Don't Miss!
- News
ஒரே வார்த்தை.. ‛வீக்’கான ஓபிஎஸ்.. உச்சத்தில் ஈபிஎஸ்..உச்சநீதிமன்ற உத்தரவால் அதிரடி திருப்பம்.. ஏன்?
- Lifestyle
உங்க வீட்டில் செல்வம் அதிகம் சேர வேண்டுமா? அப்ப இந்த பொருட்களை வாங்கி வீட்டுல வையுங்க...
- Automobiles
திடீரென உயர்த்தப்பட்ட பெட்ரோல்/டீசல் விலை! பட்ஜெட்டில் வெளியான பகீர் ஆய்வு!
- Technology
ஒப்போ ரெனோ8 டி 5ஜி ஃபர்ஸ்ட் லுக்: பவர்-பேக்டு அம்சங்களுடன் இன்னொரு பவர்ஃபுல் ஸ்மார்ட்போன்!
- Sports
விராட் கோலி இனி தேவையில்லை.. இவருக்கு இனி வாய்ப்பு கொடுங்க.. தினேஷ் கார்த்திக் கருத்து
- Finance
இண்டிகோ: லாபம் 1000% வளர்ச்சி..! அடேங்கப்பா, என்ன காரணம் தெரியுமா..?
- Travel
இந்தியாவிலேயே அதிக விருந்தோம்பல் செய்து அவார்ட் வாங்கிய இடம் புதுச்சேரி தானாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
விசாவுக்காக திருமணம்… மனம் திறந்த ராதிகா ஆப்தே!
மும்பை : பாலிவுட் நடிகை ராதிகா ஆப்தே தனது திருமணம் குறித்து அளித்துள்ள பேட்டி இணையவாசிகளை முகம் சுளிக்க வைத்துள்ளது.
ராதிகா ஆப்தே பல திரைப்படங்களை கையில் வைத்துக்கொண்டு பிஸியாக நடித்து வருகிறார்.
அரண்மனை
டைரக்டருடன்
கை
கோர்க்கிறாரா
தனுஷ்?
ராதிகா ஆப்தே இல்லாத வெப் சீரிஸ்களே இல்லை என்ற அளவிற்கு படு பிசியாக நடித்து வருகிறார்.

ராதிகா ஆப்தே
தமிழ்நாட்டை பூர்வீகமாகக் கொண்டவர்தான் ராதிகா ஆப்தே. இவரின் தந்தை பூனாவில் ஒரு பிரபல நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர். சினிமா மீது இருந்த ஆவர்வத்தால் கலைத்துறையில் நுழைந்தார். 2005ம் ஆண்டு லைஃப் ஹோ தோ ஐஸ் இந்தி திரைப்படத்தின் மூலம் தனது அறிமுகத்தை கொடுத்தார்.

பல படங்களில்
இந்தித் திரைப்படங்களைத் தவிர, மலையாளம், பெங்காலி, மராத்தி, தமிழ் மற்றும் ஆங்கிலப் படங்களிலும் ராதிகா நடித்துள்ளார். அந்தாதுன், பேட்மேன், லஸ்ட் ஸ்டோரிஸ் மற்றும் மாஞ்சி - தி மவுண்டன் மேன் போன்ற வெற்றிப் படங்களில் நடித்துள்ளார். இந்த திரைப்படங்களில் மூலம் மில்லியன் கணக்கான இதயங்களில் இடம் பிடித்துள்ளார் ராதிகாஆப்தே.

கபாலி படத்தில்
ரஜினிகாந்த்துடன் கபாலி திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தார். மேலும் ஆல் இன் ஆல் அழகுராஜா திரைப்படத்தில் நடித்துள்ளார். 2016ம் ஆண்டு வெளியான பர்ச் என்ற திரைப்படத்தில் நிர்வாண காட்சிகளில் நடித்து சர்ச்சைக்குள்ளாகி பேசு பொருளானார்.

திருமணம் செய்துகொண்டேன்
இந்நிலையில் தற்போது இவர், ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் எனக்கு திருமணத்தில் மீது நம்பிக்கை இல்லை. இருப்பினும் நான் 8 வருடங்களுக்கு முன்பு இங்கிலாந்தை சேர்ந்த பெனட்டிக் டைலர் என்ற இசைக் கலைஞரை திருமணம் செய்து கொண்டேன் என்று கூறியுள்ளார்.

விசாவுக்காக
விசா பெருவதில் தொடர்ந்து பிரச்சனை ஏற்பட்டதால், விசா வாங்குவதற்காக திருமணம் செய்து கொண்டேன். இங்கிலாந்து இளைஞரை மணந்தாலும் இப்போது நான் இந்தியாவில் தான் வசித்து வருகிறேன். அவ்வப்போது இங்கிலாந்துக்கு சென்று எனது கணவரை சந்தித்துவிட்டு வருகிறேன் கூறியுள்ளார்.

புனிதமானது
திருமணம் என்பது புனிதமானது, அதை போற்றவேண்டும் ஆனால், ராதிகா ஆப்தே விசாவுக்காக திருமணம் செய்து கொண்டேன் என்று கூறியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பலர் தமிழ் நாட்டை பூர்வீகமாக கொண்ட நீங்கள் இப்படி செய்யலாமா என்றும் நெட்டிசன்ஸ் கேட்டு வருகின்றனர்.'