Don't Miss!
- News
கட்டடம் இடிந்து இளம்பெண் பலியான விவகாரம்.. இடிக்கும் பணியை உடனே நிறுத்த சென்னை மாநகராட்சி ஆர்டர்!
- Finance
Budget 2023:உணவு, உரம், எரிபொருள் மீதான ,மானியங்கள் குறைக்கப்படலாம்.. அப்படி நடந்தால் என்னவாகும்?
- Sports
ஆடுகளத்தை தவறாக கணித்தோம்.. கடைசி ஓவர் எல்லாத்தையும் மாற்றிவிட்டது.. ஹர்திக் பாண்டியா பேச்சு
- Lifestyle
உங்களுக்கு நரை முடி மற்றும் வறண்ட முடி இருக்கா? அப்ப இந்த டிப்ஸ்கள ஃபாலோ பண்ணுங்க...!
- Automobiles
முக்கியமான சாலையை கிழித்து கொண்டு சென்ற விசித்திரமான வாகனம்!! பதற்றத்தில் வழிவிட்ட வாகன ஓட்டிகள்...
- Technology
நம்பமுடியாத அம்சங்களுடன் மலிவு விலையில் இறங்கிய பிரபல நிறுவனத்தின் ஸ்மார்ட்வாட்ச்.!
- Travel
காலம் காலமாக இஸ்லாமியர்கள் வழிபடும் சிவன் கோவில் – மனமுருகி வேண்டினால் கேட்டது கிடைக்குமாம்!
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
அய்யோ பாவம்...கத்ரினா கைஃப் திருமணத்தால் சல்மான் கானுக்கு இப்படி ஒரு நிலைமையா ?
மும்பை : கடந்த சில நாட்களாகவே பாலிவுட்டின் ஹாட் டாப்பிக்காக இருந்து வருவது கத்ரினா கைஃப், விக்கி கெளசல் திருமணம் தான். கடந்த ஒரு மாதமாகவே கத்ரினா கைஃப் தனது திருமண வேலைகளில் பிஸியாக இருந்து வருகிறார்.
கத்ரினா கைஃப் தற்போது சல்மான் கானுடன் டைகர் 3 படத்தில் நடித்து வந்தார். ஆனால் கத்ரினா கல்யாண வேலைகளில் பிஸியானதால், டைகர் 3 படத்தின் வேலைகள் பல நாட்களாக நிறுத்தப்பட்டிருந்ததாம்.
தாமதமான
படங்களின்
ஷூட்டிங்...
நடிகர்
சூர்யா
எடுத்த
வேற
லெவல்
முடிவு!

தனியாக நடிக்கும் சல்மான்
மும்பையில் முழுவீச்சில் டைகர் 3 படத்தின் வேலைகள் நடத்தப்பட்டு வந்தது. செப்டம்பர் மாத இறுதியில் இருந்து அந்தேரியில் உள்ள யாஷ்ராஜ் ஸ்டூடியோசில் நடந்து வரும் ஷுட்டிங்கில் சல்மான்கான் பங்கேற்று வருகிறார். ஆனால் தொடர்ந்து ஷுட்டிங்கை நிறுத்தி வைக்க முடியாது என்பதால், கத்ரினா கைஃப் இல்லாமல் தனி ஆளாக ஷுட்டிங்கில் பங்கேற்று வருகிறார் சல்மான் கான்.

புயலால் பாதிக்கப்பட்ட செட்
புயலால் பாதிக்கப்பட்ட டைகர் 3 படத்தின் செட்டை மீண்டும் சீரமைக்கும் பணி வேகமாக நடந்து வருகிறது. அது ஒருபுறம் நடந்தாலும் மும்பையில் பிரம்மாண்ட பைக் சேசிங் சீனும் மற்றொரு புறம் எடுக்கப்பட்டு வருகிறது. புதிதாக அமைக்கப்பட்டு வரும் செட்டில் தான் பல முக்கிய ஆக்ஷன் காட்சிகள் எடுக்கப்பட உள்ளதாம்.

ரா ஏஜன்டாக சல்மான் கான்
டைகர் 3 படத்தில் அவினாஷ் சிங் ரத்தோர் என்ற ரா ஏஜன்ட் கேரக்டரில் தான் சல்மான் கான் நடிக்கிறார். ஜோயா ஹுமாமி கேரக்டரில் தான் கத்ரினா கைஃப் நடிக்கிறார். வில்லன்களால் கடத்தப்பட்ட கத்ரினாவை காப்பாற்றும் சீனில் தான் சல்மான் கான் நடிக்க வேண்டும்.

நெருக்கடியில் சல்மான் கான்
ஆனால் கத்ரினா இல்லாததால், சல்மான் கான் வில்லன்கள் கூட்டத்தை பைக்கில் துரத்திச் செல்லும் சீனை முதலில் எடுத்து வருகிறாராம் டைரக்டர். விரைவில் கத்ரினா ஷுட்டிங்கில் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அடுத்த சில வாரங்கள் சல்மான் கான் ஒரே நேரத்தில் பல ஷுட்டிங்கில் பங்கேற்க வேண்டிய நெருக்கடிக்கு ஆளாகி உள்ளாராம்.

அடுத்தடுத்த ஷுட்டிங்
நேற்று ரியாத்தில் Da Bangg ஷோவின் ஷுட்டிங்கை முடித்து திரும்பி உள்ள சல்மான் கான். அடுத்தபடியாக பிக்பாஸ் வார இறுதி எபிசோடிற்கான ஷுட்டிங்கில் பங்கேற்க உள்ளார். கிறிஸ்துமஸ் வரை தொடர்ந்து டைகர் 3 படத்தின் ஷுட்டிங்கிலும் அவர் பங்கேற்க உள்ளார். கத்ரினா வந்த பிறகே அவர் நடிக்கும் சீன்கள் எடுக்கப்பட உள்ளதாம்.