Don't Miss!
- News
டெல்லிக்கு பறக்கும் ‘இன்புட்ஸ்’.. பல ஆங்கிள்கள்.. பின்வாங்கும் பாஜக? மூத்த பத்திரிகையாளர் ‘பளிச்’!
- Sports
உலக கோப்பை ஹாக்கி.. 3வது முறையாக ஜெர்மனி சாம்பியன்.. பரபரப்பான டிவிஸ்டில் நடந்த இறுதிப் போட்டி
- Finance
பிப்ரவரி மாதத்தில் தமிழகத்தில் வங்கிகளுக்கு எத்தனை நாட்கள் விடுமுறை?
- Automobiles
ஹோண்டா ஆக்டிவா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை இவ்ளோதானா! எப்புட்றா என மண்டையை சொறியும் போட்டி நிறுவனங்கள்!
- Lifestyle
எடையை வேகமாக குறைக்க பழச்சாறு குடிப்பவரா நீங்கள்? இனிமே அந்த தப்ப பண்ணாதீங்க...!
- Technology
மூன்று அதிநவீன ஸ்மார்ட்வாட்ச் மாடல்களை கம்மி விலையில் இறக்கிவிட்ட Fire Boltt.!
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
- Education
TNTET 2022 paper 2 exam date :'டெட் பேப்பர் 2' தேர்வு அறிவிப்பு...!
ஷாருக்கானுக்கு கொரோனா..பாலிவுட்டை விடாமல் துரத்தும் கோவிட்...காரணம் என்ன தெரியுமா ?
மும்பை : பாலிவுட் பிரபலங்கள் பலருக்கும் அடுத்தடுத்து கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. கிட்டத்தட்ட 50 முதல் 55 பிரபலங்கள் கொரோனா தொற்றிற்கு ஆளாகி இருப்பதாக கூறப்படுகிறது.
நாடு முழுவதும் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க துவங்கி உள்ளது. கடந்த சில நாட்களாக இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 4000 க்கும் அதிகமாக இருந்து வருகிறது. டெல்லி, கர்நாடகா, கேரளா, தமிழகம், மகாராஷ்டிரா ஆகிய 5 மாநிலங்களில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஷாருக்கான்,
அட்லீ
பட
தலைப்பு
இதுதான்..
டபுள்
ரோலில்
டபுள்
ட்ரீட்!

ஷாருக்கான், கத்ரீனாவுக்கு கொரோனா
இந்த சமயத்தில் பாலிவுட்டை சேர்ந்த 50 க்கும் மேற்பட்ட பிரபலங்கள் அடுத்தடுத்து கொரோனா தொற்றிற்கு ஆளாகி வருகிறார்கள், பாலிவுட் சூப்பர் ஹீரோ ஷாருக்கானுக்கு நேற்று கொரோனா உறுதி செய்யப்பட்டதால், அவர் வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். ஷாருக்கானை தொடர்ந்து நடிகை கத்ரீனா கைஃபிற்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கத்ரீனாவிற்கு கடந்த ஆண்டு ஏப்ரல் மாதமும் கொரோனா தொற்று ஏற்பட்டது.

இத்தனை பேருக்கு கொரோனாவா
ஏற்கனவே கார்த்திக் ஆர்யான், ஆதித்ய ராய் கபூர் போன்ற பலருக்கும் கொரோனா பாசிடிவ் உறுதி செய்யப்பட்டிருப்பதாக அவர்களே தங்களின் சோஷியல் மீடியா பக்கங்களில் தெரிவித்திருந்தனர். இதுவரை 50 முதல் 55 பாலிவுட் பிரபலங்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

இப்படி தான் நோய் பரவியதா
சமீபத்தில் பாலிவுட்டின் முன்னணி டைரக்டர் கரன் ஜோகரின் 50 வது பிறந்தநாள் பார்ட்டி மும்பையில் நடைபெற்றது. இதில் பாலிவுட் பிரபலங்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த பார்ட்டியில் கரீனா கபூர் கான், ஜான்வி கபூர், ஷாருக்கான் உள்ளிட்ட 100 பேர் வரை கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்த பார்ட்டியில் கலந்து கொண்டு திரும்பிய பிறகு தான் ஷாருக்கானுக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவருக்கு நடத்தப்பட்ட சோதனையில் கோவிட் பாசிடிவ் உறுதி செய்யப்பட்டது.

பாலிவுட்டை விடாமல் துரத்துதே
கரன் ஜோகரின் பிறந்தநாள் பார்ட்டியில் கலந்து கொண்ட பிரபலங்களுக்கு தான் தற்போது கொரோனா உறுதி செய்யப்பட்டு வருகிறது. இதனால் பாலிவுட் ஸ்டூடியோக்களில் அதிகமானவர்கள் கூடுவது, அதிகமானவர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகளை நடத்துவது ஆகியவற்றை தவிர்க்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.