twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சானிட்டரி நாப்கினில் கிருஷ்ணர் படம்.. மசூம் சவால் பட போஸ்டர் சர்ச்சை.. இயக்குநரை விளாசும் ரசிகர்கள்!

    |

    மும்பை: Masoom Sawaal பட போஸ்டரில் சானிட்டரி நாப்கினில் கடவுள் கிருஷ்ணர் படம் இடம்பெற்று இருப்பது பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது.

    பாலிவுட்டில் ஏற்கனவே இந்துக் கடவுள்களை இழிவுப்படுத்தி அமீர்கான் உள்ளிட்ட பல நடிகர்கள் படம் எடுத்து வருவதாக பாலிவுட்டையே புறக்கணிக்க வேண்டும் என போர்க்கொடிகள் கிளம்பி வரும் நிலையில், இந்த போஸ்டர் மீண்டும் பூகம்பத்தை கிளப்பி உள்ளது.

    மசூம் சவால் பட இயக்குநர் சந்தோஷ் உபத்யாயாவை பாலிவுட் ரசிகர்கள் திட்டித் தீர்த்து வருகின்றனர்.

     நான் அல்லு அர்ஜூனின் மிகப்பெரிய ரசிகன்.. துல்கர் சல்மான் உற்சாகம்! நான் அல்லு அர்ஜூனின் மிகப்பெரிய ரசிகன்.. துல்கர் சல்மான் உற்சாகம்!

    சானிட்டரி நாப்கினில் கிருஷ்ணர்

    சானிட்டரி நாப்கினில் கிருஷ்ணர்


    இயக்குநர் சந்தோஷ் உபத்யாயா இயக்கத்தில் நிதான்ஷி கோயல், ஏகவல்லி கண்ணா உள்ளிட்டோர் நடித்துள்ள மசூம் சவால் படத்தின் போஸ்டரில் சானிட்டரி நாப்கினில் கிருஷ்ணர் படம் இடம்பெற்றது பாலிவுட்டில் பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது. வரும் ஆகஸ்ட் 5ம் தேதி வெளியாக உள்ள அந்த படத்தை தடை செய்ய வேண்டும் என ரசிகர்கள் கொந்தளித்துள்ளனர்.

    இதே பொழப்பா போச்சு

    இதே பொழப்பா போச்சு

    பாலிவுட் இயக்குநர்களுக்கும் நடிகர்களுக்கும் இந்து மதக் கடவுள்களை இழிவுப் படுத்துவதே பொழப்பா போச்சு என்றும் அனைவரும இந்து விரோதிகளாக மாறி விட்டனர் என பாலிவுட்டில் ரசிகர்கள் சோஷியல் மீடியாவில் இயக்குநர் சந்தோஷ் உபத்யாயாவை கண்டபடி திட்டித் தீர்த்து வருகின்றனர். மேலும், இந்த படத்தை தடை செய்ய வேண்டும் என்றும் புறக்கணிக்க வேண்டும் என ட்வீட் போட்டுத் தாக்கி வருகின்றனர்.

    மசூம் சவால் இயக்குநர் விளக்கம்

    மசூம் சவால் இயக்குநர் விளக்கம்

    பெண்களின் மாதவிடாய் பிரச்சனைகளுக்கு எதிரான மூடநம்பிக்கைகளை உடைக்கும் அளவிற்கு ஒரு கதையை உருவாக்கவே மசூம் சவால் படத்தை இயக்கினேன் என்றும் இந்து மதத்தினரின் நம்பிக்கையை புண்படுத்த நினைக்கவில்லை என இயக்குநர் சந்தோஷ் உபத்யாயா சமூக வலைதளத்தில் தனக்கு எதிராக வெடித்துள்ள சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க விளக்கம் கொடுத்துள்ளார்.

    அமீர்கான் படத்துக்கும் எதிர்ப்பு

    அமீர்கான் படத்துக்கும் எதிர்ப்பு

    மசூம் சவால் படத்திற்கு மட்டுமல்ல, நடிகர் அமீர்கானின் லால் சிங் சத்தா படத்தையும் தடை செய்ய வேண்டும் என பாலிவுட் ரசிகர்கள் தொடர்ந்து பாய்காட் பாலிவுட் ஹாஷ்டேக்கை டிரெண்ட் செய்து வருகின்றனர். ரசிகர்களின் கோபத்தை கன்ட்ரோல் செய்ய ஐ லவ் இந்தியா என் படத்தை புறக்கணிக்க வேண்டாம் என அமீர்கான் புதிய புரமோஷனையும் ஆரம்பித்துள்ளார்.

    English summary
    Bollywood movie Masoom Sawaal gets into trouble over Lord Krishna image in Sanitary Pad controversy. Bollywood fans stood against the movie release and trending boycott hashtags.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X