Don't Miss!
- Sports
அடுத்த விக்கெட்டும் காலி.. ஆஸி,டெஸ்ட் தொடரில் இந்தியாவுக்கு பெரும் அடி.. என்ன செய்யப்போகிறார் ரோகித்
- Lifestyle
உங்களுக்கு இந்த கலர்ல சிறுநீர் வருதா? அது புற்றுநோயோட அறிகுறியா கூட இருக்கலாமாம்...ஜாக்கிரதை!
- News
செயற்கை வைரங்களை உருவாக்க புதிய திட்டம்.. சுங்க வரியும் குறைக்கப்படும்.. நிர்மலா சீதாராமன் அறிவிப்பு
- Finance
இயற்கை விவசாயத்தினை மேம்படுத்த பல திட்டங்கள்.. விவசாய ஸ்டார்ட்அப்-களுக்கு சலுகை அளிக்க திட்டம்!
- Technology
மலிவு விலையில் 28 நாட்கள் வேலிடிட்டி உடன் புதிய திட்டத்தை அறிமுகம் செய்து அதிரடி காட்டிய Vodafone Idea!
- Automobiles
இந்த மாதிரி டபுள்-டக்கர் பேருந்து எல்லாம் வந்தா நம்ம சென்னை வேற லெவல் ஆயிடும்!! அதுவும் எலக்ட்ரிக் தரத்தில்...
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
சண்டைக்கு தயாராகும் கத்ரீனா... உற்சாகத்தில் சல்மான்கான் ரசிகர்கள்.
மும்பை : ஹிந்தியில் நம்பர் ஒன் ஹீரோவாக இருப்பவர் சல்மான்கான். பல வெற்றிப் படங்களைத் தந்து இன்றளவும் வசூல் மன்னனாக திகழ்ந்து வருபவர்.
சல்மான் கான் ஹிந்தியில் மட்டுமில்லாமல் மற்ற மாநிலங்களிலும் பெருவாரியான ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளார்.
நடிகை கத்ரீனா கைஃப் சில காலம் முன்பு வரை ஹிந்தி பட உலகில் கோலோச்சிய கதாநாயகிகளில் ஒருவராக கொடிகட்டி பறந்தார். சல்மான்கானுடன் பல வெற்றிப் படங்களில் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார்.
சல்மான் கான் மற்றும் கத்ரீனா கைஃப் சேர்ந்து நடிக்கப் போகும் படத்தை பற்றி அறிவிப்பு ஒன்று வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்திய உள்ளது.
மாஸ் நடிகருடன் ஜோடி சேர மல்லுக்கட்டும் இரு நடிகைகள்.. சான்ஸ் கிடைக்கப் போவது யாருக்கு?

பிக் பாஸ்
சல்மான் கான் திரைப்படங்களில் நடிப்பது மட்டும் இல்லாமல் பலவிதமான ரியாலிட்டி ஷோ தொகுத்து வழங்குகிறார். அதில் மிக முக்கியமானது ஹிந்தி பிக் பாஸ். தற்போது அனைத்து மொழிகளிலும் பிக்பாஸ் நிகழ்ச்சி வெற்றிகரமாக நடந்து வருகிறது. இதற்கெல்லாம் முன்னோடியாக சல்மான் கான் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் இருக்கிறது. ஹிந்தி பிக் பாஸ் 15 வது சீசன் கடந்து வெற்றிகரமாக நடந்து வருகிறது.

சல்மான் கான் - கத்ரீனா கைப் காதல் கதை
கத்ரீனா கைஃப் சல்மான்கானுடன் ஜோடி சேர்ந்து நடிக்க ஆரம்பித்த சில காலத்திலேயே இருவருக்கும் காதல் மலர்ந்து விட்டது எனும் கிசுகிசு பாலிவுட்டில் பரவலாக வலம் வந்தது. அதை ஊர்ஜிதம் செய்வது போல சில நிகழ்வுகளும் அந்த சமயத்தில் நடந்தேறியது. வழக்கம்போல மீடியாவில் அவர்கள் அதை மறுத்தார்கள். சல்மான்கானுடன் எந்த ஒரு நடிகை நடித்தாலும் அவரோடு சேர்த்து கிசுகிசுக்கப்படுவது ஒரு தொடர் நிகழ்வாக இருந்து வருகிறது.

YRF- 50 வருட பாரம்பரியம்
யாஷ் ராஜ் பிலிம்ஸ் (YRF) பட நிறுவனம் ஆதித்யா சோப்ரா வால் 1970 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. பல முன்னணி ஹீரோக்களுடன் பல வெற்றி படங்களை தயாரித்து தமக்கென ஒரு முத்திரையை படித்தது யாஷ் ராஜ் பிலிம்ஸ். ஐம்பது வருடம் தாண்டியும் மிகவும் வெற்றிகரமாக தொடரும் சில பட நிறுவனங்களில் முதன்மையாக இருக்கிறது. சல்மான் கான் நடிக்கும் புதிய படத்தை இந்நிறுவனம் தயாரிக்கிறது.

டைகர் – 3
சல்மான்கான் மற்றும் கத்ரீனா கைஃப் ஜோடியாக நடித்து மாபெரும் வெற்றி பெற்ற டைகர் படத்தின் மூன்றாம் பாகம் ரிலீஸ் தேதியின் அறிவிப்பு வீடியோவை சல்மான்கான் மற்றும் கத்ரீனா கைப் தங்கள் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் பதிவிட்டுள்ளனர். டைகர் 3 படம் 2023 ஏப்ரல் 21 ஆம் தேதி வெளியாகும் என்ற தகவல் சல்மான்கான் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த அறிவிப்பு சமூக வலைத்தளங்களில் டிரண்ட் ஆகி வருகிறது.கத்ரீனா பல பேருடன் சண்டை போடுவதும், கடைசியில் சல்மான்கான் ஓரமாக உறங்கிக் கொண்டு இருப்பதும் அவரை தட்டி எழுப்பும் போது பிஜிஎம் பிரம்மாண்டமாக கொடுத்து, ரசிகர்களைப் பார்த்து விரைவில் நாங்கள் வருகிறோம் என்று அவர் சொல்ல, சல்மான் ரசிகர்களையும் கத்ரீனா ரசிகர்களையும் பரவசப்படுத்தும் ஒரு நிகழ்வாக இது காணப்படுகிறது.