twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அதற்கு முன்பு வரை, ஃபிளாப் நடிகர் என்றே முத்திரைக் குத்தி இருந்தார்கள்.. பிரபல நடிகர் வருத்தம்!

    By
    |

    மும்பை: அந்த தொடருக்கு முன் வரை, என்னை பிளாப் நடிகர் என்றே கூறிவந்தார்கள் என்று பிரபல நடிகர் தெரிவித்துள்ளார்.

    Recommended Video

    Doordarshan Re telecasts Shaktimaan and Ramayana

    பிரபல இந்தி நடிகர் முகேஷ் கண்ணா. தூர்தர்ஷனில் ஒளிபரப்பான மகாபாரதம் தொடரில் பீஷ்மராக நடித்து புகழ்பெற்றவர் இவர்.

    இந்தியில் முஜே கசம் ஹே, ரூஹி, கேப்டன் பார்ரி, சுகந்த, மேரி ஆன் உட்பட பல படங்களில் நடித்துள்ளார்.

    ஒண்ணும் புரியலையே.. ஒரே குழப்பமா இருக்கே.. இந்த பிகினி போஸில் பிரியங்கா சோப்ரா என்ன சொல்ல வராங்க?ஒண்ணும் புரியலையே.. ஒரே குழப்பமா இருக்கே.. இந்த பிகினி போஸில் பிரியங்கா சோப்ரா என்ன சொல்ல வராங்க?

     சூப்பர் ஹீரோ

    சூப்பர் ஹீரோ

    தூர்தர்ஷனில் ஒளிபரப்பான 'சக்திமான்' தொடர் மூலம் இன்னும் பிரபலமானார். சூப்பர் ஹீரோ, ஆக்‌ஷன் காமெடி தொடரான இது, குழந்தைகளுக்குப் பிடித்த தொடராக வெளியான காலகட்டத்தில் இருந்தது. அதிகம் பேரால் பார்க்கப்பட்ட தொடராகவும் இது அமைந்தது. இதையடுத்து அதிக பிரபலம் அடைந்தார், முகேஷ் கண்ணா.

     மகாபாரதம்

    மகாபாரதம்

    கொரோனா லாக்டவுன் காரணமாக, தூா்தா்ஷனில் ராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாசத் தொடா்களை மீண்டும் ஒளிபரப்பினர். இந்த தொடா்களுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது. 1988 ஆம் ஆண்டு ஒளிபரப்பான மகாபாரதம் தொடரில், நிதிஷ் பரத்வாஜ் கிருஷ்ணராகவும் முகேஷ் கண்ணா பீஷ்மராக நடித்திருந்தனர். பி.ஆர்.சோப்ரா இயக்கி தயாரித்திருந்தார்.

     பிளாப் நடிகர்

    பிளாப் நடிகர்

    இவர், 'மகாபாரத'த் தொடருக்கு முன் தன்னை ஃபிளாப் நடிகர் என்றே முத்திரை குத்தினார்கள் என்று இப்போது தெரிவித்துள்ளார். அவர் கூறும்போது, 'அந்த தொடருக்கு முன் நான் நடித்த படங்கள் தொடர்ந்து தோல்வி அடைந்தன. இதனால் அதிக ஏமாற்றமடைந்தேன். மக்கள், என்னை ஃபிளாப் நடிகர் என்றே முத்திரை குத்தி இருந்தார்கள்.

     விரும்பவில்லை

    விரும்பவில்லை

    ரயிலில் பயணம் செய்யும் போது, ரசிகர்கள் அடையாளம் கண்டு, 'நீங்க முகேஷ் கண்ணாதானே' என்று கேட்டால், நான் அவர் தம்பி என்று சொல்லிவிடுவேன். நான் மக்களை எதிர்கொள்ள விரும்பவில்லை. ஆனால், மகாபாரதத் தொடருக்குப் பின்னால் நிலைமை மாறிவிட்டது. எனது கேரக்டருக்காக மக்கள் என்னை ரசிக்கத் தொடங்கினார்கள்.

     ரஹி மசூம் ராஸா

    ரஹி மசூம் ராஸா

    இந்த தொடருக்காக எனக்கு கிடைத்த புகழின் பெரும்பகுதியை, இந்த தொடருக்கு வசனம் எழுதிய டாக்டர் ரஹி மசூம் ராஸாவுக்கு வழங்குகிறேன். எனது கேரக்டருக்கு அவரது பேனா தொடர்ந்து எழுதிக்கொண்டே இருந்தது. அதனால்தான் பீஷ்மர் கேரக்டர், என்னை பலரது வீட்டில் ஒருவனாக மாற்றியது' என்று தெரிவித்துள்ளார்.

    English summary
    People labelled me as a flop actor, I was deeply disappointed: Mukesh Khanna
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X