ஆபாச படங்களுக்காகதான் ஹாட்ஷாட் ஆப்பை உருவாக்கினார்.. ராஜ் குந்த்ராவின் பார்ட்னர் வாக்குமூலம்!

மும்பை: ஆபாச படங்களுக்காகதான் ஹாட் ஷாட் ஆப்பை ராஜ் குந்த்ரா உருவாக்கியதாக அவரது பிஸ்னஸ் பார்ட்னரான சவுராப் குஷ்வாகா வாக்குமூலம் அளித்துள்ளார்.

பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை ஷில்பா ஷெட்டி. 40 வயதான போதும் தொடர்ந்து படங்கள் சின்னத்திரை நிகழ்ச்சிகள் என பிஸியாக இருந்து வருகிறார்.

இந்தியில் முன்னணி நடிகர்களுடன் எராளமான படங்களில் நடித்துள்ள ஷில்பா ஷெட்டி, தமிழில் விஜய்யின் குஷி படத்திலும் நடித்துள்ளார். குஷி படத்தில் மேக்கோரீனா என்ற பாடலுக்கு நடனமாடினார் ஷில்பா ஷெட்டி.

ராஜ் குந்தராவுடன் திருமணம்

ராஜ் குந்தராவுடன் திருமணம்

இதனால் தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் பிரபலமானார்.

நடிகை ஷில்பா ஷெட்டி கடந்த 2019ஆம் ஆண்டு தொழில் அதிபர் ராஜ் குந்த்ராவை திருமணம் செய்தார். இவர்களுக்கு ஒரு ஆண் ஒரு பெண் என இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் ஆபாச படங்களை தயாரித்து வெளியிட்ட வழக்கில் கடந்த ஜூலை மாதம் 19 ஆம் தேதி தொழில் அதிபர் ராஜ் குந்த்ரா மும்பை போலீசாரால் திடீரென கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட ராஜ் குந்த்ரா

கைது செய்யப்பட்ட ராஜ் குந்த்ரா

கடந்த பிப்ரவரி மாதமே அவருக்கு எதிராக புகார் அளிக்கப்பட்ட நிலையில் போதிய ஆதாரத்திற்காக காத்திருந்தது மும்பை போலீஸ். இந்நிலையில் ஆதாரங்களுடன் ராஜ் குந்த்ராவை போலீசார் கைது செய்தனர்.

இதனை தொடர்ந்து ராஜ் குந்த்ரா தனது பார்ட்னர்களுடன் ஆபாச படம் தொடர்பாக பேசிய வாட்ஸ் அப் உரையாடல்கள்
உள்ளிட்ட ஆதாரங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

பிஸ்னஸ் பார்ட்னர் வாக்குமூலம்

பிஸ்னஸ் பார்ட்னர் வாக்குமூலம்

அவரது அலுவலகத்தில் இருந்தும் பல ஆபாச பட சிடிக்கள் கைப்பற்றப்பட்டன. ராஜ் குந்த்ராவுக்கு எதிரான 1400 பக்க குற்றப்பத்திரிகையை போலீஸார் மும்பை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். அதன்படி ராஜ்குந்த்ராவின் பார்ட்னரான சவுராப் குஷ்வாகா வாக்குமூலமும் சேர்க்கப்பட்டுள்ளது.

ஆபாச படங்களுக்காகதான் ஹாட்ஷாட்

ஆபாச படங்களுக்காகதான் ஹாட்ஷாட்

அதன்படி ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா ஆபாச படங்களுக்காகதான் ஹாட்ஷாட் ஆப்பை உருவாக்கினார் என தெரிவித்துள்ளார். மேலும் குந்த்ரா மற்றும் நிறுவனத்தின் தொழில்நுட்ப தலைவர் ரியான் தோர்பே நிகழ்ச்சியைக் கையாண்டதால் அதன் செயல்பாடுகள் குறித்து தனக்கு தெரியாது என்றும் கூறியுள்ளார்.

ஆர்ம்ஸ்ப்ரைம் நிறுவன அறிக்கை

ஆர்ம்ஸ்ப்ரைம் நிறுவன அறிக்கை

இதனிடையே தடயவியல் தணிக்கையின் போது மீட்டெடுக்கப்பட்ட மெயில் ஒன்று, குந்த்ரா மற்றும் குஷ்வாகா இடையேயான மின்னஞ்சலில், ஆர்ம்ப்ஸ்ப்ரைம் நிறுவனத்தின் கடன்களை தள்ளுபடி செய்வதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆர்ம்ஸ்ப்ரைம் நிறுவனத்தின் ஆடிட்டிங் அறிக்கை பேலன்ஸ் ஷீட்டில் மார்ச் 31, 2019 நிலவரப்படி, குந்த்ராவுக்கு செலுத்த வேண்டிய 17.9 லட்சம் ரூபாய் நிலுவையில் இருப்பதும் தெரியவந்துள்ளது.

வருமானத்தில் பண மோசடி

வருமானத்தில் பண மோசடி

மேலும் இதன் மூலம் குந்த்ரா ஆர்ம்ஸ்ப்ரைமில் ஒரு இயக்குநராக இருப்பதும் தெரியவந்துள்ளதாக குற்றப்பத்திரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் காவல்துறை தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையில், ஹாட்ஷாட்டிலிருந்து பெறப்பட்ட வருமானத்தில் மோசடி நடந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆபாச படம் எடுத்தது தெரியாது

ஆபாச படம் எடுத்தது தெரியாது

இதனிடையே ராஜ் குந்த்ராவின் மனைவியும் நடிகையுமான ஷில்பா ஷெட்டியின் வாக்குமூலத்தையும் போலீஸார் பதிவு செய்துள்ளனர். அந்த வாக்குமூலத்தில், தான் வேலையில் மிகவும் பிஸியாக இருந்ததால் தனது கணவர் ஆபாசப் படம் எடுத்து வந்தது தனக்குத் தெரியாது என்று ஷில்பா ஷெட்டி கூறியதாக போலீஸார் குறிப்பிட்டுள்ளனர்.

கணவரை பிரியும் முடிவில் ஷில்பா

கணவரை பிரியும் முடிவில் ஷில்பா

மேலும் ராஜ் குந்த்ராவின் 'ஹாட்ஷாட்ஸ்' மற்றும் 'பாலிஃபேம்' உள்ளிட்ட செயலிகள் குறித்தும் தனக்குத் தெரியாது என்று ஷில்பா ஷெட்டி கூறியுள்ளார். தனது கணவர் ஆபாச படம் தயாரித்து கைது செய்யப்பட்டதை தொடர்ந்து அவரை பிரியும் முடிவில் இருப்பதாக தகவல் வெளியானது. குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு ஷில்பா ஷெட்டி தனது கணவரை பிரிய உள்ளதாக தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X