Don't Miss!
- News
எடப்பாடிக்கு அடி மேல் அடி.. அதிமுக அலுவலக சாவியும் கையை விட்டுப் போகுமா? - வந்த ‘நெகட்டிவ்’ சிக்னல்!
- Travel
இயற்கை ஆர்வலர்களின் பக்கெட் லிஸ்ட்டில் இருக்கும் ஒரு புதையல் – கர்நாடகாவில் கட்டாயம் பார்க்கவேண்டிய இடம்!
- Finance
பள்ளி-க்கு 30 லட்சம், கல்லூரிக்கு 1 கோடி.. மிடில் கிளாஸ் பெற்றோர்கள் ஷாக்..!
- Technology
கம்மி விலையில் 50MP கேமரா, 6000mAh பேட்டரியுடன் அறிமுகமான சூப்பர் போன்.!
- Lifestyle
செவ்வாய் 66 நாட்கள் ரிஷப ராசியில் இருப்பதால் இந்த ராசிக்காரர்களின் செல்வம் பெருகப் போகுது...
- Automobiles
மோதி பாத்திருவோம்... டாடாவின் வயிற்றில் புளியை கரைக்கும் மாருதி ஆல்டோ கார்! புதிய அவதாரத்தில் நாளைக்கு லான்ச்!
- Sports
ப்ளேயிங் 11ல் 5 ஓப்பனிங் வீரர்கள்.. ஜிம்பாப்வே தொடரில் வித்தியாசமான இந்திய அணி.. இதை கவனத்தீர்களா??
- Education
ஹாய் குட்டீஸ் வாங்க கொடியேற்றலாம்...!
திருமணத்திற்கு முன்பே கர்ப்பம்.. நடிகையின் விவகாரமான ஆசை !
மும்பை : சர்ச்சை நாயகியான ராக்கி சாவந்த் திருமணத்திற்கு முன்பே கர்ப்பமானாலும் பரவாயில்லை என்று விவகாரமான பதிலளித்து அனைவரையும் வாய்பிளக்க வைத்துள்ளார்.
ராக்கி சாவந்த், ஆண் நண்பருக்கு பொது இடத்தில் முத்தம் கொடுப்பது, அரைகுறை ஆடை, ஆபாச ஆட்டம், எல்லை மீறிய கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு அவ்வப்போது சர்ச்சையில் சிக்குவார்.
இவர் தமிழில் என் சகியே, முத்திரை ஆகிய படங்களில் ஒரே ஒரு ஐட்டம் பாடலுக்கு மட்டும் நடனம் ஆடி உள்ளார்.
நாசருக்கு சினிமா தான் மூச்சு.. வதந்தியை பரப்ப வேண்டாம்.. டென்ஷனான கமீலா நாசர்!

ராக்கி சாவந்த்
சல்மான் கான் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 1 மற்றும் சீசன் 14 மற்றும் சமீபத்தில் முடிந்த சீசன் 15 நிகழ்ச்சியிலும் ராக்கி சாவந்த் கலந்து கொண்டுள்ளார். ஆனால், ஒரு முறை கூட வெற்றி பெற்றதில்லை. கடந்த ஆண்டு ரித்தேஷ் என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டதாவும் தனக்கு அற்புதமான கணவர் கிடைத்து இருப்பதாகவும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கூறியிருந்தார்.

காதலனை பிரிந்தார்
பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் ரித்தேஷ்ஷை அனைவருக்கும் அறிமுகம் செய்து வைத்தார். இதையடுத்து, ரிதேஷ், ஏற்கனவே திருமணம் ஆனவர் என்பதுடன், அவர் மீது அவரது முதல் மனைவி பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தியிருந்தார் என்பதும் ஊடகங்களில் பரபரப்பாக பேசப்பட்டது. இதையடுத்து, காதலர் தினத்தன்று தனது கணவரை விட்டு பிரிந்து விட்டதாக கண்ணீர் மல்க கூறியிருந்தார்.

இனி நோ கவர்ச்சி
இதையடுத்து, ஆதில் கான் துரானி என்பவரை காதலிப்பதாக அறிவித்தார். ஆதில், அவரது குடும்பத்தினரிடம் என்னை அறிமுகப்படுத்தி வைத்தார் என்றும், அவரது குடும்பத்தில் இருந்து சில எதிர்ப்புகள் எழுந்துள்ளதாகவும். ஆனால், என் கடந்த காலத்தைப் பற்றியும் அவரிடம் எதையும் மறைக்காமல் கூறிவிட்டேன் என்று கூறியிருந்தார். மேலும், எனது காதலர் நான் முழுசா கவர் பண்ணும் ஆடைகளை அணியுமாறு ஆசைப்படுவதாகவும், அவருக்காக இனி கவர்ச்சியான ஆடைகளை அணியமாட்டேன் என்று கூறியிருந்தார்.

‘'Any good News''
இதையடுத்து, காதல் ஜோடிப்புறவாக சுற்றி வரும் இந்த ஜோடி சமீபத்தில் கிளினிக்கிலிருந்து வெளியே வருவதைக் பார்த்த செய்தியாளர்கள், அவரிடம் ''Any good News'' என்று கேட்டுள்ளார். அதாவது விசேஷமா என்று கேட்டுள்ளனர். இந்த கேள்வியால் குஷியான ராக்கி சாவந்த், இப்போதைக்கு கர்ப்பம் இல்லை என்றும், திருமணத்திற்கு முன்பே கர்ப்பமானாலும் கவலை இல்லை. கர்ப்பமான மறுநாளே திருமணம் செய்துகொள்வேன் என்று கூறியுள்ளார்.