போதைப் பொருள் வழக்கு...ஷாருக்கான், அனன்யா பாண்டே வீடுகளில் ரெய்டு
மும்பை : போதைப் பொருள் பயன்படுத்திய வழக்கில் ஷாருக்கானின் மகன் ஆர்யான் கான், அவரது நண்பர்கள் உள்ளிட்ட 7 பேரை தேசிய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் அக்டோபர் 2 ம் தேதி கைது செய்தனர். அக்டோபர் 3 ம் தேதி முதல் ஆர்யான் கான் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

ஆர்யானை வெளியில் எடுக்க ஷாருக்கான் பல விதங்களில் முயற்சி செய்தும், ஆர்யானுக்கு ஜாமின் வழங்க என்சிபி அதிகாரிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் ஆரியானின் ஜாமின் மனு தொடர்ந்து நிராகரிக்கப்பட்டு வருகிறது.
Recommended Video
ஆர்யான் பல ஆண்டுகளாக போதைப் பொருள் பயன்படுத்தி வருவதாக கூறி ஏற்கனவே என்சிபி அதிகாரிகள், ஜாமின் வழங்க கூடாது என எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்நிலையில் புதிய ஆதாரமாக, பாலிவுட் நடிகை ஒருவருக்கு இதில் தொடர்பு இருப்பதாகவும், போதைப் பொருள் விவகாரம் தொடர்பாக ஆர்யான் கான், அந்த நடிகையிடம் வாட்ஸ்ஆப் சேட் மூலம் பேசிய ஆதாரங்கள் கோர்ட்டில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இதனால் ஐந்தாவது முறையாக நேற்றும் மும்பை சிறப்பு கோர்ட் ஆர்யானுக்கு ஜாமின் வழங்க மறுத்து விட்டது. இதனால் மகனை வீட்டு காவலிலாவது மாற்றும்படி ஷாருக்கான் தரப்பில் கோர்ட்டில் கேட்க முடிவு செய்துள்ளனர். இன்று ஆர்யானின் காவலை மேலும் நீட்டிக்கும் உத்தரவு வர உள்ளது. இந்நிலையில் இன்று மும்பை சிறையில் உள்ள மகனை நேரில் சென்று பார்த்து 16 நிமிடங்கள் பேசி உள்ளார் ஷாருக்கான்.
அதே சமயத்தில் தேசிய போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் பாலிவுட் நடிகை அனன்யா பாண்டே வீட்டில் திடீர் சோதனை நடத்தி உள்ளனர். இதைத் தொடர்ந்து பகல் 2 மணிக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராக அனன்யாவுக்கு அதிகாரிகள் சம்மனும் அனுப்பி உள்ளனர். இது பாலிவுட்டில் பரபரப்பை கிளப்பியது.
இந்த பரபரப்பு அடங்குவதற்குவதற்கு அடுத்த சில நிமிடங்களிலேயே மும்பை பாந்த்ராவில் உள்ள ஷாருக்கானின் மன்னட் பங்களாவில் என்சிபி அதிகாரிகள் சோதனை நடத்தி உள்ளனர். ஆர்யான் சிறையில் இருக்கும் போது ஷாருக்கான் வீட்டில் எதற்காக ரெய்டு நடத்த வேண்டும் என பலர் கேள்வி எழுப்பி உள்ளனர்.
இதற்கு பதிலளித்த அதிகாரிகள், விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஒரு இடத்திற்கு என்சிபி அதிகாரிகள் செல்கிறார்கள் என்றால் அவர் நேரடியாக போதைப் பொருள் விவகாரத்தில் தொடர்புடையவராக இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. பல நடைமுறைகள் உள்ளன. அதன் அடிப்படையிலேயே தற்போது ரெய்டு நடத்தப்படுகிறது என தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











