இன்ஸ்டாகிராம், ட்விட்டர் கணக்குகளை அகற்றிய ராஜ் குந்த்ரா
மும்பை : பாலிவுட் பிரபல நடிகையும், தொழிலதிபருமான ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா, ஆபாச படம் எடுத்த விவகாரத்தில் ஜுலை மாதம் கைது செய்யப்பட்டார். அவருக்கு எதிராக நடிகைகள் பலரும் பல புகார்களை கூறி வந்தனர்.
ராஜ் குந்த்ரா விவகாரம் தொடர்பாக பாலிவுட்டில் பலரிடம் விசாரிக்கப்பட்டது. நடிகைகள் பலரும் ராஜ் குந்த்ராவிற்கு எதிராக பல அதிர்ச்சி தகவல்களை வெளியிட்டனர். இதனால் பாலிவுட்டே பரபரப்பானது. ராஜ் குந்த்ரா பலமுறை ஜாமினுக்கு முயற்சித்தும் கிடைக்கவில்லை.

வெளியில் தலைகாட்டாத ராஜ்குந்த்ரா
கிட்டதட்ட இரண்டு மாத சிறை தண்டனைக்கு பிறகு செப்டம்பர் 21 ம் தேதி சிறையில் இருந்து ஜாமினில் வெளியே வந்தார் ராஜ்குந்த்ரா. ஆபாச படம் எடுத்து, அதை சில மொபைல் ஆப்களில் வெளியிட்டதாக குற்றம்சாட்டப்பட்டு, ராஜ்குந்த்ரா கைது செய்யப்பட்டார். இதனால் சிறையில் இருந்து வெளியே வந்த பிறகும் வெளியில் தலை காட்டாமல் இருந்தார் ராஜ்குந்த்ரா.

தவறான கருத்தை பரப்ப வேண்டாம்
கணவர் கைது செய்யப்பட்டதும் ஷில்பா ஷெட்டியும் வெளியில் தலைகாட்டாமல் இருந்தார். சிறிது நாட்களிலேயே, எத்தனை நாட்களுக்கு இப்படியே இருக்க முடியும். அனைத்தையும் எதிர்கொள்வோம் என முடிவு செய்த ஷில்பா, சோஷியல் மீடியாக்களில் பதிவுகள் போட துவங்கினார். தனது கணவரின் கைது பற்றி அவர் வெளியிட்ட போஸ்டில், நான் இந்த விவகாரத்தில் இதுவரை எந்த கருத்தும் வெளியிடவில்லை. விசாரணை நடக்கிறது. போலீசுக்கு நான் முழு ஒத்துழைப்பு அளிப்பேன். சட்டம் முடிவு செய்யும். அதனால் யாரும் என் கணவர் பற்றி தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் என பதிவிட்டுள்ளார்.

இயல்பு நிலைக்கு திரும்பிய ஷில்பா
தொடர்ந்து டிவி ரியாலிட்டி ஷோ ஷுட்டிங் போன்றவற்றிலும் கலந்து கொள்ள துவங்கினார். சோஷியல் மீடியாக்களிலும் முன்பு இருந்ததை போலவே ஆக்டிவாக, தனது ஃபோட்டோஷுட் ஃபோட்டோக்களை பதிவிட துவங்கினார். கடைசியாக நவம்பர் 1 ம் தேதி ஆசனங்களை விளக்கும் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார்.

வீடியோக்களை பகிர்ந்த ராஜ்குந்த்ரா
பொதுவாக ராஜ் குந்த்ரா சோஷியல் மீடியாக்களில் செம ஆக்டிவாக இருக்கக் கூடியவர். தனது மனைவியுடனான வீடியோக்களை இவர் தொடர்ந்து வெளியிட்டு வந்தார். இதனால் இவரை பின் தொடர்ந்தவர்களும் அதிகம். இவர் பகிரும் வீடியோக்கள் பலவும் வைரலாகி உள்ளன. ஆனால் சிறைக்கு சென்று வந்த பிறகு சோஷியல் மீடியா பக்கமோ, வெளியிலோ தலை காட்டாமல் இருந்தார் ராஜ்குந்த்ரா.

ராஜ்குந்த்ராவை காணவில்லையே
ஷில்பா ஷெட்டி தான் தான் விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி, கர்வா செளத் கொண்டாடிய வீடியோக்களை சோஷியல் மீடியாக்களில் பகிர்ந்து வந்தார். அந்த வீடியோக்களிலும் ஷில்பா மற்றும் அவர்களின் குழந்தைகள் தான் இருந்தனர். ராஜ் குந்த்ரா இல்லை. தனது ஃபோட்டோக்களை சோஷியல் மீடியாக்களில் வெளி வருவதை கூட ராஜ்குந்த்ரா தவிர்த்து வருகிறார் என்பது தெளிவாகி உள்ளது.

கணக்குகளை நீக்கிய ராஜ்குந்த்ரா
இந்நிலையில் சோஷியல் மீடியாக்களில் இருந்து விலக முடிவு செய்துள்ளார் ராஜ்குந்த்ரா. இதனால் தனது ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்குகளை அவர் மூடி உள்ளார். சிறையில் இருந்து வந்து ஒரு மாதத்திற்கு மேல் ஆகும் நிலையில் தற்போது எதற்காக சோஷியல் மீடியா கணக்குகளை ராஜ்குந்த்ரா அகற்றி உள்ளார் என பலரும் குழப்பமடைந்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











