கவர்ச்சியான ஏகப்பட்ட அரை நிர்வாண காட்சிகள் நிறைந்த நகாப் வெப் தொடர் எம்.எக்ஸ் பிளேயரில் ஒளிபரப்பாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











