கரீனா கபூருக்கு கிளம்பிய எதிர்ப்பு.. சத்தமே இல்லாமல் கங்கனா ரனாவத்துக்கு வந்த ’சீதா’ படம்!

மும்பை: 'சீதா' எனும் தலைப்பில் பிரம்மாண்டமாக உருவாக உள்ள இதிகாச திரைப்படத்தில் நடிகை கங்கனா ரனாவத் சீதையாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.

Recommended Video

Thalaivi Kangana Ranaut EXCLUSIVE INTERVIEW | Vijay தான் என்னோட Ultimate Hero

சீதா படத்தில் நடிப்பதற்காக 12 கோடி ரூபாய் சம்பளத்தை நடிகை கரீனா கபூர் கேட்டதாக தகவல்கள் வெளியாகின.

பாலிவுட் நடிகர் சைஃப் அலி கானை திருமணம் செய்து கொண்டு இஸ்லாம் மதத்திற்கு மாறிய கரீனா கபூர் கான் தேவி சீதையாக நடிக்கக் கூடாது என பெரும் எதிர்ப்புகள் கிளம்பின.

கங்கனா நடிக்கணும்

கங்கனா நடிக்கணும்

மேலும், ஜான்சி ராணியாக நடித்து மணிகர்ணிகா படத்தில் மிரட்டிய நடிகை கங்கனா ரனாவத் தான் தேவி சீதையாக நடிக்க சரியான தேர்வாக இருப்பார் என ஏகப்பட்ட கங்கனா ரனாவத் ரசிகர்கள் ட்விட்டரில் பெரிய பிரச்சனையையே கிளப்பினர். இந்நிலையில், கங்கனா ரனாவத் ரசிகர்கள் எதிர்பார்த்த அந்த விஷயம் நடந்தேறி உள்ளது.

இதிகாச படங்கள்

இதிகாச படங்கள்

பாலிவுட்டில் மீண்டும் இதிகாச படங்கள் அதிகளவில் உருவாக ஆரம்பித்துள்ளன. மகாபாரதம் மற்றும் ராமாயண கதைகளை திரைப்படமாக எடுக்கவே பல தயாரிப்பாளர்களும் இயக்குநர்களும் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதே ராமாயண கதையை மையப்படுத்தி பிரபாஸ், சைஃப் அலி கான் நடிக்கும் ஆதிபுருஷ் திரைப்படம் உருவாகி வருகிறது. அந்த படத்தில் சீதையாக க்ரித்தி சனோன் நடித்து வருகிறார்.

ராஜமெளலியின் அப்பா

ராஜமெளலியின் அப்பா

பாகுபலி படத்தின் கதையாசிரியரும் இயக்குநர் ராஜமெளலியின் அப்பாவுமான கே.வி. விஜயேந்திர பிரசாத் தான் SITA - The Incarnation படத்திற்கு திரைக்கதை வசனம் எழுதியுள்ளார். இந்த படத்தை இயக்குநர் ஆலாகிக் தேசாய் இயக்க உள்ளார். ராமாயண இதிகாசத்தில் வரும் தேவி சீதையை மையப்படுத்தி இந்த படம் உருவாக உள்ளது.

சீதையாக கரீனா

சீதையாக கரீனா

முதலில் இந்த படத்திற்கு சீதையாக நடிக்க பாலிவுட் நடிகை கரீனா கபூரிடம் தான் பேச்சுவார்த்தை நடைபெற்றது. சீதையாக நடிக்க 12 கோடி ரூபாய் கொடுத்தால் தான் நடிப்பேன் என அவர் சொன்னதாக வெளியான தகவல்கள் பாலிவுட் ரசிகர்கள் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

ஏற்க முடியாது

ஏற்க முடியாது

பாலிவுட் நடிகர் சைஃப் அலி கானை திருமணம் செய்து கொண்டு இஸ்லாமிய மதத்திற்கு மாறிய கரீனா கபூர் எப்படி இந்து மதத்தினர் வழிபடும் தேவி சீதா கதாபாத்திரத்தில் நடிக்க முடியும் என்றும் அதனை ரசிகர்கள் யாரும் ஏற்க மாட்டோம் என்றும் பாலிவுட் நெட்டிசன்கள் கரீனாவுக்கு எதிரான கண்டனங்களை எழுப்பி இந்தியளவில் டிரெண்ட் செய்தனர்.

கங்கனா தான் சீதை

கங்கனா தான் சீதை

சீதையாக நடிக்க 12 கோடி ரூபாய் கேட்ட விவகாரம் மற்றும் கரீனா கபூர் கான் சீதையாக நடிக்கக் கூடாது என கிளம்பிய் எதிர்ப்புகள் காரணமாக படக்குழுவினர் கரீனா கபூரை கழட்டி விட்டு கங்கனா ரனாவத்தை சீதையாக நடிக்க வைக்க ஒப்பந்தம் செய்து அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிட்டுள்ளனர்.

ஜெயலலிதாவாக

ஜெயலலிதாவாக

ஜான்சி ராணியாக நடித்து கலக்கிய கங்கனா ரனாவத் இயக்குநர் ஏ.எல். விஜய் இயக்கத்தில் வெளியான தலைவி படத்தில் ஜெயலலிதாவாகவும் நடித்து நல்ல நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். இந்நிலையில், அடுத்ததாக தேவி சீதையாகவும் நடித்து அசத்த உள்ளார். பிரம்மாண்ட படங்கள் அதிக பட்ஜெட்டில் எடுத்தாலும் தியேட்டரில் வெளியிட முடியாமல் தவித்து வரும் நிலையிலும் இது போன்ற படங்களை உருவாக்கவும் தனி தைரியம் வேண்டும் தான்.

ராமர் யார்

ராமர் யார்

கங்கனா ரனாவத் சீதையாக நடிக்க உள்ள படத்தில் ராமராக யார் நடிக்கப் போகிறார்? ராவணன் யார்? என்கிற கேள்விகளும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளன. பெரிய பாலிவுட் நடிகர்கள் கங்கனா ரனாவத் உடன் இணைந்து நடிப்பார்களா? என்கிற கேள்விகளும் பாக்ஸ் ஆபிஸ் நடிகர்களை போடவில்லை என்றால் படத்தின் வியாபாரம் தலைவி போல டல் அடிக்குமே என்கிற பேச்சுகளும் எழுந்துள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X