நாளைக்கும் கச்சேரி இருக்கு.. அனன்யா பாண்டேவை வறுத்தெடுக்கும் போதை தடுப்புப் பிரிவு அதிகாரிகள்!

மும்பை: அனன்யா பாண்டேவிடம் நடத்தப்பட்ட விசாரணை இன்று நிறைவடைந்த நிலையில் நாளை காலை மீண்டும் அவரிடம் விசாரணை நடத்த போதை தடுப்புப் பிரிவு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

Recommended Video

போதை பொருள் பயன்படுத்தினாரா VijayDevarkonda பட நடிகை Ananya Pandey | Shahrukh Khan

சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணத்திற்கு பிறகு பாலிவுட்டில் ஏகப்பட்ட பிரபல நடிகர்கள் மற்றும் நடிகைகள் போதைப் பொருள் விவகாரத்தில் சிக்கி வருகின்றனர்.

ஷாருக்கானின் மகன் ஆர்யான் கான் கைது செய்யப்பட்ட நிலையில், நடிகை அனன்யா பாண்டேவும் போதைப் பொருள் விசாரணை வளையத்திற்குள் சிக்கி உள்ளது பாலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

22 வயது நடிகை

22 வயது நடிகை

பாலிவுட்டில் ஏகப்பட்ட வாரிசு நடிகர்கள் திரையுலகை ஆட்சி செய்து வருகின்றனர். கடந்த 2019ம் ஆண்டு வெளியான ஸ்டூடன்ட் ஆஃப் தி இயர் 2 படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் அனன்யா பாண்டே. நடிகர் சுன்கி பாண்டேவின் மகளான இவர் விஜய தேவரகொண்டாவின் லைகர் படத்தில் நாயகியாக நடித்துள்ளார்.

போதை பொருள் வழக்கில்

போதை பொருள் வழக்கில்

பாலிவுட்டில் கடந்த ஓராண்டாக ஏகப்பட்ட முன்னணி நடிகர்கள் மற்றும் நடிகைகள் போதை பொருள் விவகாரத்தில் சிக்கி வருகின்றனர். தீபிகா படுகோனே, சாரா அலி கான், ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்ட பலரிடம் விசாரணை நடைபெற்றது. நடிகை ரியா சக்கரவர்த்தி போதைப் பொருள் விவகாரத்தில் கைது செய்யப்பட்டு சிறை தண்டனை அடைந்தார்.

ஷாருக்கான் மகன் கைது

ஷாருக்கான் மகன் கைது

சமீபத்தில், சொகுசு கப்பலில் நடைபெற்ற போதைப் பொருள் பார்ட்டியில் கலந்து கொண்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யான் கான் அதிரடியாக அக்டோபர் 8ம் தேதி கைது செய்யப்பட்டார். இன்னமும் அவருக்கு ஜாமின் கிடைக்காமல் மறுக்கப்பட்டு வருகிறது.

சிக்கிய இளம் நடிகை

சிக்கிய இளம் நடிகை

இந்நிலையில், ஆர்யான் கானின் சகோதரி சுஹானா கானின் தோழியும் இளம் நடிகையுமான அனன்யா பாண்டேவும் இந்த போதைப் பொருள் விவகாரத்தில் சிக்கியுள்ளதாக வெளியான தகவலை அடுத்து அவரது வீட்டில் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் இன்று அதிரடியாக சோதனை நடத்தினர். அதன் பின்னர் நடிகை அனன்யா பாண்டே NCB அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானார்.

லேப்டாப், மொபைல் கைப்பற்றல்

லேப்டாப், மொபைல் கைப்பற்றல்

நடிகை அனன்யா பாண்டேவின் வீட்டில் நடந்த சோதனையில் அவருடைய மொபைல் போன் மற்றும் லேப்டாப் உள்ளிட்ட பொருட்களை போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைப்பற்றினர். விசாரணைக்கு ஆஜரான அனன்யா பாண்டேவிடம் சில மணி நேரங்கள் தீவிர விசாரணை நடத்திய போலீசார் அவரை விடுவித்தனர்.

நாளைக்கும் கச்சேரி இருக்கு

நாளைக்கும் கச்சேரி இருக்கு

நடிகை அனன்யா பாண்டேவின் பெயர் வாட்ஸ் அப் உரையாடல்களில் சிக்கி உள்ள ஆதாரம் கிடைத்ததை வைத்தே அவரிடம் போலீசார் இந்த அதிரடி விசாரணையை மேற்கொண்டுள்ளதாகவும் நாளை காலை 11 மணிக்கு மீண்டும் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் முன்பாக விசாரணைக்கு அவர் ஆஜர் ஆக வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

போதைவுட்டாகிறதா பாலிவுட்?

போதைவுட்டாகிறதா பாலிவுட்?

தொடர்ந்து இப்படி பிரபல நடிகர்களும் நடிகர்களின் வாரிசுகளும் போதைப் பொருள் விவகாரத்தில் சிக்கி வரும் நிலையில், பாலிவுட் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அதிருப்தி ஏற்பட்டுள்ளது. நடிகை கங்கனா ரனாவத் வீடியோ பேட்டி ஒன்றில் 99 சதவீதம் நடிகர்கள் போதைக்கு அடிமையானவர்கள் தான் என கூறிய வீடியோவையும் நெட்டிசன்கள் வைரலாக்கி ஒட்டுமொத்த பாலிவுட் நடிகர்களையும் விளாசி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X