முதல் குழந்தையை வரவேற்க தயாராகும் பிரியங்கா சோப்ரா... அதிர்ச்சியில் ரசிகர்கள்...ஏன் தெரியுமா?
மும்பை : தாங்கள் முதல் குழந்தையை வரவேற்க தயாராகி வருவதாக நடிகை பிரியங்கா சோப்ரா மற்றும் அவரது கணவர் நிக் ஜோன்ஸ் அறிவித்துள்ளனர். பிரியங்காவின் இந்த அறிவிப்பால் ரசிகர்கள் அதிர்ச்சி கலந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
Recommended Video
2000 ம் ஆண்டு உலக அழகி பட்டம் வென்ற பிரியங்கா சோப்ரா. தமிழில் விஜய் நடித்த தமிழன் படத்தின் மூலம் நடிகையாகவும், அந்த படத்தில் விஜய்யுடன் இணைந்து ஒரு பாடலையும் பாடி பாடகியாகவும் அறிமுகமானார். ஒரே படத்தோடு பாலிவுட் பக்கம் சென்றவர் செம பிஸியாகி விட்டார். அடுத்தடுத்த படங்களின் வெற்றியால் முன்னணி நடிகையாகி விட்டார்.

வயது குறைந்தவருடன் திருமணம்
பாலிவுட்டை தொடர்ந்து ஹாலிவுட்டிலும் தடம் பதித்தார். நடிகை, தயாரிப்பாளர், பாடகி, தொழிலதிபர் என பல அவதாரங்களை எடுத்தார் பிரியங்கா சோப்ரா. தன்னை விட 10 வயது குறைந்த அமெரிக்க பாடகரான நிக் ஜோன்சை காதலித்து திருமணம் செய்து கொண்டார் பிரியங்கா. இதுவே பாலிவுட்டில் சலசலப்பை ஏற்படுத்தியது. திருமணத்திற்கு பிறகும் மார்க்கெட் டல் அடிக்காமல், தொடர்ந்து பாலிவுட்டில் செம பிஸி நடிகையாக வலம் வந்தார் பிரியங்கா சோப்ரா.

பிரம்மாண்ட திருமணம்
2018 ம் ஆண்டு பிரியங்கா சோப்ரா - நிக் ஜோன்ஸ் திருமணம் நடைபெற்றது. கிறிஸ்தவ மற்றும் இந்து முறைப்படி இந்த திருமணம் 3 நாட்கள் விழாவாக நடைபெற்றது. ராஜஸ்தானில் உள்ள புகழ்பெற்ற உமைத் பகவான் அரண்மனையில் மிக பிரம்மாண்டமாக பாரம்பரிய முறைப்படி இவர்களின் திருமணம் நடைபெற்றது.

விவாகரத்து வதந்தியில் பிரியங்கா
சமீபத்தில் அமெரிக்காவில் இந்திய உணவகம் ஒன்றை துவக்கினார் பிரியங்கா. அதைத் தொடர்ந்து தனது திரையுலக பயணம் பற்றிய சுயசரிதை புத்தகம் ஒன்றை எழுதினார். இதில் பல டைரக்டர்கள், தயாரிப்பாளர்கள் பற்றி இவர் ஓப்பனாக எழுதிய விஷயங்கள் கடும் சர்ச்சையானது. இந்த சர்ச்சை அடங்குவதற்குள், பிரியங்கா சோப்ரா தனது கணவரை விவாகரத்து செய்ய போவதாக தகவல்கள் பரவின. அவற்றை தொடர்ந்து மறுத்து வந்த பிரியங்கா, சமீபத்தில் தனது கணவருடன் நெருக்கமாக புத்தாண்டு கொண்டாடிய போட்டோக்களை வெளியிட்டு, வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

முதல் குழந்தை இந்த முறையிலா
இந்நிலையில் தற்போது, வாடகை தாய் மூலம் தாங்கள் முதல் குழந்தையை வரவேற்க தயாராகி வருவதாக பிரியங்கா சோப்ரா அறிவித்துள்ளார். இந்த மகிழ்ச்சியான தகவலை இருவரும் தங்களின் சோஷியல் மீடியா பக்கங்களில் பகிர்ந்துள்ளனர். எங்களின் குடும்பத்தில் நாங்கள் கவனம் செலுத்த விரும்புகிறோம். தங்களின் இந்த தனிப்பட்ட முடிவுக்கு மரியாதை அளிக்கும் படி கேட்டுக் கொண்டுள்ளனர்.

பிரபலங்கள் வாழ்த்து
பிரியங்கா சோப்ரா மற்றும் நிக் ஜோன்ஸ் இந்த தகவலை பகிர்ந்த சிறிது நேரத்திலேயே பிரபலங்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவிக்க துவங்கி விட்டனர். நடிகைகள் ஹுமா குரேஷி, பூஜா ஹெக்டே உள்ளிட்ட பலரும் வாழ்த்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











