கத்ரினாவுடன் துருக்கிக்கு பறக்கும் சல்மான் கான்...எதற்கு தெரியுமா?
பாலிவுட் நடிகர் சல்மான் கான், நடிகை கத்ரீனா கைஃபுடன் அடுத்த மாதம் துருக்கி செல்ல உள்ளார். டைகர் 3 படத்தின் சூட்டிங் அடுத்த மாதம் துருக்கியில் துவங்க உள்ளது. இதற்காக தான் இருவரும் துருக்கி செல்கிறார்கள்.

முதலில் இப்படத்தை மத்திய கிழக்கு பகுதியில் எடுக்க முடிவு செய்தார்கள். ஆனால் அது முடியாமல் போனதால் திட்டத்தை மாற்றி உள்ளனர் . அதிகரித்து வரும் கொரோனா பரவல் தான் இதற்கு காரணம்.
முதல்கட்ட படப்பிடிப்பை துருக்கியிலும், பிறகு ஐக்கிய அரபு நாடுகளிலும் நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது. மனீஸ் சர்மா டைரக்ட் செய்யும் இந்த படத்தை, ஆதித்யா சோப்ரா தயாரிக்கிறார்.
இந்த தகவல் ஒரு புறம் இருந்தாலும் மற்றொரு புறம், டைகர் 3 இன்னும் இறுதி செய்யப்படவில்லை என்ற தகவலும் வெளியாகி உள்ளது. யாஸ்ராஜ் பிலிம்ஸ் தான் புதுமுகங்களை வைத்து டைகர் ஜிந்தா ஹை படத்தையும், அதற்கு பிறகு ஏக் தா டைகர் படத்தையும் எடுக்க திட்டமிட்டுள்ள தகவலும் வெளியாகி உள்ளது.


Click it and Unblock the Notifications











